அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட 3 பேரையும் ஒரே நேரத்தில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரிடம் 2 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் பெற்றுத்தர ரூ.100 கோடி வரை லஞ்சம் பெற்று மோசடி செய்ததாக, கடந்த செப்டம்பரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

anbil mahesh poyyamozhi

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் அரசகுமார் உள்ளிட்டோர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த வழக்கில் ஐந்தாவது நபராக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அன்பில் மகேஷ், நீதிமன்ற உத்தரவின்பேரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலீசார் அவரை கஸ்டடியில் எடுத்து விசாரித்த நிலையில், தற்போது டிசம்பர் 2 வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

தற்போது அன்பில் மகேஷ் பொய்யாமொழியை போலீஸ் காவல் விசாரணைக்கு அனுமதிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார், கார் டிரைவர் சரவணன் ஆகியோரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

3 பேரையும் ஒரே நேரத்தில் காவலில் எடுத்து விசாரிக்கும் வகையில் நீதிமன்றத்தில் போலீசார் மனு அளித்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையே, அன்பில் மகேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து அவர், சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+