கார்த்திகை தீபம்! விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை! சிறுபான்மையினர் வாக்குகளுக்கு நியாயம் செய்வாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவ.24ம் தேதி, திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்பட இருக்கிறது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் இந்து அமைப்பு கோரும் பகுதியில் தீபம் ஏற்ற வாய்ப்பு உருவாக்கி கொடுத்து அவர்கள் பக்கம் நிற்பாரா? அல்லது திமுக செய்ததை போல, சிறுபான்மையினர் பக்கம் நிற்பாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

கடந்த ஆட்சியில், இந்து அமைப்புகள் கோரிய இடத்தில் தீபம் ஏற்ற அனுமதியில்லை என்பதில் திமுக அரசு உறுதியாக இருந்தது. ஆனால், இந்துத்துவா அமைப்பை சேர்ந்த ராம ரவிக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையை அணுகினார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ரவிக்குமார் கேட்ட இடத்தில் தீபம் ஏற்றிக்கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

Tiruparankundram

திமுக அரசின் நிலைப்பாடு

நீதிமன்ற உத்தரவே இருந்தாலும்.. திமுக அரசு சர்ச்சைக்குரிய இடத்தில் தீபம் ஏற்றமாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தது. மேல் முறையீடு, நீதிமன்ற அவமதிப்பு என அனைத்து பிரச்சனைகளையும் திமுக அரசு எதிர்கொண்டிருந்தது. இப்போது இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில், இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையின் முடிவில் எங்கு தீபம் ஏற்றுவது என்பது குறித்த உத்தரவு வெளியாகும். அப்போது தவெக அரசு என்ன செய்யப்போகிறது?

இந்து வாக்கு வங்கி

இந்து சமூக எதிரியில்லை என்று காட்டிக்கொள்வதற்காக விஜய், கோயில் கோயிலாக சுற்றி வந்திருக்கிறார். தவெகவின் முதல் மாநாட்டுக்கு முன்னர் அவர் ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்று வழிபட்டிருந்தார். அதை தொடர்ந்து தேர்தல் களத்திற்கு வந்தபோது.. திருச்சியின் பச்சைநாச்சியம்மன் கோயில், வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், மீண்டும் ஷீரடி, முதலமைச்சரானதற்கு பின்னர்.. கர்நாடகாவின் கொல்லூர் மூகாம்பிகை கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருப்பூர் மூலனூர் வஞ்சியம்மன் கோயில், கேரளாவின் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு சென்றிருந்தார்.

சிறுபான்மையினரின் நம்பிக்கை

இதெல்லாம் இந்து ஓட்டு வங்கிக்காக அவர் செய்த விசிட். இதுபோக இடையில் வேல் தூக்கியிருந்தார். நீதிமன்ற தீர்ப்பு இந்து அமைப்புகளுக்கு சாதகமாக வந்தால், இந்துக்களின் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ள தீபம் ஏற்றுவதை அனுமதிக்கப்போகிறாரா? அப்படி அனுமதித்தால் சிறுபான்மையினர் வாக்காளர்களின் நம்பிக்கை என்ன ஆவது?

விஜய் என்ன செய்யப்போகிறார்

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவிடமிருந்து கணிசமான அளவில் சிறுபான்மையினர் வாக்குகள் விஜய்க்கு போயிருக்கின்றன. தன்னையே நம்பி வந்திருக்கும் சிறுபான்மை சமூகத்தினரை கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்துக்கொள்ளுங்கள் என்று கூறி.. தீபம் ஏற்றப்படுவதை வேடிக்கை பார்க்கப்போகிறாரா? அல்லது திமுக போல எதிர்க்கப்போகிறாரா? என்கிற கேள்வியை பல்வேறு தரப்பினரும் எழுப்பியிருக்கின்றனர்.

மொத்தத்தில் அவர் தீபம் ஏற்றுவதற்காக சாப்ட் இந்துத்துவா கொள்கையை விஜய் கடைபிடிக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இதற்கான அவரின் பதில் என்ன என்பது நவ.24ம் தேதி தெரிந்துவிடும்.

கூடுதல் தகவல்கள்

ஆண்டாண்டு காலமாக, மதுரை திருப்பரங்குன்றம் மலையின் மீதுள்ள உச்சிப்பிள்ளையார் பகுதியில் கார்த்திகை தீப திருநாளில் விளக்கேற்றப்பட்டு வருகிறது. ஆனால், மலைமீதுள்ள சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் இருக்கும் கல் தூணில்தான் விளக்கு ஏற்ற வேண்டும் என்று, இந்துத்துவா அமைப்புகள் புதிய பிரச்சனையை கிளப்பியிருக்கின்றன.

மறுபுறம் நீதிமன்றங்களில் இதுபோன்று பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது கடந்த 2019 நவம்பரில் ராமஜென்ம பூமி தொடர்பான வழக்கின் தீர்ப்பு வந்த பிறகு.. வழிபாட்டு உரிமை மற்றும் நில உரிமை தொடர்பாக இதே பேட்டனில், சுமார் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டிருக்கிறது. இதுபோக 18ம் மேற்பட்ட துணை மனுக்களும் தாக்கல் செய்யயப்பட்டிருக்கின்றன. அதில், ஒன்றுதான் இந்த திருப்பரங்குன்றம் தீப தூண் வழக்கு.

இந்து அமைப்புகள் இந்த விஷயங்களை திட்டமிட்டு கிளப்பியிருக்கின்றனர். எனவே, தமிழக அரசு அலர்ட்டாக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எச்சரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+