48 மணி நேரத்தில் விண்வெளியில் நடக்க போகும் சம்பவம்! பூமியை நெருங்கும் 5 சிறுகோள்கள்! மோத வாய்ப்பா?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இன்றும் நாளையும் என 48 மணி நேர இடைவெளிக்குள் பூமிக்கு நெருக்கமாக 5 சிறுகோள்கள் வந்து செல்ல உள்ளன. 10 மீட்டர் முதல் 120 மீட்டர் வரை அளவுள்ள இந்த சிறுகோள்களின் பாதையை விஞ்ஞானிகள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்கள். இவை புவியின் வளிமண்டலத்திற்குள் நுழைய வாய்ப்பு உள்ளதா? எவ்வளவு தூரத்தில் பூமியை கடந்து செல்லும்? என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

பூமிக்கு மிக அருகில் ஐந்து சிறு கோள்கள் வந்து செல்ல உள்ளன. 2026 VA11, 2026 TB84, 2026 VD6, 2018 NE1 and 2007 WK3 என இந்த விண்கற்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இன்று நவம்பர் 19 முதல் நாளை 20 ஆம் தேதிக்குள் இந்த விண்கற்கள் பூமியை நெருக்கமாக கடந்து செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

Five asteroids expected to make close approaches to Earth between November 19 and 20

பூமியை நெருங்கும் 5 சிறுகோள்கள்

விண்கற்கள் செல்லும் பாதையில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா? பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைய வாய்ப்பு இருக்கிறதா? என நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்த 5 விண்கற்களில் 2026 VA11 என்ற விண்கல்தான் பூமிக்கு மிக நெருக்கமாக வர வாய்ப்பு உள்ளது. பூமியில் இருந்து 33.5 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இது கடந்து செல்லும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான சராசரி தூரத்தைப் போல சுமார் 8.72 மடங்குக்கு இணையானதாகும். இந்த சிறுகோள் 10 முதல் 22 மீட்டர் அகலமானது என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு நொடிக்கு 8.9 கிலோ மீட்டர் வேகத்தில் அதாவது மணிக்கு 32,040 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த விண்கற்கள் பூமியை கடந்து செல்ல உள்ளது.

மணிக்கு 47,880 கிலோ மீட்டர் வேகத்தில்

இந்த விண்கற்கள் கூட்டத்திலேயே மிகவும் பெரியது என்று மதிப்பிடப்பட்டுள்ள 2026 TB84 விண்கல் இன்று பூமியை மிக நெருக்கமாக வந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோராயமாக பூமியில் இருந்து 46 லட்சம் கிலோ மீட்ட்ர் தொலைவில் இது கடந்து செல்ல உள்ளது. இது 50 முதல் 110 மீட்டர் அளவில் பெரியதாகும். இந்த விண்கற்களின் சுற்றுப்பாதை மற்றும் இயற்பியல் பண்புகளை கண்காணிப்பதன் மூலம் பூமிக்கு அருகே கடந்து செல்லக்கூடிய விண்கற்கள் கூட்டத்தின் தொகுப்புகள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மீதமுள்ள மூன்று விண்கற்களும் 20 ஆம் தேதிக்குள் பூமியை கடந்து செல்ல உள்ளது. 2018 NE1 விண்கல் நவம்பர் 19 (இன்று) தோராயமாக 63.8 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பூமியை நெருக்கமாக கடந்து செல்லக்கூடிய விண்கற்களிலேயே அதிவேகத்தில் செல்லக்கூடிய விண்கல் இதுவேயாகும். இதன் வேகம் மணிக்கு 47,880 கிலோ மீட்டர் ஆகும். வினாடிக்கு 13.3 கிலோ மீட்டர் வேகத்தில் இது கடந்து செல்ல உள்ளது.

28 மீட்டர் அளவுக்கு இருக்கும்

மற்றொரு விண்கல்லான 2007 WK3 பூமியில் இருந்து 5.47 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்ல உள்ளது. இந்த விண்கல் 14 முதல் 30 மீட்டர் அளவுக்கு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடைசி மற்றும் 5-வது விண்கல் 2026 VD6 20 ஆம் தேதி பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்ல உள்ளது. இந்த விண்கல் பூமியில் இருந்து 4.01 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்லும் என்றும் இதன் அளவு 12 முதல் 28 மீட்டர் அளவுக்கு இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+