பாட்டிக்கு கூட பாதுகாப்பில்லையா? வீட்டிலிருந்த கீதா.. பாட்டியைப் பார்த்ததும் அலறிய பேரன்! என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த 54 வயது பெண்ணை கொடூரமாகக் கொலை செய்து அவர் அணிந்திருந்த 10 சவரன் தங்க நகைகள் மற்றும் பீரோவில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ராணிப்பேட்டை மாவட்டம் தென்கடப்பந்தாங்கல் வி.ஐ.பி சிட்டியில் வசித்து வந்தவர் கீதா (54) இவர் தனியார் ஷூ தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார் இவரது கணவர் சென்னையில் ஓட்டுநராக வேலை செய்து வரும் நிலையில் கீதா தனது மூத்த மகளுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று சொந்த வேலை காரணமாக கீதா வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அவரது பேரன் சக்தி(14) வீட்டின் கதவு திறந்திருப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.

Walajapet crime

அப்போது கழுத்து இறுக்கப்பட்டு பலத்த காயங்களுடன் பாட்டி கீதா உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த சக்தி கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த பொதுமக்கள், கீதா கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு உடனடியாக வாலாஜாபேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் தலைமையிலான போலிசார் கொண்ட குழு தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கீதாவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கீதா அணிந்திருந்த 10 சவரன் தங்க நகைகள் மற்றும் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 10 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து மகள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பெண்ணைக் கொலை செய்துவிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை சரமாரியாக தாக்கி கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்டு நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியை மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+