கோவை, தென்காசியை தொடர்ந்து.. ராணிப்பேட்டை நூலகத்திலும் 2,401 போலி பதிப்பக நூல்கள் கண்டுபிடிப்பு!

Subscribe to Oneindia Tamil

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மைய நூலகத்தில் சுமார் ரூ.23.57லட்சம் மதிப்பிலான 2,401 போலி பதிப்பக புத்தகங்கள் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் கோவை பெரியார் அறிவுலகத்தில் போலி பதிப்பகம் மூலமாக ஏஐ மூலம் எழுதப்பட்ட நூல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்ததாக தென்காசி மாவட்ட நூலகத்திலும் போலி நூல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Book Scam in Ranipet

அந்த அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்ட மைய நூலகத்திற்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புத்தகங்கள் கொண்டு வரப்பட்டுள்ள புத்தகங்களை நூலகப் பணியாளர்கள் புத்தகங்களை ஆய்வு செய்தனர். அவற்றில் குறிப்பிட்ட இரண்டு பதிப்பகங்களின் பெயர்களில் போலியான புத்தகங்கள் இருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்படி அகல் விளக்கு பதிப்பகத்தின் பெயரில் 2,302 புத்தகங்கள் ரூ.22.53 லட்சம் மதிப்பிலும், பீனிக்ஸ் பதிப்பகத்தின் பெயரில் 99 புத்தகங்கள் ரூ.1.04 லட்சம் மதிப்பிலும் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் மொத்தம் 2,401 புத்தகங்கள் ரூ.23.57 லட்சம் மதிப்பிலான போலி பதிப்பகப் புத்தகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதையடுத்து அரசு நூலகத்திற்கு கொள்முதல் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட புத்தகங்களில் இவ்வளவு பெரிய அளவில் போலி பதிப்பகப் புத்தகங்கள் கண்டறியப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்தப் புத்தகங்கள் யாருடைய பரிந்துரையின் அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்டன? அவற்றை நூலகத்திற்கு வழங்கியது யார்?

புத்தகங்களின் தரம் மற்றும் பதிப்பக விவரங்கள் முறையாகச் சரிபார்க்கப்பட்டதா? என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன. எனவே இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நூலகத்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி போலி புத்தகங்கள் நூலகத்திற்கு வந்ததற்கான காரணத்தையும், இதற்கு பின்னால் இருப்பவர்கள் குறித்தும் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+