உலக தங்க மார்க்கெட்டே கதறப்போகுது.. புதின் போட்ட முக்கிய உத்தரவு.. தங்கத்தை அஸ்திரமாக மாற்றிய ரஷ்யா
மாஸ்கோ: ஈரான், உக்ரைன் போர் சூழலுக்கு மத்தியில், ரஷ்யப் பொருளாதாரம் பெரும் சவால்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, வரி ஏய்ப்பு மற்றும் நிழல் உலகப் பொருளாதாரம் (Shadow Economy) வளர்வதைத் தடுக்க அதிபர் விளாடிமிர் புதின் இப்போது ஒரு அதிரடியான 'ஸ்கெட்ச்' ஒன்றை போட்டுள்ளார்.
ரஷ்யாவிலிருந்து ரொக்கப் பணம் மற்றும் தங்கக் கட்டிகளை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய அரசாணைகளில் புதின் கையெழுத்திட்டுள்ளார். அதாவது ரஷ்யா தங்க ஏற்றுமதியை மொத்தமாக நிறுத்தி உள்ளது. ஏப்ரல் 1 மற்றும் மே 1 முதல் அமலுக்கு வரும் இந்த உத்தரவுகள், ரஷ்யப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

பணப் புழக்கத்திற்குத் தடை!
ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரப்படி, கடந்த ஜனவரி 2026-ல் மட்டும் சுமார் 13.2 பில்லியன் டாலர் அளவிலான ரொக்கப் பணம் வங்கி அமைப்பை விட்டு வெளியேறியுள்ளது. வணிக நிறுவனங்கள் மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) மற்றும் இதர வரிகளைத் தவிர்க்க, டிஜிட்டல் பரிவர்த்தனைகளைத் தவிர்த்துவிட்டு ரொக்கப் பரிவர்த்தனைக்கு மாறியதே இதற்கு முக்கியக் காரணம்.
இதைத் தடுக்க, வரும் ஏப்ரல் 1 முதல்:
யூரேசிய பொருளாதார ஒன்றிய (EAEU) நாடுகளுக்கு 1,00,000 டாலருக்கு மேல் மதிப்புள்ள ரூபிள் நோட்டுகளைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சர்வதேச விமான நிலையங்கள் வழியாகச் செல்பவர்களுக்கு மட்டுமே இதில் விதிவிலக்கு அளிக்கப்படும்.
அதுவும், அந்தப் பணம் வங்கிக் கணக்கிலிருந்துதான் எடுக்கப்பட்டது என்பதற்கான முறையான ஆவணங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயம்.
தங்கம் மீது பாயும் கட்டுப்பாடு
பணத்திற்குப் பதிலாக தங்கம் இப்போது சட்டவிரோதப் பரிவர்த்தனைகளுக்கான 'மாற்று கரன்சி'யாக உருவெடுத்துள்ளது. பணமோசடி செய்பவர்கள் தங்கத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவதை முறியடிக்க புதின் அரசு அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்துள்ளது.
வரும் மே 1 முதல்:
தனிநபர்களோ அல்லது தனியார் நிறுவனங்களோ 100 கிராமுக்கு அதிகமான எடையுள்ள தங்கக் கட்டிகளை (Gold Bars) வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்ல முடியாது.
இருப்பினும், வணிக ரீதியான வங்கிகளுக்கு (Commercial Banks) இதில் கட்டுப்பாடு இல்லை.
வ்னுகோவோ (Vnukovo), ஷெரெமெட்டியேவோ (Sheremetyevo) போன்ற குறிப்பிட்ட சர்வதேச விமான நிலையங்கள் வழியாக, மத்திய அசே சேம்பர் (Federal Assay Chamber) அனுமதியுடன் கொண்டு செல்லப்படும் தங்கத்திற்கு மட்டும் அனுமதி உண்டு.
தங்கம் தாறுமாறாக உயரும்
உலகின் மிக முக்கியமான தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான ரஷ்யா, தனது நாட்டின் தங்கத்தை வெளியேற்றத் தடை விதிக்கும்போது, சர்வதேச சந்தையில் தங்கத்தின் வரத்துக் குறைபாடு (Supply Crunch) ஏற்படும். உலகளாவிய வர்த்தக மையங்களுக்குக் கிடைக்க வேண்டிய தங்கத்தின் அளவு குறையும்போது, இயல்பாகவே அதன் தேவை அதிகரித்து விலை உயரத் தொடங்கும்.
குறிப்பாக, கறுப்புப் பணப் புழக்கத்தைத் தடுக்க ரஷ்ய மக்கள் உள்நாட்டிலேயே அதிக அளவில் தங்கத்தைச் சேமிக்கத் தொடங்கினால், உலகச் சந்தையில் புழங்கும் தங்கத்தின் அளவு மேலும் சுருங்கும். இது முதலீட்டாளர்களிடையே ஒருவிதப் பதற்றத்தை உருவாக்கி, சர்வதேச சந்தையில் ஒரு கிராம் தங்கத்தின் விலையை (Spot Price) கணிசமாக உயர்த்த வழிவகுக்கும்.
ஏன் இந்த அதிரடி?
ரஷ்ய நிதியமைச்சகத்தின் துணை அமைச்சர் அலெக்ஸி மொய்சீவ் இது குறித்துக் கூறுகையில், "வெளிநாட்டுச் செலாவணிக்குப் பதிலாகத் தங்கம் இப்போது சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது மூலதனம் நாட்டை விட்டு வெளியேறுவதற்கும், கறுப்புப் பணம் பெருகுவதற்கும் வழிவகுக்கிறது," எனத் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி ரஷ்யா நகர்ந்தாலும், வரி உயர்வு காரணமாகத் தொழில் நிறுவனங்கள் 'நிழல் உலகப் பொருளாதாரத்தை' நோக்கிச் சாய்வதைத் தடுக்கவே புதின் இந்த இரும்புக்கரம் கொண்ட முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த அதிரடி மாற்றங்கள் ரஷ்யாவின் பொருளாதாரத்தைச் சீரமைக்குமா அல்லது கறுப்புச் சந்தையை இன்னும் வேகப்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications