விடாமல் உயர்ந்த தங்கம் விலை..பழசை எக்சேஞ்ச் செய்து புதுசு வாங்க போறீங்களா? இந்த தவறை செய்யாதீங்க
சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்தியாவில் பலரும் தங்கத்தை எக்ஸ்சேஞ்ச் செய்ய தொடங்கி உள்ளனர். அதாவது தங்களிடம் உள்ள பழைய தங்கத்திற்கு மாற்றாக புதிய தங்கம் வாங்க தொடங்கி உள்ளனர்.
உலக தங்க கவுன்சிலின் (WGC) கூற்றுப்படி, இப்போது மொத்த நகை வாங்குதலில் 40-45% பரிவர்த்தனைகள் இந்த எக்சேஞ்ச் வகை பரிவர்த்தனைகள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதற்கு பின் சில சாதகங்கள், பாதகங்கள் உள்ளன.

சாதகங்கள்
1. பழைய நகைகளை கொடுத்துவிட்டு புதிய நகைகள் வாங்குவதன் மூலம் மாடர்ன் டிசைன்களை பெற முடியும்.
2. அதேபோல் இப்போது உள்ள தங்கம் அதிகம் பாலிஷ் செய்யப்பட்டது. அதனால் நல்ல பொலிவாக இருக்கும்.
3. புதிய தங்க நகைகள் தங்கத்தின் எடையை தவிர பெரிதாக வேறு எடை இருக்காது. அரக்கு போன்ற எடை இருக்காது என்பதால் வெயிட் லெஸ் ஆக இருக்கும்.
4. திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு புதிய நகைகளை இதன் மூலம் பயன்படுத்தலாம்.
5. அப்போது ஒரே செயினை பல கிராமில் எடுத்து இருப்பார்கள். அதை இப்போது குறைந்த கிராம் செயினாக எடுத்து மீதம் உள்ள தொகைக்கு வேறு வேறு நகைகள் எடுக்கலாம்.
பாதகங்கள்
1. ஆனால் இதன் மூலம் பல ஆயிரம் டூ லட்சங்களை இழக்க நேரிடலாம். ஏனென்றால் நகை கடைகள் கண்டிப்பாக இதில் லாபம் பார்க்க.. ஏதாவது விதிகளை கொண்டு வந்து உங்களை கொஞ்சம் பணம் கொடுக்க வைப்பார்கள்.
2. பழைய மாடல் நகைகள் என்ன ஆனாலும் வலுவாக இருக்கும். புதிய மாடல்கள் அப்படி இல்லை.
3. பழைய மாடல் எடுக்கும் போது பலர் கல் வைத்து எடுத்திருப்பார்கள். வயதானவர்கள் அந்த காலங்களில் சமயங்களில் கல்லை பற்றி பெரிதாக யோசிக்காமல் எடுத்திருக்கலாம். அந்த கல்லின் எடைக்கு இப்போது மதிப்பு இருக்காது. அதெல்லாம் எக்சேஞ்ச் செய்யும் போது இழப்பாக மாறும்.
4. பழைய மாடல் நகைகள் மீண்டும் எதிர்காலத்தில் டிரெண்டாகலாம். அவசரப்பட வேண்டாம்.
5. சில கடைகளில் எக்சேஞ்ச் மதிப்பு குறைவாக இருக்கும் என்பதால் கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
தங்க தேவை அதிகரிப்பு
இந்தியா கடந்த சில மாதங்களாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது. உலக அளவில் பொருளாதாரம் மிகவும் மோசமாகி வருகிறது. சர்வதேச பொருளாதாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத மோசமான சூழல் நிலவி வருகிறது. பல நாடுகளும் தங்கத்தை இதனால் வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன.
ஏனென்றால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தால் பணத்தின் மதிப்புகள் மோசமாக சரியும். ஆனால் தங்கத்தின் மதிப்பு உயரும். பொருளாதார சரிவுகளில் போது தங்கத்தின் மதிப்பே ஒரு நாட்டை காக்கும். இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியா கடந்த சில மாதங்களாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது.
இந்தியாவின் ரிசர்வ் வங்கி தங்கத்தை வாங்கி குவிப்பதில் தீவிரமாக உள்ளது. தங்கத்தின் கையிருப்பு மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, அதன் தங்கத்தின் மதிப்பு ஒரே வாரத்தில் ரூ.11,986 கோடி உயர்ந்துள்ளது. இந்த உயர்வின் மூலம், ரிசர்வ் வங்கியின் மொத்த தங்க கையிருப்பு மதிப்பு ரூ.6,88,496 கோடியாக உயர்ந்துள்ளது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
டிரம்ப் வந்த பின் பொருளாதார சரிவு நிலவும் இந்த காலகட்டத்தில் ரிசர்வ் வங்கியின் தங்கம் மதிப்பு கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. உலக அளவில் பல மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிக்கும் நிலையில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியும் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது.
பற்றாக்குறை போகும்
அமெரிக்கா இந்தியா இடையிலான வர்த்தக பற்றாக்குறையை போக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அமெரிக்காவிலிருந்து தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் உள்ளிட்ட உயர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா பரிசீலித்து வருகிறது.
வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் (ஏப்ரல் 2024-பிப்ரவரி 2025) இந்தியா 76.37 பில்லியன் டாலர் மதிப்பிலான சரக்குகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது அதே சமயம் $41.62 பில்லியன் பொருட்களை இறக்குமதி செய்தது, இதன் விளைவாக $34.75 பில்லியன் வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டது.
அமெரிக்காவுடனான இருதரப்பு வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான வழிகளில் ஒன்றாக Trade diversification எனப்படும் வர்த்தகப் பல்வகைமை முறையை கையாள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் நகைகளை இறக்குமதி செய்ய உள்ளனர்.
தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் உற்பத்தியில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. இவற்றில் கணிசமான அளவை அமெரிக்காவிலிருந்து இந்தியா எளிதாக பெற முடியும். இதன் மூலம் தங்கம், வெள்ளியின் கையிருப்பு இந்தியாவில் அதிகரிக்கும். நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் (ஏப்ரல் 2024-பிப்ரவரி 2025) இந்தியாவின் தங்கம் மற்றும் வெள்ளி உட்பட விலைமதிப்பற்ற உலோகங்களின் மொத்த இறக்குமதி 74 பில்லியன் டாலர்களைத் தாண்டி உள்ளது.
-
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
தங்கம் விலை தொடர் உயர்வா! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.. கெவின் வார்ஷ் முடிவில் தான் எல்லாமே இருக்கு! -
தங்க நகை வாங்குவோருக்கு 'ரெட் கார்பெட்' வரவேற்பாம்.. குஷியில் வங்கிகள்.. ஏன் தெரியுமா? -
இந்தியாவில் வெள்ளி இறக்குமதி 87% அதிரடி வீழ்ச்சி.. நகை விலை உயர்வு.. இனி சிக்கல் மேல் சிக்கல்! -
ரெண்டு நாள்ல அழுகி போற தக்காளிக்கே மவுசு வரும் போது.. தங்கத்துக்கு வராதா? வாங்கி குவிக்கும் வங்கிகள் -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications