தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 800 ரூபாய் உயர்வு..அடுத்தடுத்து நடக்கும் நம்ப முடியாத ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத உச்சமாக கடந்த அக்டோபர் 17ம் தேதி அன்று ஒரு பவுன் ரூ.97 ஆயிரத்து 600 என்ற நிலையை எட்டியது. இதை பார்த்து அதிர்ந்து போன மக்கள், இனி எப்படி தங்கம் வாங்குவது என்ற யோசிக்க தொடங்கினார்கள். இது ஒருபுறம் எனில், தங்க நகைகக்கடைகளுமே, தங்க வியாபாரம் நடக்காத காரணத்தால் முடங்கின. இந்நிலையில் தங்கம் விலை அதிடிரடியாக குறைந்து வருகிறது. கிட்டத்தட்ட 6300 வரை ஒரு வாரத்தில் குறைந்துள்ளது. ஆனால் அக்டோபர் 25ம் தேதியான இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு 800 ரூபாய் ஏறி உள்ளது.

தங்கம் விலை 70 ஆயிரம் என்கிற நிலையிலேயே நீடித்து வந்த நிலையில், அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் சிக்கல், ரஷ்யா அமெரிக்கா இடையிலாய புவியியல் பதட்டம், சீனா அமெரிக்கா இடையிலேயே வர்த்தக போர் போன்ற காரணங்களால் உலக அளவில் தங்கம் விலை தாறுமாறாக ஏற தொடங்கியது. அதுவும் டிரம்ப், இந்தியாவிற்கு 50 சதவீத வரி விதிக்க தொடங்கியது முதலே தங்கம் விலை இந்தியாவில் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்திற்கு பறக்க தொடங்கியது.

gold rate gold

இதனால் 70 ஆயிரம் ஆக இருந்த தங்கம் விலை ஒரு வாரத்தில் 80 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு படிப்படியாக உயர்ந்து 90 ஆயிரத்தை தொட்டது. இதனால் விரைவில் ஒரு லட்சத்தை தொடும் என்ற அச்சமும் ஏற்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையில் தான் இந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை ஏறிய படியே இருந்தது.

ஒரு கட்டத்தில் ஒரு கிராம் 12 ஆயிரத்தை தாண்டி உச்சம் பெற்றது. அதற்கு அடுத்த நாளே அதாவது, அக்டோபர் 17ம் தேதி அன்று தங்கம் விலை ஒரு சவரன் 97 ஆயிரத்து 600 ரூபாய் என்கிற அளவில் மிகப்பெரிய உயரம் தொட்டது. ஒரு கிராம் 12 200 என்றஆக மாறியது.ஆனால் அடுத் நாளில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 1600 ரூபாய் வரை குறைந்தது. இதனால் ஒரு சவரன் அக்டோபர் 18ம் தேதி நிலவரப்படி 96000 ஆக இருந்தது. அக்டோபர் 19ம் தேதி அன்று விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை..

ஆனால் அக்டோபர் 20ம் தேதியான தீபாவளி அன்று ஒரு கிராமுக்கு 80 ரூபாய் குறைந்ததால், ஒரு சவரன் 95 ஆயிரத்து 360 ஆக குறைந்தது. தீபாவளிக்கு மறுநாள் மட்டும் சற்று அதிகமாகி பழைய படி 96000 ஆக விற்பனை ஆனது. ஆனால் அக்டோபர் 22ம் தேதி அன்று ஒரு சவரன் தங்கம் மிகப்பெரிய அளவுக்கு சரிந்தது. 3680 ரூபாய் ஒரு நாளில் குறைந்தது. இதனால் தங்கம் விலை ஒரு சவரன் 92 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.320 குறைந்தது. நேற்றும் தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்தது. ஆனால் காலையில் கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320 அதிகரித்து காணப்பட்டாலும், பிற்பகலில் சறுக்கலை சந்தித்தது. அந்தவகையில் நேற்று முன்தினம் விலையுடன் ஒப்பிடுகையில், நேற்று கிராமுக்கு ரூ.100-ம், பவுனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 400-க்கும், ஒரு பவுன் ரூ.91 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது, இதன் மூலம் தங்கம் விலை ரூ.92 ஆயிரத்துக்கு கீழ் சென்றிருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிராமுக்கு ரூ.800-ம், பவுனுக்கு ரூ.6,400-ம் குறைந்து இருந்தது. நேற்று மாலையில் மட்டும் 1120 ரூபாய் குறைந்திருந்த நிலையில், இன்று அக்டோபர் 25ம் தேதி காலையில் ஒரு சவரனுக்கு 800 ரூபாய் ஏறி உள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 92000க்கு விற்பனையாகிறது. நேற்று மாலையை விட தற்போது, ஒரு கிராம் தங்கம் 100 ரூபாய் உயர்ந்து 11500க்கு விற்பனையாகிறது

வெள்ளி விலையும் எப்படி மின்னல் வேகத்தில் ஏறியதோ, அதே வேகத்தில் இறங்கி வருகிறது. அதன்படி, நேற்றும் விலை சரிந்திருந்தது. கிராமுக்கு ரூ.4-ம், கிலோவுக்கு ரூ.4 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.170-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்பனையானது. அக்டோபர் 25ம் தேதியான இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையே விற்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+