புத்திசாலியா இருந்தால் வெள்ளிதான் பெஸ்ட்.. 2 மடங்கு விலை உயரப்போகும் வெள்ளி.. எக்ஸ்பர்ட் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: Rich Dad Poor Dad எழுத்தாளர் Robert Kiyosaki உலக அளவில் வெள்ளி விலை இந்த ஆண்டு இரட்டிப்பாகும் என்று கூறி உள்ளார். வெள்ளியின் வலுவான தேவை மற்றும் குறைந்த விநியோகம் காரணமாக இதன் மதிப்பு இரண்டு மடங்கு உயரப்போகிறது.

வெள்ளியின் தற்போதைய விலை ஒரு அவுன்ஸ் $34. இந்த ஆண்டு வெள்ளி 2 மடங்கு உயர்ந்து ஒரு அவுன்ஸ் $70 ஆக இருக்கும் என்று நான் கணிக்கிறேன், என்று அவர் கூறி உள்ளார். ஏற்கனவே இந்தியாவில் 1 கிலோ வெள்ளியின் விலை 1 லட்சம் ரூபாயை தாண்டி உள்ளது. சைக்காலஜி மார்க் என்று அழைக்கப்படும் 1 லட்சம் ரூபாயை தொட்டதன் மூலம் வெள்ளியின் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 12 வருடங்களில் இல்லாத புதிய விலை உயர்வை வெள்ளி அடைந்து உள்ளது. கடந்த 2005 நவம்பரில் 12 ஆயிரம் ரூபாய் இருந்த 1 கிலோ வெள்ளியின் விலை தற்போது 1 லட்சம் ரூபாய். அதிலும் கடந்த 5 வருடங்களில் வெள்ளியின் விலை ஒவ்வொரு வருடமும் 10 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்து வருகிறது. இதன் மூலம் சர்வதேச அளவில் தங்கம் அளவிற்கு அல்லது தங்கத்தை விட வரும் நாட்களில் அதிக வேகமாக மதிப்பு உயரும் உலோகமாக வெள்ளி மாறி வருகிறது.

Why is Silver the best investment for smart people as the Donald Trump Tariff War start

டிரம்ப் வர்த்தக போர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக போரை தொடங்கி உள்ளார். உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் மீது வர்த்தக போரை அறிவித்து உள்ளார். 10% அடிப்படை வரி உலகம் முழுக்க உள்ள எல்லா நாடுகள் மீதும் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய பதிலடி வரி விதிப்பின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீத விகிதத்தையும் சீனா 34 சதவீத வரியையும் எதிர்கொள்கிறது. இந்தியா 26 சதவீதம், தென் கொரியா 25 சதவீதம் மற்றும் ஜப்பான் 24 சதவீதம்., வரி விதிக்கப்படும்.

அதிகபட்சமாக கம்போடியா மீது 49%, வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டு உள்ளது. சீனா மீது 34%, ஐரோப்பிய ஒன்றியம் மீது 20%, ஜப்பான் மீது 24% வரிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க அதிபர் கொண்டு வந்துள்ள வரிகள் காரணமாக உலக அளவில் மார்க்கெட்கள் சரிய தொடங்கி உள்ளன. நேற்று இரவே இந்திய நேரப்படி 3 மணி அளவில் அமெரிக்காவின் பிரபல S&P 500 ஃப்யூச்சர்ஸ் கடுமையான சரிவை சந்தித்தது. வெறும் நான்கு நிமிடங்களில் 3% சரிந்தது. இதனால் சந்தை மூலதனத்தில் $1.3 டிரில்லியன் அழிக்கப்பட்டது.

அதாவது இந்திய மதிப்பில் 11,14,89,79,53,00,000 ரூபாய் 4 நிமிடத்தில் அழிந்து உள்ளது. அதாவது 11 கோடியே கோடி ரூபாய் அழிந்துள்ளது. இந்த நிலையில்தான் வெள்ளியின் விலை இரண்டு மடங்கு உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.


இரண்டு மடங்கு உயரும்

இந்த நிலையில் அடுத்த சில வாரங்களில் வெள்ளியின் விலை இரண்டு மடங்கு உயரும் என்று ரிச் டாட் புவர் டார் புத்தகத்தின் எழுத்தாளர் பொருளாதார நிபுணர் ராபர்ட் கியோஸ்கி தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்ப வர்த்தகத்தில் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து, பத்து கிராம் தங்கம் ரூ.79,630-க்கு விற்பனையாகி வருகிறது. வெள்ளியின் விலை ரூ.100 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.1,02,400-க்கு விற்பனையானது. 22 காரட் தங்கத்தின் விலையும் ரூ.10 உயர்ந்து, 10 கிராமிற்கு ரூ.72,990க்கு விற்பனையானது. இதன் மூலம்

தங்கத்தின் விலை: மக்கள் பலரும் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளனர். அதோடு வெள்ளி விலையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 12 வருடங்களில் இல்லாத புதிய விலை உயர்வை வெள்ளி அடைந்து உள்ளது. இந்தியாவில் தங்கம், வெள்ளி வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெள்ளி, தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முந்தைய ஆண்டை விட 2024 முதல் பாதியில் இந்திய தங்க தேவை 1.5% அதிகரித்துள்ளது. தேவை அதிகரிக்க அதிகரிக்க விலை அதிகரிக்கும். இதனால் எதிர்காலத்தில் இதன் மதிப்பு மேலும் உயரும்.

Take a Poll

சிறிய சிறிய இறக்கங்கள் அவ்வப்போது இருந்தாலும்.. 2024ம் ஆண்டு முழுக்கவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தபடியே இருக்கிறது. அந்த வகையில் தங்கத்தின் விலை வரும் நாட்களும் மேலும் உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை, தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முந்தைய ஆண்டை விட 2024 முதல் பாதியில் இந்திய தங்க தேவை 1.5% அதிகரித்துள்ளது. தேவை அதிகரிக்க அதிகரிக்க விலை அதிகரிக்கும். இதனால் எதிர்காலத்தில் இதன் மதிப்பு மேலும் உயரும்.

2022 ஆம் ஆண்டில், 14KT, 18KT, 20KT, 22KT, 23KT மற்றும் 24KT ஆகிய ஆறு தங்க பிரிவுகளுக்கு இந்திய தரநிலைப் பணியகம் (BIS) ஹால்மார்க் செய்வதை கட்டாயமாக்கியது. இந்தியா உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோர் ஆகும். இந்தியாவின் தங்க தேவை அடுத்த ஆண்டு 750 டன்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாலர் மதிப்பு மேலும் குறையும்

அமெரிக்கா வங்கிகள் வட்டி மதிப்பை குறைத்துள்ளன. இதனால் டாலர் மதிப்பு மேலும் குறையும். இதனால் தங்கத்தின் விலை உயரும். வரும் நாட்களில் தங்கத்தின் விலை உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தற்போது வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து உள்ளது. இந்த முடிவு டாலரை பலவீனப்படுத்தி உள்ளது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $2,592.39 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் அமெரிக்க தங்கத்தின் எதிர்கால விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $2,598.60 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

சர்வதேச அளவில் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 12 வருடங்களில் இல்லாத புதிய விலை உயர்வை வெள்ளி அடைந்து உள்ளது. இந்த நிலையில் அடுத்த சில வாரங்களில் வெள்ளியின் விலை இரண்டு மடங்கு உயரும் என்று ரிச் டாட் புவர் டார் புத்தகத்தின் எழுத்தாளர் பொருளாதார நிபுணர் ராபர்ட் கியோஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தங்கத்தின் விலையும், இந்திய ரூபாயின் மதிப்பும் சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பைப் பொறுத்தது. சந்தையில் தங்கத்தின் விலை அமெரிக்க டாலரின் விலை சரியும் போதெல்லாம் உயரும். அதேபோல் அமெரிக்க டாலர் மதிப்பில் உயர்வு ஏற்பட்டால், தங்கத்தின் மதிப்பு குறையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+