உங்க வீட்டில் தோடு, செயின் என்று சிறிய அளவில் தங்கம் இருக்கா? உங்களுக்கு ஜாக்பாட்! ரொம்ப முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சிக்கல்களுக்கு இடையில் உங்கள் வீடுகளில் இருக்கும் ஒவ்வொரு கிராம் தங்கமும் உங்களுக்கு பெரிய அளவில் உதவ போகிறது. அது எப்படி என்று பார்க்கலாம்,

அமெரிக்க அதிபர் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக டாலர் மதிப்பு சரிய தொடங்கி உள்ளது. இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக மார்க்கெட்டில் இருந்து வெளியேறி வருகிறார்கள். பங்குசந்தை சரிந்து வருவதால் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறுகிறார்கள். இதனால் சந்தை மேலும் சரிந்து வருகிறது. அமெரிக்க பங்குச்சந்தை தினம் தினம் 200 புள்ளிகள் வரை சரிந்து வருகிறது. மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு மார்க்கெட் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் 10 மட்டும் ஆயிரம் புள்ளிகள் சென்செக்ஸ் வர்த்தகத்தில் சரிந்து உள்ளது.

சர்வதேச மார்க்கெட் மிக மோசமாக உள்ளது. 100 வருடங்களில் இல்லாத மிக மோசமான சம்பவம் சர்வதேச மார்க்கெட்டில் நடக்க போகிறது என்று புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி உலக அளவில் மிகப்பெரிய பங்குச்சந்தை வீழ்ச்சி நடக்க போவதாக எச்சரித்து உள்ளார்.

Why the small small gold that you have in your household is more important

2008ல் சம்பவம்

2008ல் அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் சரிந்த நிலையில் உலக மார்க்கெட் காலியானது. அப்போது இந்தியா மட்டும் தப்பிக்க காரணம் இந்தியாவில் வீடுகளில் உள்ள தங்கம். வீடுகளில் பெண்கள் வாங்கி வைக்கும் சின்ன தோடு, கம்மல், செயின் போன்றவை பொருளாதார சரிவை தடுத்தது. தங்கம் காரணமாக அவசரத்திற்கு இதை அடகு வைத்து liquid cash ஆக மாற்றிக்கொள்ள முடியும். பின்னர் மீட்டுக்கொள்ள முடியும் என்ற சூழல் இருந்தது. அதோடு இந்தியாவின் தங்க அளவும் நிலையாக இருக்க காரணமாக இருந்தது. இப்போது மீண்டும் 2008 சூழல் வந்துள்ளது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சிக்கல்களுக்கு இடையில் உங்கள் வீடுகளில் இருக்கும் ஒவ்வொரு கிராம் தங்கமும் உங்களுக்கு பெரிய அளவில் உதவ போகிறது. அது எப்படி என்று பார்க்கலாம்,

1. தங்கம் விலை தொடர்ந்து உயர்வதால் உங்கள் வீட்டில் உள்ள சிறிய சிறிய தங்கம் தொடங்கி பெரிய தங்கம் வரை அனைத்தின் மதிப்பும் வேகமாக உயரும்.

2. SIP தொடங்கி தினசரி trading வரை எந்த ஒரு முதலீட்டிலும் வர முடியாத அளவிற்கு இதில் உங்களுக்கு வீட்டில் இருந்தபடியே வருவாய் வரும்.

Take a Poll

3. கடந்த 1 வருடத்தில் மட்டும் தங்கத்தின் விலை 30% அதிகரித்து உள்ளது. இந்த அளவிற்கு ரிட்டர்ன் கொடுக்க கூடிய முதலீடு எதுவும் இல்லை. இதெல்லாம் உங்களுக்கு அடிக்கும் ஜாக்பாட் என்றுதான் சொல்ல வேண்டும்.

4. உங்கள் வீட்டில் உள்ள சின்ன தங்கம் கூட.. உங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார பாதுகாப்பு. தேவையான நேரங்களில் இதை அடகு வைத்து liquid cash ஆக மாற்றிக்கொள்ள முடியும். பின்னர் மீட்டுக்கொள்ள முடியும்.

5. பொதுவாக உலகம் முழுக்க நிலவும் பொருளாதார பிரச்சனை காரணமாக பணத்தின் மதிப்பு குறையும். அதாவது பணம் என்பது பேப்பர்தான். பணவீக்கம் காரணமாக இன்று நீங்கள் 100 ரூபாய்க்கு வாங்கிய பொருளின் விலை அடுத்த சில மாதங்களில் 200 ரூபாய்க்குத்தான் கிடைக்கும்.

6. இதன் அர்த்தம் உங்கள் பண மதிப்பு சரியும். அதுவே பணத்தை சேமிப்பதற்கு பதிலாக தங்கத்தை சேமித்தால்.. தங்கம் அதே நேரத்தில் மதிப்பு உயரும்.

7. பொருளாதார சரிவு ஏற்பட்டு பணம் மதிப்பு சரியும் போதெல்லாம் தங்கத்தின் மதிப்பு உயர்வது வழக்கம். எனவே உங்கள் வீட்டில் உள்ள சிறிய சிறிய தங்கத்தையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது முக்கியம்.

ஆர்பிஐ தங்கம்

இதே காரணத்திற்காகத்தான் ஆர்பிஐ தங்கம் வாங்கி குவித்து வருகிறது. இந்தியா கடந்த சில மாதங்களாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது. உலக அளவில் பொருளாதாரம் மிகவும் மோசமாகி வருகிறது. சர்வதேச பொருளாதாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத மோசமான சூழல் நிலவி வருகிறது. பல நாடுகளும் தங்கத்தை இதனால் வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன.

ஏனென்றால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தால் பணத்தின் மதிப்புகள் மோசமாக சரியும். ஆனால் தங்கத்தின் மதிப்பு உயரும். பொருளாதார சரிவுகளில் போது தங்கத்தின் மதிப்பே ஒரு நாட்டை காக்கும்.இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியா கடந்த சில மாதங்களாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது.

இந்தியாவின் ரிசர்வ் வங்கி தங்கத்தை வாங்கி குவிப்பதில் தீவிரமாக உள்ளது. தங்கத்தின் கையிருப்பு மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, அதன் தங்கத்தின் மதிப்பு ஒரே வாரத்தில் ரூ.11,986 கோடி உயர்ந்துள்ளது. இந்த உயர்வின் மூலம், ரிசர்வ் வங்கியின் மொத்த தங்க கையிருப்பு மதிப்பு ரூ.6,88,496 கோடியாக உயர்ந்துள்ளது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

டிரம்ப் வந்த பின் பொருளாதார சரிவு நிலவும் இந்த காலகட்டத்தில் ரிசர்வ் வங்கியின் தங்கம் மதிப்பு கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. உலக அளவில் பல மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிக்கும் நிலையில் இந்தியாவின் ரிசர்வ் வங்கியும் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது.

பற்றாக்குறை போகும்

அமெரிக்கா இந்தியா இடையிலான வர்த்தக பற்றாக்குறையை போக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அமெரிக்காவிலிருந்து தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் உள்ளிட்ட உயர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா பரிசீலித்து வருகிறது.

வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் (ஏப்ரல் 2024-பிப்ரவரி 2025) இந்தியா 76.37 பில்லியன் டாலர் மதிப்பிலான சரக்குகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது அதே சமயம் $41.62 பில்லியன் பொருட்களை இறக்குமதி செய்தது, இதன் விளைவாக $34.75 பில்லியன் வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டது. அமெரிக்காவுடனான இருதரப்பு வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான வழிகளில் ஒன்றாக Trade diversification எனப்படும் வர்த்தகப் பல்வகைமை முறையை கையாள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் நகைகளை இறக்குமதி செய்ய உள்ளனர்.

தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் உற்பத்தியில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. இவற்றில் கணிசமான அளவை அமெரிக்காவிலிருந்து இந்தியா எளிதாக பெற முடியும். இதன் மூலம் தங்கம், வெள்ளியின் கையிருப்பு இந்தியாவில் அதிகரிக்கும். நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் (ஏப்ரல்
2024-பிப்ரவரி 2025) இந்தியாவின் தங்கம் மற்றும் வெள்ளி உட்பட விலைமதிப்பற்ற உலோகங்களின் மொத்த இறக்குமதி 74 பில்லியன் டாலர்களைத் தாண்டி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+