மட்டனில் "அது" கலந்திருக்கு.. கோழிக்கறியை உற்று பார்த்தால்? அசைவம் உணவில் ஆன்டி பயாடிக்குகள்? கவனம்
சென்னை: ஆன்டிபயாடிக் மருந்துகள் என்றால் என்ன? அவைகளை அதிகமாக பயன்படுத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னென்ன? அசைவ உணவுகளில் ஆன்டிபயாடிக் பயன்படுத்தப்படுகின்றனவா? இதுகுறித்து ஆய்வுகள் சொல்வதென்ன? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
உடலில் பாக்டீரியா தொற்று ஏற்படும்போது அதை போக்குவதற்காகவும், பாக்டீரியா தொற்று அதிகரிக்கும்போதும், ஆன்டிபயாடிக் மருந்துகள் தேவைப்படும். ஆனால், இவைகளை அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

ஆன்டிபயாடிக்: "ஆன்டிபயாடிக்" மருந்துகள் குறித்த போதுமான விழிப்புணர்கள் இல்லாமல் இருப்பதால்தான், ஆன்டிபயாடிக்குகளின் பயன்பாடுகள் அதிகரித்து கொண்டேயிருக்கிறது. இந்த மருந்துகளைப் பயன்படுத்துவதால் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படுவதாக ஆய்வுகளும் தொடந்து கூறுகின்றன.
குறிப்பாக, ஆன்டிபயாடிக்குகளை அதிகம் எடுத்துக் கொள்வது கல்லீரலை வெகுவாக பாதித்து, இறுதியில் செயலிழந்தே போய்விடுவதாக எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள். அதுமட்டுமல்லாமல், இந்தியாவின் ஆன்டிபயாடிக் மருந்துகளில் பெரும்பாலானவை, மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாதவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசைவ உணவு: ஆனால், அசைவ உணவிலும் இந்த ஆன்டிபயாடிக் இருப்பதுதான் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துவிடுகிறது. 10 வருடங்களுக்கு முன்பு, டெல்லியில், கோழி இறைச்சியில் அதிகளவில் ஆன்டிபயாடிக் எச்சங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய ஆய்வில் இந்த உண்மை அப்போது வெளிச்சத்துக்கு வந்தது.. கோழிப்பண்ணைகளிலிருந்து பெறப்பட்ட இந்த கறிக்கோழிகளின் ஈரல், தசை, சிறுநீரகம் போன்றவை பரிசோதிக்கப்பட்டபோது, இந்த பாகங்கள் அனைத்திலுமே ஆன்டிபயாடிக் எச்சங்கள் இருப்பது தெரியவந்தது. கோழி வளர்ப்பில் 6 வகையான ஆன்டி பயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டது உறுதியாது.
கோழிகள்: அதாவது, கோழிகளுக்கு 32 முதல் 42 நாட்களுக்கு இந்த மருந்துகள் தரப்பட்டுள்ளன. இதனால் கோழியின் எடை அதிகமாகும். அத்துடன் கோழிகளும் விரைவான வளர்ச்சியை பெற்றுவிடுமாம். இதுபோன்ற கோழியை சாப்பிடும் மனிதர்களுக்கு நோய்க்கூறுகள் தோன்றிவிடுகின்றன.. அதுமட்டுமல்லாமல், ஆன்டிபயாடிக் நம்முடைய உடம்பில் சேரும்போது இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும்.
இதோ இப்போதுகூட, பண்ணைகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழிகளுக்கு கொடுக்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளால், மனிதர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
விலங்குகள்: ஆங்கில நாளிதழ் ஒன்றில் இது தொடர்பான ஆய்வு முடிவுகள் வெளியாகியிருக்கிறது. அதில், உலகம் முழுவதும் 70 சதவீதம் ஆண்டிபயாடிக் மருந்துகள், பண்ணை விலங்குகளுக்கு தரப்படுகிறதாம். விலங்குகள் , பறவைகள், மனிதர்கள் என அனைவருக்குமே கடுமையான பாதிப்புகளை இந்த மருந்துகள் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்..
அதுமட்டுமல்ல, இதற்காகவே, விலங்குகள், பறவைகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் எவ்வளவு தரப்படுகிறது என்பதை கண்டுபிடிப்பதற்காக, ஒரு கிலோ இறைச்சியை கொண்டு மதிப்பீடு செய்திருக்கிறார்கள்.
செம்மறி ஆடுகள்: அதில், செம்மறி ஆடுகளுக்கு அதிகளவு ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுப்பது தெரியவந்துள்ளது. அதாவது ஒரு கிலோ செம்மறி இறைச்சியில் 243 மில்லி கிராம் ஆன்டிபயாடிக் சேர்க்கப்படுகிறது.. ஒரு கிலோ பன்றி இறைச்சிக்கு 173 மில்லி கிராம், ஒரு கிலோ மாட்டிறைச்சிக்கு 60 மில்லி கிராமும், சிக்கனுக்கு 35 மில்லி கிராம் அன்டிபயாடிக்குகள் பயன்படுத்தப்படுவது, கடந்த 2020-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இறுதியில், 190 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, பண்ணை விலங்களுக்கான ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்பாட்டில், நம்முடைய இந்தியா 30வது இடத்தில் இருக்கிறதாம்..!!












Click it and Unblock the Notifications