தேங்கி கிடக்கும் ஆபத்தான கொழுப்பை அசால்ட்டா குறைக்கும் பிளம்ஸ்.. பெண்களின் அருமருந்து ப்ளம்ஸ் பழம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆபத்து நிறைந்த கொழுப்பை குறைத்து, இதயத்தை காக்கக்கூடிய பழங்களில் தவிர்க்க முடியாதது பிளம்ஸ் பழங்கள்.. சிறிய அளவிலான இந்த பழங்கள், பெரிய பெரிய நன்மைகளை மனித குலத்துக்கு தந்து கொண்டிருக்கிறது. இந்த பழத்திலுள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா? பிளம்ஸ் பழத்திலுள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா? சுருக்கமாக இங்கே பார்ப்போம்.

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கு பிளம்ஸ் பெஸ்ட் சாய்ஸ்.. ஏனென்றால், அபரிமிதமான நார்ச்சத்துக்கள் இந்த பழத்தில் உள்ளதால், அஜீரண பிரச்சனைகளை நீக்கி, மலச்சிக்கலை விரட்டி, குடலை சிறப்பாக செயல்பட வைத்திருக்கிறது..

Plums Fruits Aloo Bukhara

கொழுப்பு சத்தையும் குறைப்பதால், உடல் எடை மெல்ல குறைய துவங்குகிறது. சைலண்ட் கில்லர் என்ற கொழுப்பையும் கரைப்பதால், பிளம்ஸ் ஆரோக்கியத்தின் நண்பன் என்றே கருதப்படுகிறது.

நுரையீரல் புற்றுநோய்

இந்த பழம் பெண்களுக்கு வரப்பிரசாதம் எனலாம்.. பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கு இருந்தால் இந்த பழம் கை கொடுத்து உதவும்.. அதுமட்டுமல்ல, மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடக்கூடிய பண்பு இந்த பிளம்ஸ் பழத்துக்கு உண்டு.. முக்கியமாக வாய்வழி, பற்சொத்தை புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்க செய்கிறது.

கருவிலுள்ள குழந்தைக்கு கண் பார்வை, எலும்பு மற்றும் திசுக்களின் சிறப்பான உருவாக்கத்துக்கும் பிளம்ஸ் உதவுகிறது என்பதால், கர்ப்பிணிகளுக்கு ஏற்றவை.. கருவிலுள்ள குழந்தைக்கு கண் பார்வை, எலும்பு, திசுக்களின் சிறப்பான உருவாக்கத்துக்கு இந்த பிளம்ஸ் பழம் உதவுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்திகள்

நோய் எதிர்ப்பு சக்தியை பெருக செய்யும் பிளம்ஸ் பழங்கள், ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இதய துடிப்பையும் ஒரே சீராக வைத்திருக்க உதவுகிறது. வைட்டமின் A, C, B6, B காம்ப்ளக்ஸ், பொட்டாசியம், புரோட்டீன், நியாசின், இரும்புச்சத்து, மக்னீசியம் போன்ற சத்துக்களை கொண்ட பிளம்ஸ் பழங்கள், மினரல்கள் நிறைந்தவை.

வைட்டமின் A நிறைந்த பிளம்ஸ், கண்பார்வை திறனை அதிகப்படுத்துகிறது.. குறிப்பாக கண் சவ்வு நலனை காக்கவும், புற ஊதா கதிர்களில் ஏற்படும் சேதத்திலிருந்தும் தடுக்க செய்கிறது. வைட்டமின் C நிறைந்த பிளம்ஸ், சருமத்தின் ஆரோக்கியத்தை காக்கிறது.. இதனால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை முன்கூட்டியே தடுக்கிறது. எனவேதான், பியூட்டி சாதன பொருட்களின் தயாரிப்புகளில், பிளம்ஸ் பழங்கள் மூல பொருளாகவே சேர்க்கப்படுகின்றன.

சர்க்கரை நோயாளிகள்

வைட்டமின் K நிறைந்த பிளம்ஸ் பழங்கள், ரத்தம் உறைதலில் உதவுவதுடன், ரத்தத்தை சுத்திகரிப்பு செய்ய உதவுகிறது.. அல்சீமர் பாதிப்புக்கு எதிரானது.. ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு இந்த பழமே உதவுகிறது.. அமீனியாவை விரட்டி, சீரான ரத்த ஓட்டத்தை தருகிறது. இதனால் தலைமுடி வளர்ச்சி அதிகமாகும்.

டைப் 2 நீரிழிவு நோயை தடுக்கக்கூடியது பிளம்ஸ் பழங்கள்.. வளரும் குழந்தைகளுக்கு இந்த பழங்களை சாப்பிட தருவதால், எலும்புகளுக்கு பலம் தருகிறது. மன அழுத்தமும், மன பதற்றமும் நீங்குவதாக ஆய்வு கூறுகிறது.

ஒருசிலருக்கு அலர்ஜி தரலாம் என்பதால் அவர்கள் இதனை தவிர்த்துவிடலாம்.. சத்துக்கள் அதிகமாக இருந்தாலும், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள், டாக்டர்களின் ஆலோசனை பேரில், பிளம்ஸ் சாப்பிடுவது சிறந்த ஆரோக்கியம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+