SIR-ஆல் பலன் அடைந்த தவெக? தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்த விசிக எம்.பி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் SIR நடவடிக்கையின் தாக்கம் தவெகவுக்கு ஆதரவாக இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், விசிக எம்.பி ரவிக்குமார், தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு முன்பாக சிறப்பு தீவிர வாக்காளர் சீர்திருத்த (SIR) நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் காரணமாக 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இந்நிலையில் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் அதிகளவில் தவெக வெற்றி பெற்றுள்ளதாக தி இந்து பிசினஸ் லைன் பத்திரிகை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

SIR Impact on TN Polls VCK MP Ravikumar Criticizes Election Commission Move

80,000 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் நீக்கப்பட்ட 10 தொகுதிகளிலும் தவெக மொத்தமாக வெற்றி பெற்றுள்ளது. 30,000 மற்றும் அதற்கு மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்ட 69 இடங்களில் தவெக 52 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக வெறும் 11 இடங்களிலும், அதிமுக வெறும் 6 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.

பிசினஸ் லைன் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையின் படி, குறைந்த அளவு வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் திமுகவும், அதிகளவு வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் தவெகவும் வென்றுள்ளன. இதன்மூலம், SIR நடவடிக்கை தவெகவின் வெற்றிக்கு உதவியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக விசிக எம்.பி ரவிக்குமார் பேசுகையில், "தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதில் அதிகமாக நகர்ப்புற வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். கிராமப்புறங்களில் குறைவான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தவெக வெற்றி பெற்றது பெருநகரங்களில் தான் அதிகம். கிராமப்புறங்களில் குறைவாகவே வென்றது. எனவே இவை இரண்டும் மேட்ச் ஆவது போல் உள்ளது.

ஆனால், இதை வைத்து மட்டுமே அப்படிச் சொல்லமுடியாது. விழுப்புரம் மாவட்டத்தில் 1.83 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதில் 67 ஆயிரம் வாக்காளர்கள் இறந்தவர்கள். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் அதிகமாக வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதி வானூர். அந்த தொகுதிக்கு உட்பட்ட கோட்டக்குப்பம் நகராட்சியில் சுமார் 40% பேர் இஸ்லாமியர்கள்.

அங்கு பெரும்பாலானர்களின் வாக்குகள் நீக்கப்பட்டன. ஏராளமான இஸ்லாமியர்கள் வெளிநாடுகளில், வெளியூர்களில் இருப்பதால் அவர்களின் வாக்குகள் நீக்கப்பட்டன. அவர்களுக்கு இந்திய குடியுரிமை உள்ளது, ஆனால் வாக்குரிமை இல்லை. பக்கத்து ஊர், பக்கத்து தெருக்களுக்கு வீடு மாறிச் சென்றவர்கள் கூட நீக்கப்பட்டுள்ளனர்.

பாஜக ஆட்சியில் இருக்கும் கர்நாடகாவில் இஸ்லாமியர்களை குறி வைத்து நீக்கியுள்ளனர். முதலில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும். தேர்தல் ஆணையரை நீக்கக் கோருவதை விட உடனடியாக எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+