கத்தரிக்காயை சாப்பிட்டால் இத்தனை நன்மை? யார் யார் கத்தரிக்காயை தொட கூடாது? நோயை குணப்படுத்தும் காய்
சென்னை: உடல் வலு பெற வேண்டுமானால், கத்தரிக்காயை வாரம் 2 நாளாவது வளரும் பிள்ளைகள் சாப்பிட வேண்டுமாம்.. இரும்புச்சத்து அதிகம் நிறைந்த கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா? சர்க்கரை நோயாளிகள் கத்தரி சாப்பிடலாமா? இந்த கத்தரிக்காயை சாப்பிடக்கூடாது.. யார் அவசியம் சாப்பிட வேண்டும்? இவைகளை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
கத்தரியில் பல வகைகள் உள்ளன.. வெள்ளை நிற கத்திரிக்காய், பச்சை நிற கத்திரிக்காய், வயலெட் நிற கத்தரிக்காய் என்று பல கலர்களில் இருக்கின்றன.. அனைத்து கத்திரிக்காயிலும் ஒரே மாதிரியான சத்துக்கள் உள்ளன.

புரோட்டீன், நார்ச்சத்து, இரும்புசத்து, கால்சியம், சோடியம், பொட்டாசியம், சர்க்கரை, மாங்கனீசு, கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், போன்றவை உள்ளன.. இவைகளுடன் உடலுக்கு ஊட்டம் தரும் வைட்டமின்கள் அதாவது வைட்டமின்கள் B6, A, C, B1, B2, அதிகமாக உள்ளன..
சத்துக்கள் என்னென்ன
ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கத்திரிக்காய் கட்டுப்படுத்தும் என்பார்கள்.. அதேபோல, ரத்தத்திலுள்ள கொழுப்புச்சத்தையும் குறைக்க செய்கிறது. அதனால்தான் சிக்கன், மட்டன் சமைக்கும் குழம்புகளில் கத்தரியையும் வெட்டிப்போட்டு சமைப்பார்கள்.. இதனால் குழம்பிலுள்ள கொழுப்பை கத்திரிக்காய் உறிஞ்சிவிடும்.
நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் உள்ளதால், உடல் எடைக்கு சிறந்த தேர்வாக கத்தரி உள்ளது.. இதனால், கத்தரிக்காய் சாப்பிட்டு வருபவர்களுக்கு மலச்சிக்கல் தொந்தரவு வருவதில்லை. 100 கிராம் கத்திரிக்காயில் 24 கலோரி மட்டுமே ஊட்டச்சத்து உள்ளன... சளி, இருமல், தலைபாரம் போன்ற சுவாச பிரச்சனைகள் இருந்தால், உஷ்ணத் தன்மை நிறைந்த கத்திரியை உணவில் பயன்படுத்தலாம்.
இரும்புச்சத்து காய்கள்
இரும்புச்சத்து நிறைந்த கத்திரிக்காய்கள், ஹீமோகுளோபின் பிரச்சனையை விரட்டியடிக்கிறது. இதனால் தலைமுடியும் கொட்டாது.. கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் A, உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
அடிக்கடி கத்தரிக்காய் உணவில் சேர்த்து கொண்டால், கிட்னியில் கல் சேராது. வைட்டமின் C சததுக்கள் வளரும் குழந்தைகளுக்கு நன்மை தரக்கூடியது.. ஏனென்றால், கத்திரிக்காயில் மெக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம் மற்றும் காப்பர் சத்துக்கள் நிறைவாக உள்ளன. இவை அனைத்தும் எலும்புகளை வலுப்படுத்தும் மற்றும் எலும்புகளில் உள்ள அடர்த்தியை மேம்படுத்தும்.
ரத்த அழுத்த பிரச்சனை
அதேபோல, ரத்த அழுத்தம் பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் கத்தரிக்காய்களை தவறாமல் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். கொழுப்பு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு உணவில் கத்தரிக்காய் மருந்தாவதால், மாரடைப்பும் தடுக்கப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த காய் இதுவாகும்.. ஏனென்றால் ஃபைபர் அதிகமாக உள்ளதால், ரத்த சர்க்கரை அளவை சீரான நிலையில் வைத்திருக்க செய்கிறது.. குடல் நலனும் காக்கப்படுகிறது.. முக்கியமாக, ரத்த சர்க்கரையை குறைக்க ஏதுவான இன்சுலின் உற்பத்தியை உடம்பில் கத்திரிக்காய் ஊக்குவிக்கும் என்பார்கள்.
அதுமட்டுமல்ல, கத்தரியிலுள்ள போட்டோ நியூட்ரியெண்ட்ஸ், ஞாபக சக்தியை பெருக்கக்கூடியது.. மூளை செல்களையும் பாதுகாக்ககூடியது.. ஆனால், கத்தரிக்காய்களை, பிஞ்சாக சாப்பிட வேண்டும்.. முற்றிய காய்கள் என்றால் அலர்ஜி ஏற்பட்டுவிடும். கத்தரிக்காயில் பாலிபினால்கள் உள்ளதால், இது கேன்சர் தொற்றுக்கு எதிராக செயல்படுகிறது.. முக்கியமாக, கட்டி வளர்ச்சி, புற்றுநோய் செல்கள் ஏற்படுவதை தடுத்து, புற்றுநோய் உயிரணுக்களின் இறப்பையும் ஊக்குவிக்க செய்கிறது.
யார் யார் தவிர்க்கலாம்
ஒருசிலருக்கு கத்தரிக்காய் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும்.. நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு தொந்தரவை தந்துவிடும். சோலனைன், ஹிஸ்இடமின்கள் சற்று கூடுதலாக கத்தரியில் உள்ளதே இந்த அலர்ஜிக்கு காரணமாகும். எனவே, சொறி சிரங்கு, புண், சரும அலர்ஜி இருப்பவர்கள் கத்தரிக்காயை தவிர்க்கலாம். ரத்த சோகை உள்ளவர்களும் கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது.
கிட்னியில் கல் இருந்தால் கத்தரியை தவிர்க்கலாம். ஏனென்றால், கத்தரிக்காயிலுள்ள ஆக்ஸலேட்கள், கிட்னியிலுள்ள கற்களை இன்னும் பெருக்கிவிட்டுவிடும். அதேபோல, கண் எரிச்சல், பார்வையில் குறைபாடு, வீக்கம் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் கத்தரிக்காய் தவிர்க்கலாம்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications