Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூப்பர் முட்டைக்கோஸ்.. எலும்பு, பற்களுக்கு உறுதி.. கேன்சர் இதயநோயை தடுக்கும் முட்டைக்கோஸ் இலைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முட்டைக்கோஸ் காயில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன? முட்டைகோஸை போலவே அதன் இலைகளிலும் உள்ள நன்மைகள் என்னென்ன? பெண்களுக்கு முட்டைகோஸ் அதிக அளவு பயன்படுகிறது என்று சொல்ல என்ன காரணம்? உடல் எடை குறைப்பதில் முட்டைக்கோஸ்களின் பங்கு என்னென்ன? எடை குறைய என்னென்ன வகைகளில் கோஸை சாப்பிடலாம்? இதனை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

எப்போதுமே முட்டைகோஸை சமைக்கும் போது அதிகமாக வேகவைத்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதிகளவு வேகவைக்கும் போது அதன் சத்துகள் வெளியாகிவிடும்.

சத்துக்கள் அபாரம்

கலர் கலராக கோஸ்கள் இருந்தாலும், அனைத்து கோஸ்களிலும் ஒரே சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. குறிப்பாக, முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள், வைட்டமின்களான A, C, K, B5, B6, B1 பி-5 போன்ற சத்துக்களும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன.. இத்தனை சத்துக்களும் இருப்பதால்தான், அனைவராலும் தவிர்க்க முடியாத காய்கறியாக முட்டைகோஸ் உள்ளது..

நார்ச்சத்துக்கள் உள்ளதால் செரிமான கோளாறுகளை நீக்குகிறது.. நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் அடங்கியிருப்பதால் உடல் எடை குறைப்போருக்கு பெஸ்ட் சாய்ஸ் இதுவாகும்.. இதனால் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கிறது.. உடல் எடையை சீராக வைத்து கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் அல்லது எடையை ஆரோக்கியமாக குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், ஒரு கப் வேக வைத்த முட்டைகோஸை அதிகமாக குழைய விடாமல் வேகவைத்து சாப்பிட்டாலே போதும்.

உடல் எடை குறைக்கும் டிப்ஸ்

அல்லது முட்டைகோஸில் ஆப்பிள் அல்லது வேறு ஏதாவது ஒரு பழம், துருவிய இஞ்சி, சிறிது புதினா இலைகள், சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி, எலுமிச்சம் சாறு வெறும் வயிற்றில் கலந்து குடிக்கலாம். சேர்த்து கலந்தால் சூப்பரான முட்டைகோஸ் ஜூஸ் ரெடி. இந்த ஜூஸை காலை வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. அல்லது முட்டைகோஸ் வைத்து சாலட் செய்து சாப்பிடலாம்.. துருவிய கேரட், வெங்காயம், வெள்ளரிக்காய், குடைமிளகாய், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சம் சாறு கலந்து சாலட் போல சாப்பிடும்போது, வயிறு நிரம்பிய உணவு கிடைக்கும்.

கண்களுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது.. முக்கியமாக கண் புரை நோயிலிருந்து காக்ககூடிய சக்தி முட்டை கோஸ்களுக்கு உள்ளது.. வலுவிழந்த கண் நரம்புகளையும் பலப்படுத்தக்கூடியது முட்டைக்கோஸ். குடல்புண்கள் இருந்தாலும், அதனை முட்டைக்கோஸ் ஆறிவிடும்.. அல்சர் தொந்தரவால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸ் ஜூஸ் குடித்து குடித்து வரவேண்டும்..

சிறுநீரகம், கல்லீரலுக்கு பாதுகாப்பு

எனவே சர்க்கரை நோயாளிகள் இந்த காய்கறியை உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். சிறுநீரகத்துக்கு பாதுகாப்பு தரக்கூடியது முட்டைக்கோஸ். எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. கல்லீரலை காக்கக்கூடிய காய்கறிகளில் முக்கியமானது இந்த முட்டைகோஸ்.. அதிகமாக மதுஅருந்துபவர்களுக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு, நிறைய விஷத்தன்மைகள் கல்லீரலை சுற்றியுள்ள பகுதியில் படிந்திருக்கும். இந்த நச்சுத்தன்மையை போக்கும் சக்தி முட்டைக்கோசுக்கு உண்டு..

கண்களுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது.. முக்கியமாக கண் புரை நோயிலிருந்து காக்ககூடிய சக்தி முட்டை கோஸ்களுக்கு உள்ளது.. வலுவிழந்த கண் நரம்புகளையும் பலப்படுத்தக்கூடியது முட்டைக்கோஸ். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். குடல்புண்கள் இருந்தாலும், அதனை முட்டைக்கோஸ் ஆறிவிடும்.. அல்சர் தொந்தரவால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸ் ஜூஸ் குடித்து குடித்து வரவேண்டும்..

சர்க்கரை நோயாளிகள்

எனவே சர்க்கரை நோயாளிகள் இந்த காய்கறியை உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். சிறுநீரகத்துக்கு பாதுகாப்பு தரக்கூடியது முட்டைக்கோஸ். எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. பிஃபிடோாக்டீரியா, லாக்டோபாக்டீரியாக்கள் போன்றவைகள், குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் ஆகும். இந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் முட்டைகோஸில் உண்டு.. அதேபோல பெண்களுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய காய்களில் ஒன்று இந்த முட்டைக்கோஸ்..

குறிப்பாக மெனோபாஸ் சமயங்களில் , கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ்கள் ஈடுசெய்யும்.தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

புற்றுநோய் செல்களின் வளர்ச்சி

முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை முட்டை கோஸ்கள் தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. விடாமல் முட்டைகோஸை சமையல் செய்து சாப்பிட்டால், புற்றுநோய் செல்களும் தானாகவே அழிந்துவிடும்.. அதேபோல, வளரும் பிள்ளைகளுக்கு முட்டைகோஸை பொரியல் செய்து தரலாம். ஏனென்றால், இந்த காயிலுள்ள வைட்டமின் K, எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.. அதேபோல எலும்பு தேய்மான பிரச்சனைகள் இருந்தாலும், முட்டைகோஸ் உணவில் அதிகம் சேர்த்து கொள்ளலாம்..

வைட்டமின்கள் - சத்துக்கள்

இதில், வைலட் நிறம் அதாவது பர்ப்பிள் நிற முட்டைகோஸில் ஆந்தோசயனின் என்ற மூலப்பொருள் இருப்பதால், இதய ஆரோக்கியத்தை காக்கிறது.. பொதுவாக ஆந்தோ சயனின் அடங்கிய உணவுகளை சாப்பிட்டால் இதய நோய்கள் அண்டாது.. அந்தவகையில் கோஸ் பயன்படுகிறது.. முட்டைக்கோஸில் அந்தோசயனின்ஸ், வைட்டமின் K, அயோடின், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்திருக்கிறது.. இது மூளைக்கு உதவியாக இருக்கிறது..

அதேபோல, அதிக பொட்டாசியம் நிறைந்த உணவுகள் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் என்பார்கள்.. அந்தவகையில், முட்டைக்கோஸ் காயில் பொட்டாசியம் அதிகமாக உள்ளன.. எனவே உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் இந்த காயை உணவில் தவறாமல் சேர்த்துகொள்ள வேண்டும்.

பாலூட்டும் தாய்மார்கள்

முட்டைகோஸ் போலவே முட்டைக்கோஸின் இலைகளிலும் ஏராளமான சத்துக்கள் உள்ளன.. வீக்கத்தையும், வலியை குறைக்கும் தன்மை இந்த முட்டைகோஸ் இலைகளுக்கு உள்ளன.. குழந்தைகள் மருத்துவத்திற்கான அமெரிக்க அகாடமியின் "நியூ மதர்ஸ் பிரெஸ்ட் கைடு" என்ற புத்தகத்திலும் இதுகுறித்த தகவல்கள பதிவாகி உள்ளது.

பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த முட்டைகோஸ் இலைகளை பெஸ்ட் சாய்ஸ் ஆகும்.. காரணம், பாலூட்டும்போது வலி ஏற்பட்டுவிட்டால், வலியை குறைப்பதற்காக இந்த முட்டைகோஸ் இலைகளை ஒத்தடம் போல பயன்படுத்துவார்கள். தைராய்டு சுரப்பி, கை, கால் வீக்கம், தலைவலி இருந்தாலும், இந்த இலைகளே மருந்தாகின்றன..

தைராய்டு பிரச்சனை

தைராய்டு தொந்தரவு இருந்தாலும், முட்டைகோஸ் இலைகளை தொண்டை பகுதியில், வெளிப்புறத்தில் வைத்து கட்டினால், தைராய்டு பிரச்சனை தாக்கம் குறையும்.. கை, கால்களில் வீக்கம் இருந்தாலும், இந்த முட்டைகோஸ் இலைகளை பயன்படுத்தலாம். இதற்கு முட்டைகோஸ் இலையை சுத்தமாக கழுவி, வீக்கம் உள்ள இடங்களில் பேண்டேஜ்ஜில் சேர்த்து கட்டினால் போதும். வலியும் வீக்கமும் குறையும்.

கொலாஜன் உற்பத்தியையும் தூண்டக் கூடியது முட்டைக்கோஸ் இலைகள்.. இதில் சூப் வைத்து குடிக்கும்போது, எலும்பு, தசைகள் மற்றும் ரத்தக் குழாய்களை வலு பெறுகின்றன. சரும அலர்ஜி உள்ளவர்கள், டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்று, இந்த கோஸ் இலைகளை பயன்படுத்துவது அவசியம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+