எந்தெந்த பழங்களை சர்க்கரை நோயாளி சாப்பிடலாம்? நாவல் மட்டுமல்லீங்க இதையும் சாப்பிடலாம்.. செம ரஸ்தாளி
சென்னை: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த பழங்கள் என்னென்ன தெரியுமா? அவைகளின் பலன்கள் என்னென்ன தெரியுமா?
உணவு முறை, மன அழுத்தம், சமூக வாழ்க்கை முறையில் மாற்றம், துரித உணவு, போன்ற காரணங்களால் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகின்றது..

சர்க்கரை நோய்: சர்க்கரை நோய் பாதிப்பு வந்துவிட்டால், எந்த ஒரு உணவையும் விரும்பி, நிம்மதியாக சாப்பிட முடியாத கவலை நிறைய பேருக்கு உண்டு.. காரணம், சில வகையான உணவில் சர்க்கரையின் அளவு அதிகம் நிறைந்திருக்கும் என்பதால், உணவில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
அதுக்காக இனிப்பாக இருக்கும் உணவு வகைகள், மற்றும் பழங்கள் அனைத்தையும் சாப்பிடக்கூடாது என்று அர்த்தமில்லை.. எல்லா வகை கனி ரகங்களிலும், வைட்டமின்களும், நல்ல ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன என்றாலும், சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், சில வகையான பழங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
நாவல்பழம்: அந்தவகையில், நாவல்பழத்தை (Jamun Fruit) எடுத்துக் கொண்டால், ஆயுர்வேத மருத்துவத்தில் நிறைய முக்கியத்துவம் பெறுகிறது.. சர்க்கரை நோயாளிகளுக்கு பெஸ்ட் பழம் என்றும் சொல்லலாம்.. காரணம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதோடு, இந்த பழத்தின் கொட்டையை பொடி செய்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோயை விரைவில் கட்டுப்படுத்த முடியும்.
நெல்லிக்காய் (Gooseberry) போன்ற சிறந்த பழம் கிடையாது. சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்லாமல், அனைவருக்குமான சிறந்த பழம் இதுவாகும்.. நெல்லிக்காயின் ஆயுர்வேத மருத்துவம், நீண்ட ஆயுள் தரக்கூடிய அருமையான கனி மற்றும் பல நோய் தீர்க்கும் நிவாரணி, அதில் ஒன்று நீரிழிவு நோயாகும். வைட்டமின் C, நார்சத்து அதிகம் உள்ளதால், தினமும் சாப்பிடும்போது, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
பேரிக்காய்கள்: அதேபோல, ஆப்பிளை விட அதிக மருத்துவ குணம் வாய்ந்தது பேரிக்காய்கள்.. இந்த பழத்தில் வைட்டமின் A, C நிறைய உள்ளதால், அஜீரணம் நீங்குகிறது.. நார்ச்சத்து முழுமையாக கிடைக்கிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் இந்த பழத்தை காலையில் டிபனாகவே சாப்பிடலாம்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடியது பப்பாளி (Papaya).. வைட்டமின் A அதிகமுள்ள பப்பாளியை, சர்க்கரை நோயாளிகள், குறைந்த அளவு துண்டுகளை சாப்பிட வேண்டும். இது உடலுக்கு ஆற்றலை தரும்..
வாழைப்பழம்: பழங்களில் அனைவருக்குமே முக்கியமான பழம் கொய்யாப்பழம்.. இதை பழங்களாக சாப்பிடலாம் காயாக சாப்பிடுவது இன்னும் நல்லது. ஆரஞ்சு, கிவி, திராட்சைப்பழம், மாதுளை, பெர்ரி, ஆப்பிள், அன்னாசி போன்ற பழங்களை அளவுடன் அதுவும் மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று சாப்பிட வேண்டும்.
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் நோயாளிகள், மஞ்சள் வாழைப்பழங்களை கூட டாக்டர்களின் ஆலோசனை பெற்று சாப்பிடலாம்.. ஆனால், வாரத்துக்கு 2 சிறிய பழங்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.. இவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டியது பூவம்பழம், ரஸ்தாளி வாழைப்பழங்களாகும்.
ரஸ்தாளி: ரஸ்தாளியை எடுத்துக்கொண்டால், மருத்துவ குணங்கள் குறைவுதான்.. இதில் முக்கியமாக காமாலையை தடுப்பதில் ரஸ்தாளிக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.. வளரும் குழந்தைகளுக்கு இந்த பழம் கட்டாயம் தர வேண்டும்..!!
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications