“மேகதாது அணையை தடுத்து நிறுத்த சோஷியல் மீடியா தான் ஆயுதம்”.. அன்புமணி வெளியிட்ட வீடியோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ரீல்ஸ் போடுங்க, பதிவு போடுங்க, ட்விட்டர்ல, சோஷியல் மீடியாவில் ஷேர் பண்ணுங்க, ஒரு விழிப்புணர்வு கொண்டுவாங்க, நீங்க எல்லாம் சோஷியல் மீடியா மூலமா ஒரு ஆட்சி மாற்றத்தையே கொண்டு வந்திருக்கிறீங்க, நிச்சயமாக மேகதாது அணையை தடுக்கிறது உங்களால் முடியும்" என மேகதாது அணை விவகாரத்தில் இளைஞர்கள் தீவிரம்காட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார் பாமக தலைவர் அன்புமணி.

"காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மாபெரும் சதியை நாம் முறியடித்தாக வேண்டியுள்ளது. காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால் சென்னை முதல் தூத்துக்குடி வரை குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும். காவிரியைக் காக்கும் முயற்சிக்கு கை கொடுங்கள்!" எனப் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் பாமக தலைவர் அன்புமணி.

Anbumani Calls for Mass Support Against Mekedatu Dam to Protect Cauvery Delta

அந்த வீடியோவில் அன்புமணி பேசுகையில், தமிழ்நாடு - கர்நாடகா பார்டர்ல காவிரி ஆறு வரப்போ, அது ஒரு குறுகிய இடத்துல, அதாவது 'கார்ஜ்' அப்படின்னு சொல்லுவாங்க, அது பேர் மேகதாது கார்ஜ். மேகதாது ஏன் இப்போ ஃபேமஸ்னா, கர்நாடகா அரசு மேகதாது அந்த இடத்துல ஒரு டேம் கட்டப்போறோம் நாங்க அப்படின்னு, கிட்டத்தட்ட ஒரு 50 வருஷமா சொல்லிட்டு இருக்காங்க. இப்போ கொஞ்சம் தீவிரமா சொல்றாங்க.

தமிழ்நாட்டுல 8 கோடி மக்கள் இருக்காங்க. இந்த 8 கோடி மக்கள்ல கிட்டத்தட்ட ஐந்தரை கோடி மக்கள் காவிரிய நம்பி இருக்காங்க. அதுல கிட்டத்தட்ட 40 லட்சம் விவசாயிகள். மேட்டூர் டேம்ல 93 டி.எம்.சி-ல இன்னைக்கு 40 டி.எம்.சி தான் இருக்கு. அந்த 40 டி.எம்.சியும் குடிக்கிறதுக்குத்தான் நம்ம வச்சிருக்கோம். காவிரி டெல்டால வந்து குறுவை, சம்பா, தாளடி இந்த மூணுமே நம்ம வந்து கல்டிவேட் பண்றோம். இப்போ குறுவை சீசன். குறுவை சீசன்ல தண்ணி இல்ல.

லாஸ்ட் 7 ஆண்டுகள்ல, 6 வருடங்கள் கரெக்டா ஜூன் 12 மேட்டூர் டேம் குறுவை சாகுபடிக்கு திறந்து விட்டிருக்கிறோம். ஆனா இந்த வருஷம் திறக்க முடியல, ஏன்னா தண்ணி இல்ல. மேகதாது டேம் கட்டிட்டாங்கன்னா, சுத்தமா ஒரு சொட்டு குடிக்கிறதுக்குக் கூட தண்ணி வராது.

எனக்கு என்ன பிரச்சனை? எனக்கு என்ன பாதிப்பு? நீங்க கோயம்புத்தூர்ல இருக்கலாம், கன்னியாகுமரில இருக்கலாம், புதுச்சேரில இருக்கலாம், எங்க வேணா இருக்கலாம், சென்னைல கூட இருக்கலாம். இயற்கை கொடுத்த மிகப்பெரிய வரம் என்பது காவிரி டெல்டா. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நமக்கு இதற்கு முன்பு உணவளித்தது, இனி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நம் வருங்கால சந்ததியினருக்கு அந்த மண் உணவளிக்க வேண்டும். இப்போ அதுல திடீர்னு ஒரு அணை கட்டுனோம்ன்னா, உங்களுக்கு உணவு கிடைக்காது. 'ஃபுட் செக்யூரிட்டி' பிரச்சனை வரும். அதுமட்டுமில்லாம குடிநீர் இல்லாம இருக்க முடியாது. சென்னைல குடிநீர் பிரச்சனைன்னா காவிரி, மதுரைல குடிநீர் பிரச்சனைன்னா காவிரி, சேலம், திருச்சி, டெல்டா எல்லா இடத்துலயும் காவிரிய நம்பித்தான் நம்ம இருக்கோம்.

அதுமட்டுமில்லாம, இப்போ ஐ.நாவுல காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் , சூப்பர் எல் நினோ எஃபெக்ட் எல்லாம் சொல்லிட்டு இருக்காங்க. 'This year is going to be one of the warmest years and we are going to have a severe water shortage'. இந்த காவிரியினால மிகப்பெரிய அளவுல நமக்கு பாதிப்பு இருக்கு. குறிப்பா இளைஞர்கள் நீங்க பாதிக்கப்படுவீங்க. 'Everyone will be affected'.

உங்ககிட்ட நாங்க எதிர்பார்க்கிறது இதை அழுத்தம் கொடுங்க, இதை எல்லாத்துக்கும் ஷேர் பண்ணுங்க, இதை வெளில கொண்டு வாங்க, இதுல ரீல்ஸ் போடுங்க, பதிவு போடுங்க ட்விட்டர்ல, சோசியல் மீடியால ஷேர் பண்ணுங்க, ஒரு அவேர்னஸ் கொண்டு வாங்க. நீங்க எல்லாம் சோசியல் மீடியா மூலமா ஒரு ஆட்சி மாற்றத்தையே நீங்க கொண்டு வந்திருக்கீங்க. நிச்சயமா இந்த மேகதாது அணைய தடுக்கிறதுக்கு உங்களால உறுதியாக முடியும். இதை தடுத்தே ஆக வேண்டும், இதை தடுத்தாதான் என் தமிழ்நாட்டு மக்கள் வருங்காலத்துல சுயமரியாதையோட வாழ முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+