ரூ.30 கோடி மதிப்பு கொண்ட பழனி கோயில் நிலம்.. வெறும் ரூ.2 கோடிக்கு கை மாறியது எப்படி? ஷாக் தகவல்கள்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: கோயில் நிலம் என்பது, அனுபவிப்பதற்காக மட்டும்தான். அதை லாப நோக்கத்திற்காக விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். ஆனால், அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.30 கோடி மதிப்பிலான நிலத்தை, வெறும் ரூ.2 கோடிக்கு சிலர் விற்றிருக்கின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த மோசடி குறித்து தற்போது பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

Palani Temple Land Scam

என்ன நடந்தது?

பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. இந்த கோயில் வெறும் ஆன்மிகம் மட்டுமல்லாது, தமிழர் வரலாற்றிலும் தொடர்புடையது. அப்பேற்பட்ட திருக்கோயிலுக்கு பல்வேறு காலங்களில்.. பலரும் நிலங்களை தானமாக வழங்கியிருக்கின்றனர். அப்படித்தான் கடந்த 1888ம் ஆண்டு குப்புசாமி மணியக்காரர் என்பவரால், கோயிலின் மடத்துக்கு 1.40 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த நிலத்தை விற்கவோ, கை மாற்றவோ கூடாது என்றும், முழுக்க.. முழுக்க திருப்பணிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தான பத்திரத்தில் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது.

பார்க்கிங் ஏரியா

அதன்படி இந்த நிலம் பக்தர்களின் பயன்பாட்டுக்காக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தது. இருப்பினும் கடந்த 60 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இந்த நிலம் இருந்தது. இதை கடந்த ஆண்டுதான் இந்து சமய அறநிலையத்துறை உதவியுடன் கோயில் நிர்வாகம் மீட்டு எடுத்தது. இது இப்போது இலவச பார்க்கிங் ஏரியாவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பழனி கோயில் நில மோசடி.. திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் சசிகலா அதிரடியாக சஸ்பெண்ட்!

விற்பனை செய்ய கூடாது

இந்த நிலத்தை விற்பனை செய்ய கூடாது என்று உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவை பிறப்பித்திருக்கின்றன. பதிவுத்துறை அலுவலகத்திற்கும் இது குறித்து அறிக்கையை அனுப்பியிருக்கின்றன. எனவே பதிவாளர்கள் யாரும் இந்த நிலத்தை விற்காமல் இருந்தனர். இப்படி இருக்கையில்தான், கடந்த 6ம் தேதி வெள்ளத்துரை மற்றும் சேதுபதி என்கிற இரண்டு தனி நபர்களின் பெயரில் இந்த நிலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.

எப்படி நடந்து?

இதை பார்த்து அதிர்ந்த கோயில் நிர்வாகம்.. என்னடா இது கோயில் நிலத்துக்கு வந்த சோதனை? என்று டென்ஷன் ஆனது. அத்துடன் நிற்காமல் உடனடியாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையை நாடியது. கோயில் நிலத்தை கூறு போட்டு விற்றுவிட்டார்கள்.. இந்த பத்திரப்பதிவை ரத்து செய்து.. இதை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோயில் நிர்வாகம் கேட்டது. மறுபுறம் விஷயம் ரொம்பவே சீரியஸானது. எனவே காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

ஒரு நாள் இன்சார்ஜ்

இந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, பத்திரப் பதிவு நடந்த நாளன்று பழனி பதிவாளர் லீவில் சென்றிருக்கிறார். எனவே அன்று ஒரு நாள் மட்டும், கொடைக்கானல் பதிவாளர்.. பழனி பதிவாளர் பொறுப்பை தற்காலிகமாக கூடுதலாக ஏற்றிருக்கிறார். சரியாக அன்றைய தேதியில்தான் ரெஜிஸ்ட்ரேஷன் நடந்திருக்கிறது. கோயில் நிலத்தை விற்க கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறை, பலமுறை பத்திரப் பதிவுத்துறைக்கு கடிதம் அனுப்பியும் கூட இந்த பதிவு நடந்திருக்கிறது எனில்.. முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

கடும் நடவடிக்கை

எனவே தற்காலிக பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்ற திருப்புகழ், வாங்கிய வெள்ளத்துரை மற்றும் சேதுபதி என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மறுபுறம் கோயில் நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பதிவாளரை வெறுமென சஸ்பெண்ட் செய்தது மட்டும் பொருந்தாது.. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

அமைச்சர் விளக்கம்

அதேபோல, இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், "வழக்கமான பதிவாளர் இந்த நிலத்தின் விற்பனையை தடுத்து வைத்திருந்தார். ஆனால், அவர் இல்லாத நேரத்தில் கூடுதல் பொறுப்பில் வந்த மற்றொரு அதிகாரி.. இந்த பதிவை முடித்திருக்கிறார். தற்போது அந்த பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இதில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

போலி தகவல்கள்

மேலும் இந்த விஷயத்தில் என்னுடைய உறவினர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக போலியான, ஆதாரமற்ற தகவல்கள் வெளி வருகின்றன. அப்படியான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் சசிகலாவும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

சட்டத்திற்கு புறம்பாக கை மாற்றப்பட்ட இந்த நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடி என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அதன் மதிப்பு ரூ.30 கோடி என்று போலீசார் கூறியிருக்கின்னர்.

ரூ.30 கோடியோ.. ரூ.3 கோடியோ.. கோயில் நிலம், கோயில் நிலம்தான்! அந்த வகையில் இந்த நிலத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+