சென்னை-பெங்களூர்.. பூமிக்கடியில் போகும் புல்லட் ரயில்! வேகமெடுக்கும் பணிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவுக்கு புல்லட் ரயில் வருவது என்பது கனவு. அதிலும் சென்னை-பெங்களூருக்கு புல்லட் ரயில் வருகிறது எனில்.. இந்தியாவின் வளர்ச்சி பன்மடங்கு அதிகரிக்கும். ஏற்கெனவே இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது புதிய திட்டத்துடன் தீவிரமடைந்திருக்கின்றன.

அதாவது சென்னை-பெங்களூரு இடையே திட்டமிடப்பட்ட புல்லட் ரயில் திட்டம் தற்போது புதிய கட்டத்தை எட்டியிருக்கிறது.

Chennai Bengaluru Bullet Train

இந்த திட்டத்திற்கான விரிவான ஆய்வு அறிக்கையை புதுப்பிக்கவும், புதிய பொறியியல் ஆய்வுகளை மேற்கொள்ளவும், தேசிய அதிவேக ரயில் கழகம் புதிய டெண்டரை வெளியிட்டிருக்கிறது.

இந்த ரயில் பாதை மொத்தம் 306.2 கி.மீ நீளம் கொண்டது. சென்னையில் தொடங்கும் இந்த பாதை.. பூந்தமல்லி, பரந்தூர், சித்தூர், பங்காருபாளையம், கோலார், மாலூர், ஒயிட்ஃபீல்டு என கடைசியாக பெங்களூரு சென்று முடிவடைகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில், நிலத்தடி ரயில் நிலையமாக.. புல்லட் ரயில் நிலையம் அமைய இருக்கிறது. மட்டுமல்லாது இது சென்னை மெட்ரோ ரயில் நிலையத்துடன் இணைக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட இருக்கிறது.

பூந்தமல்லியில், தேசிய நெடுஞ்சாலை 4ல் வடக்கு பகுதியில் உயர்மட்ட ரயில் நிலையம் அமைக்கப்படும். அதேபோல சென்னை ஐசிஎஃப் மற்றும் பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பகுதிகள் வழியாக உயர்மட்ட பாதைகளும் அமைக்கப்பட இருக்கின்றன. பரந்தூரில் பசுமை விமான நிலையத் திட்டம்கைவிடப்பட்டதாக தகவல்கள் வந்தாலும்.. புல்லட் ரயில் திட்டத்தில் பரந்தூருக்கு இடம் உண்டு.

இந்த ரயில் நிலையம் மற்றும் ரயில் வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் வேகமெடுத்து வருகின்றன. குறிப்பாக ட்ரோன் மற்றும் லிடார் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நில அளவீடுகளை செய்தல், மண்ணின் தரம் குறித்த புவிசார் தொழில்நுட்ப ஆய்வுகள், மற்றும் நீரியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

இந்த விரிவான திட்ட அறிக்கையை புதுப்பிக்கும் பணிகள் மற்றும் ஆய்வுகளை 150 நாட்களுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எல்லாம் முடிந்து இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது.. சென்னை-பெங்களூரு இடையேயான பயண நேரம் கணிசமாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+