முதலமைச்சர் விஜய்யை சிவகார்த்திகேயன் ஏன் சந்தித்தார் தெரியுமா? "உங்களுடனான தருணங்கள் ஸ்பெஷலானது"
சென்னை: தமிழக முதல்வர் விஜயை, நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.. இது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.. விஜய் உடனான சந்திப்பு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "மக்களை என்டர்டெயின் செய்தது முதல் மாநிலத்தை வழிநடத்துவது வரை... சில பயணங்கள் அசாதாரணமானவை. தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தது பெருமைக்குரிய விஷயம்" என்று நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.
தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின்போது, தவெக அமோக வாக்குகளை பெற்று கொண்டிருந்தபோதே, பலரும் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டிருந்தார்கள். அதில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருவர்.

சிவகார்த்திகேயன் பதிவு
தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். "போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே மக்கள் மத்தியில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இந்த மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள விஜய் சாருக்கு வாழ்த்துகள். நீங்கள் திரைத்துறையை சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி, மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சார்" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று மீண்டும் முதலமைச்சர் விஜய்யை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சில பயணங்கள் அசாதாரணமானவை
இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில், "இதயங்களை மகிழ்விப்பதில் இருந்து மாநிலத்தை வழிநடத்துவது வரை... சில பயணங்கள் உண்மையிலேயே அசாதாரணமானவை. நமது தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் திரு சி. ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்தது பெருமையாக உள்ளது. ரசிகன் எக்ஸ்பிரஸ், விஜய் அவார்ட்ஸ், GOAT திரைப்படத்தில் இணைந்து நடித்தது என உங்களுடனான ஒவ்வொரு தருணமும் எனக்கு எப்போதும் சிறப்பானதாக இருக்கும். இந்த சகோதரத்துவமும், பந்தமும் தொடரட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவுகள் ஒவ்வொன்றும் அனைவராலும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.. காரணம், சிவகார்த்திகேயன் - விஜய் இடையேயான உறவு குறித்து சோஷியல் மீடியாவில் பல்வேறு விவாதங்கள் தொடர்ந்து எழுந்து வந்தன..
முதலமைச்சர் விஜய்
அதிலும், விஜய் முழுமையாக அரசியலுக்குள் நுழைந்தபோது, தமிழ் சினிமாவில் அவரது இடத்தை சிவகார்த்திகேயன் பிடிக்கப்போகிறாரா என்ற பேச்சுக்களும் கிளம்பின.. குறிப்பாக GOAT திரைப்படத்தில் விஜய் துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் ஒப்படைக்கும் சீனை, சினிமாவில் தனது இடத்தை அவரிடம் வழங்கும் அடையாளமாகவே ரசிகர்கள் பார்த்தனர்.
ஆனால், விஜய்யின் ஜனநாயகம் படமும், சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் ஒரே சமயத்தில் ரிலீஸாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டபோது, நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது.
சிவகார்த்திகேயன் வேண்டுமென்றே விஜய்யுடன் மோத திட்டமிடுகிறார் என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்க தொடங்கினர்... கடைசியில் ஜனநாயகம் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை.. பராசக்தி படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.. ஆனால், இவர்கள் 2 பேருக்குள் நிலவியதாக சொல்லப்பட்ட அந்த மோதல் சர்ச்சை மட்டும் நீண்டுகொண்டே வந்தது.
கடைசியில் இந்த சர்ச்சைக்கெல்லாம் சிவகார்த்திகேயனே முற்றுப்புள்ளியும் வைத்தார்.. சமீபத்தில் சேயோன்" முதல் நாள் ஷூட்டிங்கின்போது, "புதிய முதலமைச்சர் விஜயின் ஆட்சி எப்படி இருக்கிறது சார்?" என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
நெகிழ்ச்சி பதிவுகள்
அதற்கு சிவகார்த்திகேயன், "ரொம்ப நல்லா இருக்கு. எங்க துறையில் இருந்த ஒருவர் முதலமைச்சராகியிருப்பது எங்களுக்கு பெருமை. ரொம்ப சந்தோஷம். அவர் வெற்றி பெற்ற உடனே நான் அவருக்கு கால் பண்ணி வாழ்த்து சொன்னேன். அவர் இப்போதும் அதே பழைய மாதிரியே அமைதியாக இருந்தார். மிகவும் சாதாரணமாக தேங்க்யூ சொல்லி என்னுடைய வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார். அத்துடன் என்ன பண்ணுறீங்க என்றும் கேட்டார்" என்றெல்லாம் சிவகார்த்திகேயன் நெகிழ்ந்து கூறியிருந்தார்.
இன்றைய தினமும் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.. இப்படி தொடர்ந்து சர்ச்சைகளுக்கு இடம் தராமல், இவர்கள் 2 பேரும் தங்களுக்குள் ஒரு ஆரோக்கியமான உறவை நேர்த்தியாக தொடர்வது, இரு தரப்பு ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை தந்து வருகிறது..!!!














Click it and Unblock the Notifications