IAS Reshuffle: சுப்ரியா சாஹு.. வனத்துறை செயலர் டூ தொழில் முனைவோர் மேம்பாட்டு ஆணையராக மாற்றம்!
சென்னை: சமீபத்தில்தான் ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றம் நிறைவடைந்த நிலையில், தற்போது ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி தமிழகம் முழுவதும் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
குறிப்பாக தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு ஆணையராக சுப்ரியா சாகு நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல தற்காலிகமாக ஒரு வருட காலத்திற்கு சில துறைகளில் கூடுதல் தலைமை செயலாளர்கள் மற்றும் செயலாளர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

புதிய பணியிடங்கள்
ஐஏஎஸ் அதிகாரிகளின் புதிய நியமனங்கள் குறித்து தலைமை செயலாளர் எம்.சாய்குமார் வெளியிட்டிருக்கும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "இந்த அரசாணையின்படி தற்காலிகமாக ஒரு வருட காலத்திற்கு பின்வரும் பிரிவுகளில் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் செயலாளர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
யார் யாருக்கு என்ன பொறுப்பு?
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை (MSME), உயர்கல்வித்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை ஆகியவற்றில் கூடுதல் தலைமை செயலாளர் பணியிடங்கள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.
அதேபோல, பொது மற்றும் மறுவாழ்வுத்துறை, போக்குவரத்து, தொழிலாளர் நலன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, கலை மற்றும் பண்பாடு; அருங்காட்சியகங்கள், இந்து சமய அறநிலையத்துறை.. ஆகிய துறைகளில் தற்காலிக செயலாளர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
சிறு குறு மற்றும் நடுத்த தொழில் துறைக்கு (MSME) பிரதீப் யாதவ் ஐஏஎஸ், கூடுதல் தலமை செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல் செயலாளராக அதுல் ஆனந்த் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
- உயர்கல்வித்துறையின் கூடுதல் தலைமை செயலாளராக தீரஜ் குமார் ஐஏஎஸ்
- சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமை செயலாளராக காகர்லா உஷா ஐஏஎஸ்
- பொது மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளராக சுந்தரவல்லி ஐஏஎஸ்
- போக்குவரத்து துறையின் செயலாளராக நிர்மல் ராஜ் ஐஏஎஸ்
- தொழில்துறை ஆணையர் மற்றும் தொழில்துறை மற்றும் வணிகத்துறை இயக்குநராக உமாநாத் ஐஏஎஸ்
- போக்குவரத்து துறை மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையராக சிஜி தாமஸ் வைத்யன்
- தொழிலாளர் நலத்துறை ஆணையராக வள்ளலார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
முக்கிய அதிகாரிகளை பொறுத்தவரை, தொழில்முனைவோர் மேம்பாடு, புத்தாக நிறுவத்தின் கூடுதல் தலைமை செயலாளராக சுப்ரியா சாகு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின் இயக்குநராக ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அதேபோல TNEB, TNGEDCO தலைவராக அருண்ராய் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பூஜா குல்கர்னி, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக வகே சங்கேத் பல்வந்த் ஐஏஎஸ் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
