இறுதி வடிவத்தை எட்டும் பட்ஜெட்! ரிவ்யூ செய்யும் முதல்வர் விஜய்! ஜூலை 16ல் அமைச்சரவை கூட்டம்
சென்னை: ஆகஸ்ட் மாதம் தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. முன்னதாக ஜூலை 16ம் தேதி முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
தவெக தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இந்த பட்ஜெட் அறிவிப்புகள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில், பட்ஜெட் அறிக்கையை முதல்வர் விஜய் இந்த அமைச்சரவை கூட்டத்தில் ரிவியூவ் செய்கிறார்.

கவனம் பெறும் பட்ஜெட்
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 ஆக உயர்த்தப்படும், ஆண்டுக்கு 6 இலவச சமையல் கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என ஏராளமான வாக்குறுதிகளை தவெக கொடுத்திருந்தது. இந்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இப்படி இருக்கையில் கடந்த சில நாட்களாக விஜய், துறை வாரியாக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆய்வு மேற்கொண்டிருந்தார்.
இதனை தொடர்ந்து ஜூலை 16ல் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில், ஏற்கெனவே ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு போல துறை ரீதியாக செய்யப்படும் மாற்றங்கள் குறித்தும், பட்ஜெட் அறிக்கையை இறுதி செய்வது குறித்தும் விஜய் ஆலோசிக்க இருக்கிறார்.












Click it and Unblock the Notifications