லஞ்சம் பெற்ற முன்னாள் தவெக நிர்வாகி அதிரடி கைது! கை மாறிய ரூ.1.30 லட்சம்!
சென்னை: சாலை ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சமாக பெற்றதாக தவெக நிர்வாகியான வீராசாமி மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. தற்போது அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டிருக்கும் நிலையில், அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சாலை அமைத்த தொகைக்கான பில்லை ரிலீஸ் செய்ய ரூ.1.30 லட்சத்தை வீராசாமி லஞ்சமாக பெற்றிருந்தார். லஞ்சம் பெற்றதற்கான வீடியோ ஆதாரங்கள் வெளியான நிலையில் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

என்ன நடந்தது?
செங்கல்பட்டு மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர்தான் வீராசாமி. இவர் தவெகவின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளராக இருக்கிறார். கட்சியில் சேர்ந்தோமா? போஸ்ட்டிங் வாங்கினோமா என்று இல்லாமல், சாலை போட்ட ஒப்பந்ததாரரிடம் கை நீட்டியிருக்கிறார். நவீன் என்கிற அரசு ஒப்பந்ததாரர் மாம்பாக்கம் பகுதியில் ரூ.9.80 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலையை அமைத்திருக்கிறார். இந்த சாலைக்கான பில் அமொண்ட்டை வாங்க வேண்டும் எனில், எனக்கு வெட்ட வேண்டியதை வெட்டு என்று வீராசாமி கேட்டிருக்கிறார்.
இதற்காக ஒப்பந்ததாரர் தரப்பில் ரூ.1.30 லட்சம் பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேரான நிலையில், உடனடியாக கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இதையடுத்து தற்போது அவரை தாம்பரம் போலீசார் கைது செய்திருக்கின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறையின் வாட்ஸ்அப் உதவி எண்களை தமிழக அரசு வெளியிட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே போலீசார் வீசாராமியை கைது செய்திருக்கின்றனர்.
"ஊழல் செய்தால் விட மாட்டோம்! உங்க கிட்ட வந்து யாராவது லஞ்சம் கேட்டால்.. தரமாட்டோம் என்று தைரியமாக சொல்லுங்க! என் பெயரை சொல்லுங்க" என்று முதலமைச்சர் விஜய் பேசியிருந்த நிலையில், தவெகவின் முன்னாள் நிர்வாகியை போலீசார் தட்டி தூக்கியிருப்பது, அக்கட்சியினரிடையே விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.













Click it and Unblock the Notifications