தவெக அரசை விட சேகர் பாபு எவ்வளவோ பரவாயில்லை! பாராட்டித் தள்ளிய கேசி திருமாறன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக அரசுக்கு சேகர் பாபு எவ்வளவோ பரவாயில்லை, கடந்த திமுக ஆட்சியில் அறநிலை துறை சார்பில் ஒவ்வொரு கோயிலுக்கும் கும்பாபிஷேகம் செய்து கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அபகரித்து வைத்த நபர்களிடமிருந்து மீட்டு கோயில் சொத்து கோயிலுக்கே என்று செயலாற்றியவர் சேகர்பாபு என தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவன தலைவர் கேசி திருமாறன் கூறியுள்ளார்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கடந்த சில தினங்களாகவே பெரிய பெரிய சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. குறிப்பாக கோவில் நில விவகாரத்தில் தமிழக வெற்றிக்கழக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

Thirumaran Sekarbabu TVK

கரூரில் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் இனாம் நிலம் பத்திரப்பதிவுக்கு உட்படலாம் என உத்தரவு, பழனி கோவிலில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஏக்கர் 40 சென்ட் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு என பல்வேறு விவகாரங்கள் எழுந்து வருகிறது.

பழனி கோவில் நிலம்

இந்து சமய அறநிலையத்துறை அலட்சியமே இதற்கு காரணம் என சொல்லப்படும் நிலையில், சார் பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்றிய முக்கிய அதிகாரிகள் அடுத்தடுத்து தற்போது சஸ்பெண்ட் மற்றும் கைது நடவடிக்கைக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்ற பிறகு கோவில் நிலங்கள் தாரைவாக்கப்படுவதாகவும் திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த சேகர்பாபு எவ்வளவோ பரவாயில்லை என கூறியுள்ளார் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே சி திருமாறன்.

கேசி திருமாறன்

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," தவெக அரசுக்கு சேகர் பாபு எவ்வளவோ பரவாயில்லை. கடந்த திமுக ஆட்சியில் அறநிலை துறை சார்பில் ஒவ்வொரு கோயிலுக்கும் கும்பாபிஷேகம் செய்து கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அபகரித்து வைத்த நபர்களிடமிருந்து மீட்டு கோயில் சொத்து கோயிலுக்கே என்று செயலாற்றியவர் சேகர்பாபு.

சேகர்பாபு

அரசியல் ரீதியாக பல்வேறு வேறுபாடுகள் முரண்பாடுகள் இருந்தாலும் ஆனால் தற்போது நடக்கக்கூடிய சூழலை கருத்தில் கொண்டோம் என்றால் சேகர்பாபுவின் செயல் தூய்மையான செயலாகவே நாங்கள் இப்போது உணர்கிறோம். தூய அரசு என்று சொல்லக்கூடிய தவெக அரசாங்கம் கோயில் நிலங்களை தனியாருக்கு பட்டா வழங்கி உத்தரவிடுவது நீதிக்கு புறமானது.

அறநிலையத்துறை

பழனி தண்டாயுதபாண சாமிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 40 சென்ட் இடம் 110 கோடி ரூபாய் மதிப்பு, அதேபோல கரூரில் நான்கு கோயில்களின் மதிப்பு 25000 கோடி, இந்த சொத்துக்களை தனியார் அபகரித்துக் கொள்வதற்கு அரசு துணை போய் உள்ளது. கட்சி பெயர்தான் மாறி இருக்கிறது தவிர கருத்திலோ சொல்லிலோ செயலிலோ இந்த அரசாங்கம் ஒருபோதும் மாறவில்லை என்பதற்கு ஒரு சிறு உதாரணமே இச்செயல்.

தவெக அரசு

பழனியில் பதிவு செய்யப்பட்ட நிலத்தை மீண்டும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் அதேபோல கரூரில் போட்ட உத்தரவை தவெக அரசாங்கம் வாபஸ் பெற வேண்டும் என்று தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி வலியுறுத்துகிறது." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+