ஒருபுறம் கன்னட அமைப்பு - மறுபுறம் தமிழக விவசாயிகள் .. மேகதாதுவால் கொளுந்துவிட்டு எரிந்த ஓசூர் எல்லை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காவிரிக்கு குறுக்கே மேகதாதுவில் புதிதாக அணை கட்ட கர்நாடகா அரசு முயன்று வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் தான் நேற்று கர்நாடகா - தமிழ்நாடு எல்லையான ஓசூரின் அத்திப்பள்ளியில் ஒருபுறம் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினரும், மறுபுறம் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருவதால் இருமாநிலங்கள் இடையே பதற்றம் நிலவி வருகிறது.

mekedatu-row-kannada-organizations-and-tamil-nadu-farmers-protest-in-hosur-border

காவிரிக்கு குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அரசு புதிதாக அணை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இன்னும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை. மத்திய அரசிடம் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து அனுமதி கோரி வருகிறது.

ஆனால் மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்காமல் போகலாம். இதனால் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய அமைப்பினர்கள் தொடர்ந்து மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கர்நாடகா அரசு கைவிட வேண்டும். மத்திய அரசு ஒருபோதும் அணை கட்டுவதற்கு அனுமதி கூடாது என்று கூறி வருகின்றனர்.

இதற்கிடையே தான் நேற்றைய தினம் கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கர்நாடகா - தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளியில் போராட்டம் நடத்தப்பட்டது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசின் உரிமை. இதற்கு தமிழக அரசு தடை செய்யக்கூடாது. மேகதாது அணைக்கு தடைபோட தமிழகத்துக்கு எந்த உரிமையும் இல்லை என்று கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் கூறினர். அதுமட்டுமின்றி இனியும் எதிர்ப்பு தெரிவித்தால் தமிழக சட்டசபை முன்பு சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று வாட்டாள் நாகராஜ் கூறினார்.

இதேபோல் மறுபுறம் தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் ஓசூரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். கர்நாடகா அரசு மேகதாதுவில் புதிய அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் கம்பியை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றதோடு, மேகதாதுவில் அணை கட்டக்கூடாது. தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை மாதவாரியாக திறந்து விட வேண்டும் என்று கோஷமிட்டனர்.

mekedatu-row-kannada-organizations-and-tamil-nadu-farmers-protest-in-hosur-border

கர்நாடகா - தமிழ்நாடு எல்லையின் இருபுறங்களிலும் நேற்று நடந்த இந்த போராட்டத்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க எல்லையில் இரும்பு தடுப்புகள் அமைத்து வாகன போக்குவரத்து தடுக்கப்பட்டது. தமிழக அரசு பஸ்கள் ஓசூரிலேயே நிறுத்தப்பட்டன. கர்நாடகா அரசு பஸ்சும் தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் நேற்று சிரமத்தை எதிர்கொண்டனர். இந்த போராட்டம் முடிவடைந்த பிறகு இருமாநிலங்கள் இடையே மீண்டும் போக்குவரத்து சீரானது.

இப்படி மேகதாது அணை தொடர்பான விவகாரம் இருமாநிலங்களுக்கு இடையே விஸ்வரூபமெடுத்துள்ளது. கர்நாடகா அரசு அணை கட்டியே தீருவோம் என்று உறுதியாக உள்ளது. அதற்கு ஆதரவாக கன்னட அமைப்பினர் களத்தில் இறங்கி உள்ளனர். மறுபுறம் தமிழக எதிர்க்கட்சியினர், விவசாய அமைப்பினர் அதனை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இருந்தாலும் தமிழக முதல்வர் விஜய் மேகதாது அணை விவகாரத்தில் இன்னும் வாய் திறக்காமல் மவுனமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+