கோட்டையில் அமைச்சர்கள் ரூமில் ஒரே கூட்டமாமே? சென்னையில் தவெக நிர்வாகிகள் பிஸி! ஓஹோ இதுதான் விஷயமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற தவெக தலைமை தீவிரமான தேர்தல் உத்திகளை வகுத்து வருவதாக தெரிகிறது.. அதன் ஒரு பகுதியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் நிலவும் அலைமோதும் கூட்டம், தவெக தரப்பில் கையிலெடுக்கப்படும் வியூகங்கள் தமிழக அரசியலில் பல விவாதங்களை உருவாக்கியுள்ளன..!!

கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் தவெக ஆட்சி நடந்து வருகிறது.. அப்போது முதலே அரசியல் களத்தில் புதுபுது ட்விஸ்ட்கள், திடீர் திடீர் மாற்றங்கள், கட்சி தாவல்கள், நடந்து கொண்டிருக்கின்றன.

TVK

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்

இப்படிப்பட்ட சூழலில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை இப்போதே தவெகவினர் குறிவைத்து ஆர்வம் காட்டுவது, பலரையும் வியக்க வைத்து வருகிறது. அதைவிட முக்கியமாக, சென்னை தலைமைச் செயலகமே மக்கள் கூட்டத்தால் நாளுக்கு நாள் ஸ்தம்பித்துப் போயுள்ளதாம்.

காரணம், மாவட்டங்களில் உள்ள தவெக நிர்வாகிகள் தங்களின் உள்ளூர் செல்வாக்கை நிரூபிக்கவும், கட்சியினரிடையே நற்பெயர் பெறவும் தங்களது வார்டு மற்றும் கிராம பகுதி பொதுமக்களை பஸ்கள், ரயில்கள், கார்களில் சென்னைக்கு அழைத்து வருகிறார்களாம்..

தலைமைச் செயலகத்தில் கூட்ட நெரிசல்

முதலமைச்சரின் தனிப்பிரிவிடமும், அமைச்சர்களிடமும் நேரடியாக மனு அளித்தால், தங்களது கோரிக்கைகள் எப்படியும் உடனே நிறைவேறிவிடும் என்று இவர்களை அழைத்து வருகிறார்களாம்.

அதுமட்டுமல்ல, அமைச்சர்களை சந்தித்து தங்கள் காரியங்களை சாதிக்கவும், கட்சியில் முக்கிய பதவிகளை பெறவும் தவெகவினர் தங்களின் ஆதரவாளர்களுடன் அமைச்சர்களின் ரூம்களிலேயே காலை முதல் சாயங்காலம் வரை முற்றுகையிடுவதாகவும் தெரிகிறது.

இதன் காரணமாக, தலைமைச் செயலகத்திற்கு உள்ளேயும், வாகனங்கள் நிறுத்தும் பார்க்கிங் இடங்களிலும் நெரிசல் ஏற்படுகிறதாம்.

அமைச்சர்கள் ரூம்களில் கூட்டம்

இந்த சிக்கலை தீர்க்க, அமைச்சர்கள் தங்களது மாவட்டங்களிலேயே நேரடியாக முகாம்களை நடத்தி மனுக்களை பெறலாம் என்றும், பொதுமக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளிக்க எம்எல்ஏ அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்களை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்கலாம் என்றும் தலைமைச் செயலக அதிகாரிகள் தரப்பில் யோசனைகள் முன்வைக்கப்படுகிறதாம்.

தவெக எடுக்கும் வியூகங்கள்

இந்த பரபரப்பு ஒருபுறமிருந்தாலும், உள்ளாட்சித் தேர்தலில் தவெகவினர் காட்டும் ஈடுபாடுதான், அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது. இதையெல்லாம் பார்த்தால், எப்படியாவது மெஜாரிட்டியுடன் மகுடம் சூட வேண்டும் என்பதே தவெகவின் தேர்தல் இலக்காக இருக்கும் என தெரிகிறது.

சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தாலும், உள்ளாட்சித் தேர்தலில் தன்னுடைய சொந்த பலத்தை நிரூபித்து, தங்களை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக நிலைநிறுத்திவிட வேண்டும் என்பதில் அக்கட்சியின் தலைமை உறுதியாக உள்ளது.. இதற்காகவே சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பிற கட்சிகளின் அதிருப்தி நிர்வாகிகளை குறிவைத்து, பனையூர் தலைமையகத்தில் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன..

செல்வாக்கு நபர்களை வளைக்க திட்டம்?

அதேபோல மற்ற கட்சிகளில் ஓரங்கட்டப்பட்டவர்கள், மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்தவர்கள் போன்றோர்களையும் லிஸ்ட் எடுத்து, அவர்களையும் இழுக்க தவெக தரப்பில் வலைவீசப்பட்டுள்ளதாம். மற்றொருபக்கம், அடிமட்டத் தொண்டர்களுடன் நேரடித் தொடர்பிலுள்ள உள்ளூர் செல்வாக்கு மிக்க நபர்களை வளைப்பதன் மூலம் உள்ளாட்சி தேர்தலை சாதகமாக எதிர்கொள்ள முடியும் என்று தவெக தரப்பு நம்புகிறதாம்.

இதனிடையே, சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் மக்கள் செல்வாக்கு மிக்க, அறிமுகமான நபர்களை வேட்பாளர்களாக நிறுத்தவும் தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்... இப்படி பலவித வியூகங்கள் கையிலெடுக்கப்பட்டாலும்,வரப்போகும் உள்ளாட்சித் தேர்தல் களத்தில் எந்தளவுக்கு இவையெல்லாம் மாற்றங்களை ஏற்படுத்தப் போகின்றன என்பது தெரியவில்லை.. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+