Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இளநீரை நேரடியாக குடிக்க கூடாது.. கிளாசில் ஊற்றி தான் குடிக்கனும்.. ஏன்? எக்ஸ்பர்ட்ஸ் சொல்றதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளநீரை கடைகளில் வாங்கி குடிக்கும் போது அப்படியே குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், இல்லையெனில், சில உடல் நலக்கோளாறுகள் ஏற்படலாம் என்கிறது புதிய ஆய்வு.. பலருக்கும் ஆச்சரியம் தரும் இந்த தகவல் தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் கூறியிருப்பதை இங்கே பார்க்கலாம்.

கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படாமல் இருக்க நீர் ஆகாரங்களை மக்கள் அதிகம் சாப்பிடுவது அவசியம். வெறும் தண்ணீர் மட்டும் குடிப்பதை தவரித்து வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, இளநீர், நுங்கு, பதனீர் என நீர்சத்து மிக்க ஆகாரங்களை மக்கள் அதிகம் குடிப்பதை பார்க்க முடியும். அதிலும் இளநீருக்கு தனி மவுசு உண்டு.

Do Not Drink Water from Coconut Directly suggest Experts here is the reason

இளநீரை பொறுத்தவரை ஆண்டு முழுக்க கிடைத்தாலும்.. வெயில் காலத்தில் இதற்கு டிமாண்ட் அதிகம்.. சாலையோரங்களில் ஆங்காங்கே இளநீர் விற்பனை செய்யப்படுவதை காண முடியும். தேசிய நெடுஞ்சாலைகளில் கூட சுங்கச்சாவடி அருகே எப்படியும் நான்கைந்து இளநீர் கடைகளை பார்த்து விடலாம்..

காரில் வருபவர்கள் முதல் டூவிலர்களில் செல்பவர்கள் வரை அனைவரும் நின்று இளநீரை குடிப்பதை பார்க்க முடியும். இளநீரை பொறுத்தவரை இயற்கையான பானம்.. கலப்படமற்றது என்பதால் இயல்பாகவே மக்கள் இதை அதிகம் விரும்புவார்கள். இதற்கு இளநீரின் ருசியும் ஒரு காரணமாக இருந்தாலும், இளநீர் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகளும் இருக்கின்றன.

குறிப்பாக வெயில் காலத்தில் உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்ஸ் நீர்சத்து மூலமாக வெளியேறுகிறது. அதை மீண்டும் உடலுக்கு அளிக்க கூடியது இளநீர்தான். உடலுக்குத் தேவையான பொட்டாசியம் , சோடியம், கால்சியம் போன்ற மிரல்ஸ் மூலமாக எலக்ட்ரோலைட்ஸ் கிடைக்கின்றன. இப்படி இளநீரால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை சொல்லிக் கொண்டே போகலாம்...

ஆனால், இளநீரை கடைகளில் வாங்கி குடிக்கும் போது அப்படியே குடிப்பதை தவிர்க்க வேண்டுமாம்.. இல்லையென்றால் சில உடல் நலக்கோளாறுகள் ஏற்படலாம் என்கிறது புதிய ஆய்வு.. எதுவுமே புரியாத மாதிரி இருக்கிறதா... அதாவது இளநீரை வாங்கி நாம் நேரடியாக ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி குடிக்க வேண்டாம் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கு காரணம்.. சில இளநீருக்குள் பொதுவாக உணவுப்பண்டங்களில் வளரக்கூடிய பூஞ்சைகள் வளர்ந்து இருக்க வாய்ப்புள்ளதாம்.. இப்படி பூஞ்சைகள் வளர்ந்து இருந்தால் இளநீரின் சுவை கெடுவதோடு அதில் உள்ள சத்துக்களும் இல்லாமல் போகும். அது மட்டும் இன்றி அலர்ஜி, சுவாச பிரச்சினைகள் ஆகிய உடல் நல பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மைக்கோடேக்சின் போன்றவையும் இளநீருக்குள் இருக்க வாய்ப்புள்ளதாம்.. எனவே எப்போதுமே இளநீரை நேரடியாக அப்படியே குடிக்காமல்.. சுத்தமான ஒரு கண்ணாடி கிளாசில் ஊற்றி தூய்மையானதாகவும் நாற்றம் இன்றியும் இருப்பதை உறுதி செய்த பின்னர் குடிக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்..

எனவே, இனி சலையோரங்களில் இளநீர் வாங்கினால் கூட நேரடியாக குடிக்காமல் தனியாக கிளாசில் வைத்து குடிப்பதே உடல் நலனுக்கு நல்லது என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. ஏனெனில், உணவு பொருட்களில் வளரக் கூடிய அச்சு பூஞ்சை (mold) மூக்கு ஒழுகுதல், அலர்ஜி, உடலில் அரிப்புகள், தடிப்புகள், மூச்சு விடுவதில் சிரமம், இருமல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புகள் இருக்கிறதாம்..

எனவே, நாம் சாப்பிடும் உணவு பொருட்கள் சுத்தமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருப்பது அவசியம் என்கிறார்கள் நிபுணர்கள். பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் இதுபோன்ற பூஞ்சைகள் வளரக் கூடும் என்பதால் அவற்றை உரிய முறையில் ஸ்டோரேஜ் செய்து வைக்க வேண்டியது அவசியம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+