டிவி பார்த்துக்கொண்டே தூங்கும் பழக்கம் இருக்கா? உடனே மாற்றிடுங்க.. பாதிப்புகளை அடுக்கும் நிபுணர்கள்
சென்னை: செல்போன் பயன்படுத்தும் பழக்கம் மக்கள் மத்தியில் பெருகிவிட்டாலும் டிவி மீதான மவுசும் இன்னும் குறைந்தபாடில்லை. பலரும் வீட்டில் இரவு நேரங்களில் டிவியை ஓட விட்டபடியே தூங்கி விடுகிறார்கள். இப்படி செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி இங்கே காணலாம்.
தற்போதைய 2கே கிட்ஸ்களின் காலத்தில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் பழக்கம் மக்கள் மத்தியில் அபரிமிதமாக பெருகிவிட்டது. அனைவரும் கையில் ஆறாம் விரலை போல செல்போனை வைத்துக் கொண்டே சுற்றுவதை பார்க்க முடிகிறது. பேருந்துகளில் போனாலும் சரி, ரயிலிலும் போனாலும் சரி ஏன் நடந்து போனால் கூட குனிந்த தலை நிமிராமல் எதிரில் என்ன நடக்கிறது என்று கூட கவனிக்காமல் பலரும் செல்போனும் கையுமாக அலைவதை காண முடிகிறது.

இப்படி செல்போன் பயன்படுத்தும் பழக்கம் பெருகிவிட்டாலும் டிவிக்கள் மீதான மவுசும் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. மக்கள் முன்பு போலவே டிவிக்களை பொழுதுபோக்குக்காக சார்ந்து இருப்பது கணிசமாக குறைந்து விட்டாலும் டிவிக்கள் பார்க்கும் பழக்கமும் மக்கள் மத்தியில் அறவே ஓயவில்லை. இன்னும் சீரியல்கள், டிவி நிகழ்ச்சிகள் ஆகியவற்றை டிவியில் பார்க்க தனி மவுசு இருக்கவே செய்கிறது.
அதுவும் ஒளியும் ஒலியும் பார்த்த 90, 80 கிட்ஸ்கள் எல்லாம் அந்த நன்றிக் கடனுக்காவோ என்னவோ இன்னும் டிவிக்களை பார்க்க தவறுவதில்லை என்று சொல்லிவிடலாம். சொல்லப்போனால் பல வீடுகளிலும் டிவி ஓடினாலும் அதை பார்க்கிறார்களோ இல்லையோ அது ஒருபக்கமாக ஓடிக்கொண்டு இருக்கும். இவர்கள் ஒருபக்கமாக செல்போனில் எதையாவது பார்த்துக் கொண்டு இருப்பதையும் காண முடிகிறது.
ஆனாலும் என்னதான் செல்போனில் விரும்பிய பாடல்களையும் படங்களையும் கிரிக்கெட் போட்டிகளையும் பார்த்தாலும் டிவியில் பார்த்த மாதிரி வருமா? என பலரும் தவறாமல் டிவி முன் அமர்ந்து விடும் பழக்கத்தை கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சிலரோ டிவி பார்த்துக் கொண்டே தூங்கிவிடவும் செய்கிறார்கள்.
ஆனால், இப்படியான பழக்கத்தை தொடரக்கூடாது என்றே ஆய்வு ஒன்று சொல்லியிருக்கிறதாம். இது குறித்த விவரம் வருமாறு:- டிவி பார்த்துக் கொண்டே தூங்குவதால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாம். அதாவது டிவியில் இருந்து வெளிப்படும் நீல நிற ஒளி உடல் நலத்திற்கு நல்லது இல்லையாம். டிவியில் இருந்து ப்ளூ ரே எனப்படும் நீல ஒளி வெளிப்படுகிறது.
இது விழித்திரைக்கு பாதிப்பை ஏற்படுத்துமாம். எலிகளை கொண்டு இது தொடர்பாக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தியிருக்கிறார்கள். அந்த ஆய்வில், எலியில் கண்களில் விழித்திரை வழியாக ஊடுருவிய நீல ஒளியின் தாக்கம் காரணமாக அந்த பகுதி கருப்பு நிறத்தில் மாறிவிட்டதாம். இதனால், இரவில் டிவி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும் அபாயம் அதிகம் இருக்கிறதாம்.
டிவியில் இருந்து வரும் நீல ஒளி, தூங்கிய பிறகும் மூளையை விழிப்பு நிலையிலேயே வைத்திருக்கும். எனவே, மூளைக்கு போதுமான ஓய்வு கிடைக்காமல் சோர்வு உண்டாகி மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது வேறு பல உடல் நல பாதிப்புகளுக்கு வித்திடும். எனவே டிவி பார்த்துக்கொண்டே தூங்கும் பழக்கம் இருந்தால் அதை கைவிடுவது நல்லது என்றே நிபுணர்களின் பொதுவான வாதமாக உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications