பழனி கோவில் நிலமுறைகேடு.. முதல்வர் விஜய் இன்று நடத்தும் முக்கிய மீட்டிங்! நேரில் வரும் ரமேஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் விஜய் துறை வாரியாக ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று அறநிலையத்துறை குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இன்று பிற்பகலில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தக் கூட்டத்தில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், துறை செயலாளர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

பழனி கோயில் நில முறைகேடு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இன்றைய ஆய்வுக்கூட்டத்தில் அது பற்றி முதல்வர் விஜய் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலாத்துறை பற்றிய ஆய்வுக்கூட்டமும் இன்று நடைபெறுகிறது. பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் மற்றும் துறை ரீதியாக மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Palani temple land irregularities Vijay Ramesh


பழனி கோவில் நில முறைகேடு புகார்

பழனி முருகன் கோயில் அடிவாரத்தில் தண்டபானி சுவாமி மடத்தின் அறக்கடளைக்கு சொந்தமாக 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடி என கூறப்படுகிறது. முருகன் கோவில் நிர்வாகம் அந்த நிலத்தை நிர்வகித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துமிடமாக அது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், கடந்த 6 ஆம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2 கோடிக்கு கிரயமாக அந்த நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

இது கோவில் பக்தர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிலத்தை முறைகேடாக பதிவு செய்த பொறுப்பு சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விழுப்புரத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் முருகதாஸ் , நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

அறநிலையத்துறை குறித்த ஆய்வுக்கூட்டம்

நிலத்தை தனியாருக்கு பத்திரப்பதிவு செய்தது செல்லாது என்று நீதிமன்றமும் உத்தரவிட்டது. நில முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ்க்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதனை அவர் திட்டவட்டமாக மறுத்தார். இந்த பரபரப்புக்கு சர்ச்சைகளுக்கு நடுவேதான் அறநிலையத்துறை குறித்த ஆய்வுக்கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அமைச்சர்கள் யாராவது முறைகேட்டில் ஈடுபட்டால் தெரிந்தவர்கள் என்றல்லாம் பார்க்க மாட்டேன்.. யாராக இருந்தாலும் பதவி பறிக்கப்படும் என்று முதல்வர் விஜய் ஏற்கனவே எச்சரித்து இருந்தார். பழனி கோவில் நில முறைகேடு சர்ச்சை விவகாரத்தில் முதல் விஜய் கடும் அப்செட் ஆகியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சூழலில் தான், இன்று நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் இதுபற்றி விரிவான விளக்கத்தை கேட்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பக்கூடும்

இன்று பிற்பகலில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தக் கூட்டத்தில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், துறை செயலாளர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். பழனி கோயில் நில முறைகேடு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இன்றைய ஆய்வுக்கூட்டத்தில் அது பற்றி முதல்வர் விஜய் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+