மீனுடன் "அதை" சேர்த்து சாப்பிடாதீங்க.. விஷமாயிரும்.. காலை டிபனுக்கு பெஸ்ட் சாய்ஸ் எது தெரியுமா? அருமை
சென்னை: நாம் சமைக்கும்போது சில விஷயங்களை, நமக்கே தெரியாமல் செய்து கொண்டிருக்கிறோம்.. எந்த உணவுடன், எந்த உணவை கலந்து சாப்பிடக்கூடாது என்ற விழிப்புணர்வு நமக்குள் தேவை என்கிறார்கள்.
தயிர் உடலுக்கு நன்மைகளை தரக்கூடியது என்றாலும், சில உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம் என்கிறார்கள்.. குறிப்பாக, பிரியாணியில் சாப்பிடும் தயிர் வெங்காய பச்சடியை தவிர்க்க வேண்டுமாம்.

காரணம், தயிர் குளிர்ச்சியை தரக்கூடியது, வெங்காயம் சூட்டை கிளப்பிவிடக்கூடியது.. எதிரெதிர் குணங்களை கொண்டதால், இவைகளை சேர்த்து சாப்பிடுவது அஜீரணத்தை தந்துவிடுகிறது.. அதனால்தான், அசைவத்துடன் வெறும் வெங்காயம் சேர்த்து சாப்பிடலாம்.. ஆனால், தயிரோடு மட்டும் கலந்து சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.
இதையேதான், தயிருடன், மீன், கீரைகளை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பார்கள்.. செரிமானத்தை மந்தப்படுத்தும் தன்மை தயிருக்கு உண்டு...அப்படிப்பட்ட தயிரை, சத்து அதிகமான மீனுடன் சேர்த்து சாப்பிடும்போது செரிமானம் தாமதமடைந்து, சத்துக்கள் முழுமையாக கிடைக்காமல் போய்விடும். எனவே, மீன், தயிர் இரண்டையும் தனித்தனியாக சாப்பிடுவதே ஆரோக்கியம் என்கிறார்கள்.
கீரைகள்: தயிர் + கீரைகள், தயிர் + கருவாடு, மாம்பழம் + தயிர், இப்படி எதையுமே சேர்த்து சாப்பிடக்கூடாது.. தயிருடன் இவைகள் சேரும்போது, செரிமான பிரச்சனையை ஏற்படுத்தி, அஜீரணத்தை கொண்டுவந்துவிட்டுவிடும்.. இதுகுறித்து, பிரபல ஆயுர்வேத டாக்டர். ரேச்சேல் ரெபெக்கா ஒரு டிவி பேட்டியில் விரிவாக சொல்கிறார். அஜீரணம் தரக்கூடிய உணவுகளை தவிர்த்தாலே, ஆரோக்கியம் கிடைக்கும் என்று உறுதியாக கூறுகிறார்.
"சாப்பிடும் விஷயத்திலேயே நிறைய முறைகள் உள்ளன.. குறிப்பாக, மீனுடன் தயிருடன் சாப்பிடக்கூடாது.. நல்லெண்ணெய்யில் இறைச்சியில் சமைக்கக்கூடாது.. நாம் சாப்பிட்டதுமே தூங்கக்கூடாது.. அதேபோல, உஷ்ணமான உணவை சாப்பிட்டதும், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவை சாப்பிடக்கூடாது..
சிறுதானியம்: உதாரணத்துக்கு, குளிர்ச்சியான கற்றாழை ஜூஸ் குடிக்கிறோம் என்றால், உடனே அன்னாசி, பப்பாளி போன்ற சூடு தரக்கூடிய உணவுகளை சாப்பிடக்கூடாது. அதேபோல, இட்லி, தோசையிலிருந்து முதலில் விடுபட வேண்டும். அன்றைய நாளில், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமே சாப்பிட்டு, மற்ற நாட்களில் சிறுதானியங்களை சாப்பிட்டு வந்ததால் ஆரோக்கியம் தழைத்தது.. எனவே, வாரத்துக்கு 4 நாட்களாவது சிறுதானியத்தில் காலை உணவு செய்து சாப்பிடலாம்.
அந்தவகையில், சிவப்பு அவல் மிகவும் நல்லது.. அவல் உப்புமா செய்யலாம், தேங்காய் துருவி சேர்த்து சாப்பிடலாம் அல்லது அவலில் வெல்லம் கலந்து சாப்பிடலாம். ஆனால், உணவில் நாம் முக்கியமாக தவிர்க்க வேண்டியது, உளுந்து, உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், தயிர், காலிபிளவர், முட்டைக்கோஸ், இவைகள்தான்..
அஜீரணம்: இதற்கு காரணம், நமக்கு பெரும்பாலான உடல்நல கோளாறுகள் ஏற்பட காரணமே அஜீரணம்தான்.. இந்த உணவுபொருட்கள் அஜீரணத்தை தரக்கூடியது என்பதால், இவைகளை தவிர்த்தாலே பாதி பிரச்சனைகள் நீங்கிவிடும். ஜீரணம் நமக்கு எளிதாகிவிட்டாலே, நோய்கள் அண்டாது" என்கிறார்.












Click it and Unblock the Notifications