உடலுறவின்போது ரத்தப்போக்கு.. உலுக்கிய குஜராத் சம்பவம்.. உறவின்போது பெண்களுக்கு ரத்தக்கசிவு வர காரணம்?
காந்தி நகர்: குஜராத் சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், உடலுறவுக்கு பிறகு பெண்களுக்கு ரத்தப்போக்கு ஏற்படுமா? அப்படி ரத்தக்கசிவு ஏற்பட என்ன காரணங்கள்? என்பதை பற்றியெல்லாம் தெரிந்து கொள்வது அவசியமாகும். அப்போதுதான் உரிய நேரத்தில் சிகிச்சையையும் பெற முடியும்.
குஜராத்தில் நேற்றைய தினம் பயங்கரமான சம்பவம் ஒன்று நடந்தது.. சோஷியல் மீடியா மூலம் பழக்கமான, நர்சிங் மாணவியை, காதலிப்பதாக சொல்லி ஓட்டல் ரூமுக்கு அழைத்து சென்றுள்ளார் 26 வயது இளைஞர்.

ஓட்டலுக்குள் சென்றதும் இருவரும் உடலுறவு கொண்டுள்ளார்.. அப்போது அந்த பெண்ணுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.. அப்போதும்கூட தொடர்ந்து உடலுறவில் ஈடுபட்டுள்ளார் இளைஞர்.
அதிக ரத்தப்போக்கு: பிறகு, அந்த பெண்ணுக்கு அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.. இதை பார்த்து பயந்துபோன இளைஞர், ரத்தத்தை எப்படி நிறுத்துவது என்று யோசித்துள்ளார். எனவே, "உடலுறவின் போது ரத்தப்போக்கு நிறுத்த என்ன செய்ய வேண்டும்" என்று கூகுளில் தேட ஆரம்பித்தார். பிறகு, பெண்ணின் உறுப்பில் ரத்தம் வரவராமல் இருக்க துணியை அழுத்தி ரத்தத்தை தடுக்க முயன்றுள்ளார்... உடனே அந்த பெண் மயக்கமடைந்திருக்கிறார்.
அதற்கு பிறகுதான், மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார். ஆனால் அந்த பெண் இறந்துவிட்டார்.. ரத்தப்போக்கு ஏற்பட்டதுமே ஆம்புலன்சுக்கு போன் செய்யாமல், ஆன்லைனில் ஐடியா தேடி, கிட்டத்தட்ட 1 மணி நேரத்துக்கும் மேலாக நேரத்தை வீணடித்துள்ளார் இளைஞர்.. அத்துடன், துணியை எடுத்து, பெண்ணுறுப்பில் அழுத்தி ரத்தத்தை தடுக்க முயன்றது ஆபத்தாகிவிட்டது. இப்போது அந்த இளைஞர் சிறையில் உள்ளார்..
உடலுறவு: உடலுறவுக்கு பிறகு ரத்தகசிவு ஏற்படுவது பெரும்பாலான நேரங்களில் ஒரு தீவிரமான பிரச்சனையாக இருக்காது.. ஆனால் இதுவே தீவிரமான ரத்தப்போக்கு இருந்தால், அதை அலட்சியப்படுத்த முடியாது.. எனவே, ரத்தப்போக்குக்கான காரணங்களை தெரிந்து கொள்வது, மிகவும் நல்லது.
முதல் முறையாக உடலுறவுக்கு பிறகு கன்னித்திரை கிழிந்து உதிரம் வெளியேறுவதும், யோனியின் உட்புற சுவர்கள் உராய்வால் கசிவு உண்டாவதும் பிரச்சனையாக இருப்பதில்லை.. மாதவிடாய் நேரங்களில், பெண்களின் உணர்ச்சி அதிகமாக இருக்கும் என்பதால், இந்த நேரத்தில் உடலுறவு கொள்ளலாம் என்று சிலர் சொல்வார்கள். ஆனால், சுகாதாரம், ஆரோக்கியம் போன்றவற்றை கவனத்தில் கொண்டு, உடலுறவு கொள்ளாமல் இருப்பதே சிறந்தது என்று அறிவுறுத்துகிறார்கள் டாக்டர்கள்.
உதிரப்போக்கு: உடலுறவுக்கு பிறகு ரத்தப்போக்கு, இளவயது பெண்களைவிட, 35 வயதை தாண்டியவர்களுக்கே அதிகம் ஏற்படுகிறதாம்.. சிறுநீரில் ரத்த துளிகள் போல வெளியேறலாம்.. அதேபோல, கருத்தரிக்கும்போது, கருத்தடை மாத்திரைகள் அதிகமாக பயன்படுத்தும்போதும், ரத்தப்போக்கு வரலாம்.. தைராய்டு, கல்லீரல் உறுப்பு குறைபாடு,
ஹார்மோன் சிகிச்சை பெறும்போது அல்லது பெண் உறுப்பு அல்லது இடுப்பு பகுதியில் பெரிய காயம் ஏற்படும்போதும் உதிரப்போக்கு ஏற்படலாம். சிலசமயம், நோய்த்தொற்றின் காரணமாகவும் ரத்தப்போக்கு வரலாம்..
தொற்றுகள்: பாலியல் தொற்றுகளும் பெண்ணுறுப்பில் ரத்தம் வடிவதற்கு காரணமாகின்றன. பெண்ணுறுப்பில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுகள் அல்லது ஈஸ்ட் தொற்றுகள் பெண்ணுறுப்பு திசுக்களில் வீக்கம், எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். இதனாலும் உடலுறவின்போது ரத்தம் வருகிறது. இந்த தொற்றுகளுக்கு நிச்சயம் மருத்துவ சிகிச்சைகள் அவசியம் செய்ய வேண்டும்.
கருப்பை வாயில் அதிகளவிலான செல்கள் வளரும்போது கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. உடலுறவின்போதும், பின்னரும் ரத்தம் வருவது கருப்பை வாய் புற்றுநோயின் முக்கிய அறிகுறியாகும். எனவே, 30 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். சல்மிடியா, கோனோரா, டிரைக்கோமோனியசிஸ், ஹெர்ப்ஸ் ஆகியவை கருப்பை வாயில் கட்டி ஏற்பட காரணமாகிறது. அதற்கு செர்விக்டிஸ் என்று பெயர். உடலுறவின்போது, கருப்பை வாயில் எரிச்சல் ஏற்பட்டு ரத்தக்கசிவு ஏற்படுகிறது.
புற்றுநோய்: புற்றுநோய் பாதிப்பு இருந்தாலும், கட்டிகள் அல்லது இயல்பற்ற உறுப்பு வளர்ச்சிகளின் காரணமாகவும் ரத்தப்போக்கு ஏற்படலாம்என்கிறார்கள். எனவே, உடலுறவுக்கு பிறகு ரத்தக்கசிவு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவர்களை சந்திக்க வேண்டும்.. அதற்குரிய காரணங்களை அறிந்தால்தான், முறையான பரிசோதனையை செய்து கொள்ள முடியும்..!!












Click it and Unblock the Notifications