மருதாணி இலைகள்.. மலைப்பை தரும் மருத்துவம்.. நகச்சுத்தி முதல் நரம்பு செயல்பாடுகள் வரை உதவும் மருதாணி
சென்னை: மருதாணி இலைகள் தலைமுடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.. அதேசமயம் சரும ஆரோக்கியத்தை எந்த வகையில் மருதாணி இலைகள் காக்கின்றன தெரியுமா?
பித்தத்தை நீக்கக்கூடிய குணம், மருதாணிகளுக்கு உள்ளது. அதனால்தான, கை, கால் விரல்களில் மருதாணி பூசப்படுகிறது. இதனால், மனநோய் ஏற்படுவது தடுக்கப்பட்டுவிடும்...

நச்சுக்கள்: வெறும் மருதாணி இலையை, தண்ணீரில் கொதிக்க வைத்து, இரவு உணவுக்கு பிறகு குடித்து வந்தால், ரத்தம் தூய்மையாகும், ரத்தத்திலுள்ள நச்சுக்களும் வெளியேறும். அதிக மாதவிடாய், வெள்ளைப்போக்கு பிரச்சனை உள்ள பெண்களுக்கு மருதாணி கை கொடுக்கும்.
சரும நலனில் எந்த அளவுக்கு மருதாணி இலைகள் உதவுகின்றன தெரியுமா? நம் உடலிலுள்ள நரம்புகளின் செயல்பாட்டை தூண்டக்கூடியது மருதாணி இலைகள்.. நம்முடைய உடலிலுள்ள அனைத்து நரம்புகளின் பிரதிபலிப்பு புள்ளிகளும், உள்ளங்கையில்தான் குவிந்திருக்கின்றன. அதனால்தான், உள்ளங்கையில் மருதாணி வைக்கப்படுகிறது. இதனால், உடலிலுள்ள அனைத்து நரம்புகளும் வலுவடைகின்றன.
நீரிழிவு நோய்: அதேபோல, நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்புகள் எளிதில் பலவீனமாகிவிடும். அதனால் காலில் சரியான ரத்த ஓட்டமும் கிடைக்காது. மேலும், பாதங்களில் ஒருவித எரிச்சலும், குடைச்சலும் இருந்துகொண்டே இருக்கும். இதற்கு கை கொடுக்கிறது மருதாணி இலைகள்.
சொரியாசிஸ்சில், குஷ்டம் உள்ளிட்ட பெரிய பெரிய தோல் வியாதிகளுக்கு அன்று முதல் இன்றுவரை மருந்தாகிறது இந்த மருதாணி இலைகள். கால் விரல்களிலும், பாதங்களிலும், உள்ளங்கைகளிலும் மருதாணியை அரைத்து பூசும்போது ரத்த ஓட்டம் சீரடைகிறது. பித்தங்கள் விலகுகின்றன. பித்தம் விலகினாலே மனநிலை சிதறல், மனநோய் போன்ற எந்த தொந்தரவும் ஏற்படாமல் இருக்கும்.
நகச்சுத்தி: நகச்சுத்தி வந்தாலும் இந்த மருதாணியை அரைத்து விரலுக்கு வைத்தால் பலன் கிடைக்கும். மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் கட்டிவந்தால், ஒரே வாரத்தில் சரியாகும்.
சேற்றுப்புண், பாதஎரிச்சல், கால் ஆணி போன்ற கோளாறுகளுக்கு, மருதாணி இலைகளுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து கட்ட வேண்டும். மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் கட்டிவந்தால், ஒரே வாரத்தில் சரியாகும்.
தீப்புண்கள்: அம்மை புண்களுக்கு இந்த இலையை பூசினால் பலன் கிடைக்கும். அதேபோல, மருதாணி இலையை அரைத்து, தீக்காயங்கள் கொப்புளங்கள் மீது பூசினால் நிவாரணம் கிடைக்கும். இந்த இலையை, மஞ்சள் மற்றும் வேப்பிலையுடன் சேர்த்து அரைத்து, சொரி, சிரங்கு, கரும்படை, தொடை இடுக்கு அரிப்புகளுக்கு தடவினால் பலன் தரும்.
மருதாணி இட்டுக்கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும், எப்போதுமே நெருங்குவதில்லை.. ஆனால், சிலருக்கு மருதாணியால் சளி பிடித்துவிடும். இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும்போது, அத்துடன் நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து கொள்ளலாம்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications