கிடுகிடுனு மாற்றம்.. சீரான ரத்த ஓட்டம்.. பலமான ரத்த நாளங்கள்.. ரத்தத்தை கிளீன் செய்யும் பெஸ்ட் உணவு
சென்னை: சென்னை: நம்முடைய உடலில் ரத்த ஓட்டம் சீராக இருப்பது மிக முக்கியமான ஒன்றாகும்.. ரத்த ஓட்டத்தை சீராக செயல்பட என்ன உணவுகளை நாம் சாப்பிட வேண்டும்.
ரத்த ஓட்டம் சீராக இல்லாவிட்டால், நரம்பு வீக்கம், சிறுநீரக கோளாறு, உயர் ரத்த அழுத்தம், என பல்வேறு தொந்தரவுகள் வந்துவிடும்.. எனவே, உடற்பயிற்சிகளுடன், முறையான உணவுப்பழக்கத்தையும் பின்பற்றினாலே, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.

நச்சுக்கள்: காரணம், உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், ரத்தத்தை சுத்தமாக வைத்திருந்தாலே போதும்.. அதாவது, உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்ற வேண்டும். அதுவும் இயற்கையைன சுத்திகரிப்பு மூலம் வெளியேற்ற வேண்டும். இதற்கு நாம் சிலவகை உணவுகளில் தீவிர கவனத்தை செலுத்தினாலே போதும், ரத்தத்தில் உள்ள நஞ்சு வெளியேறி, ரத்தம் சுத்தமாகும்.
முதலாவதாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதிலும், ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்க செய்வதிலும் வெள்ளைப்பூண்டுகளின் பங்கு அதிகமானது. இதற்கு காரணம்,அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் என்ற பொருள் பூண்டில் அடங்கியிருப்பதுதான். பூண்டுகளில் சல்பர் உள்ளதால், நோய்களை எதிர்த்து போரிட தூண்டுகோலாகிறது.
ரத்த அழுத்தம்: ரத்த சோகை, ரத்த அழுத்தம், போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய, பூண்டு பேருதவி செய்கிறது.. ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்கள், உணவில் நிறைய பூண்டு சேர்த்து கொள்ளலாம்.. இதனால் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் வரும்.. ரத்த சர்க்கரையும் கட்டுக்குள் வரும்..
சமையலில் பூண்டுகளை சேர்த்து கொண்டாலும், ஜூஸ் போலவும் தயாரித்து குடிக்கலாம். வெறுமனே பூண்டு ஜூஸ் குடிக்காமல், இதனுடன் மாதுளம்பழத்தையும் சேர்த்து ஜூஸ் தயாரித்து குடிப்பதால், அதன் பலன்கள் இரட்டிப்பாகிறது. ரத்த குழாய்களை அடைக்கும் கொழுப்புகளும் கரைகிறது.. புற்று நோய்செல்கள் அழிக்கும் சக்தி இந்த பூண்டுகளுக்கு உண்டு..
கால்சியம்: சமையலில், உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில், புரோக்கோலியும் ஒன்று.. கால்சியம், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் C, பொட்டாசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், ஆக்ஸிஜனேற்றங்கள் அடங்கியிருப்பதால், ரத்தத்தை சுத்தப்படுத்துவதில் மிகச்சிறந்த பணியை மேற்கொள்கிறது.
பச்சை காய்கறிகள் அனைத்துமே நல்லது என்றாலும், முட்டைக்கோஸ், கீரைகளை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதால், ரத்த ஓட்டம் சீராகிறது. லைகோபைன் நிறைந்த தக்காளியை சமையலில் அதிகம் சேர்த்து கொள்வதால், ரத்த ஓட்டத்தை சீராக்கும். மிளகு உணவில் சேர்த்து வரும்போது, ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும்.. ரத்த நாளங்கள் விரிவடைந்து, ரத்த ஓட்டம் உடல் முழுவதும் பாயும்.
மஞ்சள்: மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற பொருள் ரத்த நாளங்களிலுள்ள கசடுகளை நீக்கி, ரத்த நாளங்களின் பாதுகாப்பிற்கும் உதவுகிறது. அதேபோல, வைட்டமின் C நிறைந்த எலுமிச்சம் பழத்தையும் ஜூஸ் போல தயாரித்து குடித்துவந்தால், ரத்தத்தில் உள்ள நச்சு நீங்கிவிடும்.
அதேபோல, மாதுளம் பழத்திலும் ஜூஸ் தயாரித்து குடித்தால், ரத்தநாளங்கள் சுத்தமாகும்.. வைட்டமின் C மற்றும் பாலிபினால் உள்ளதால், சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்டா செயல்பட்டு, உடலில் நிட்ரிக் அமிலம் சுரக்கவும் வழிவகுக்கிறது.. இந்த நிட்ரிக் அமிலம் சுரப்பதால், ரத்த ஓட்டம் சீராகிறது.. ப்ளேவனாய்டு, பாலிபீனால்ஸ், கேட்டச்சின் போன்றவை நிறைந்துள்ள கிரீன் டீ குடித்து வந்தாலும், நச்சுக்களை நீக்க உதவும்.
சால்மன் மீன்: அதேபோல, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சால்மன் வகை மீனையும், வாரம் ஒருமுறையாவது உணவில் சேர்த்து கொள்ளலாம். ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்பு படிமங்களை அகற்ற இந்த மீன் உதவுகிறது..
வெண்ணெய்ப்பழம் என்று சொல்லக்கூடிய அவகேடோ பழத்தினை சாப்பிட்டு வர வேண்டும். இந்த பழங்களில் வைட்டமின் E மற்றும் ஒமேகா 3 கொழுப்பு சத்துக்கள் அதிகமுள்ளதால், ரத்த நாளங்களை சேதப்படுத்தும் நச்சுகளை அகற்ற தூண்டுகோலாகிறது.
ரத்த நாளங்கள்: ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டம் சீராக ஓட உதவும். தினமும் ஒரு கப் கிரீன் டீ குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். கிட்னி பீன்ஸ் உள்ளிட்ட இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ளலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications