சுக்கான் இலை.. சுக்காங்கீரையில் இவ்ளோ அதிசயமா? குடல் புண் முதல் பல்பொடி வரை.. அருமையான சுக்கான் கீரை
சென்னை: கல்லீரல் பாதுகாப்பு + ரத்த அழுத்தம் + இதய ஆரோக்கியம்... இந்த மூன்றுக்கும் சேர்த்து காவலனாக திகழக்கூடிய மூலிகைதான் சுக்காங்கீரை.. வழக்கத்தில் அவ்வளவாக இல்லாத சுக்காங்கீரை பற்றி தெரியுமா?
இந்த கீரை புளிப்பாக இருக்கும்.. ஆனால், சமையலுக்கு மிகச்சிறந்த கீரையாகும்.. இதில் இல்லாத சத்துக்களே கிடையாது.. இதன் அருமை தெரியாததால்தான், பலரும் இதை ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள்.

ஒரு பருப்புடன் இந்த கீரையை சமைத்து சாப்பிட்டால், ரத்த அழுத்த பிரச்சனை நீங்கும்.. ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த கீரை ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
எலும்பு தேய்மானம்: அதுமட்டுமல்ல, தைராய்டு பிரச்சனை, எலும்பு தேய்மானம் பிரச்சனை, ஆர்த்ரைடிஸ் பிரச்சனை, இந்த கீரையில் சூப் தயாரித்து குடிக்கலாம். இதயத்தை பாதுகாக்கக் கூடியது.. ரத்தத்தையும் சுத்தம் செய்கிறது இந்த கீரை..
இந்த கீரையை சுக்கு கீரை, அல்லது சுக்கான் கீரை, அல்லது சொக்கான் கீரை என்றெல்லாம் சொல்வார்கள். குடலை சுத்தப்படுத்தக்கூடிய மிகப்பெரிய திறன் இந்த சுக்காங்கீரைக்கு உள்ளது.. பசி இல்லாதவர்கள், அஜீரண குறைபாடு உள்ளவர்கள், தாராளமாக இந்த கீரையை பயன்படுத்தலாம். இதனால், கழிவுகள், நச்சுக்கள், வாயுக்கள் நீங்குவதுடன் நன்றாக பசியெடுக்கும்.
கல்லீரல் பலம் பெற வேண்டுமானால், இந்த கீரையை கட்டாயம் பயன்படுத்தவேண்டும். மதுப்பழக்கத்துக்கும், கஞ்சா போதைக்கும் அடிமையாகி, அதனால் கல்லீரலில் பாதிப்புகள் ஏற்பட்டால், இந்த சுக்காங்கீரை நிச்சயம் கை கொடுக்கும்..
கல்லீரல்கள்: கல்லீரலை சுற்றியுள்ள ஆபத்தை நீக்கி, பித்தத்தையும் நீக்கி கல்லீரலையும் காக்கும். அதனால்தான், மஞ்சள் காமாலை நோய்க்கு இந்த கீரையை மருந்தாக தருவார்கள்.. போதைப்பழக்கத்திற்கு ஆளாகியிருப்பவர்கள்கூட, இந்த சுக்கான் கீரையில் சூப் செய்து சாப்பிட்டு வந்தாலே போதும்.
வாத பிரச்சனை இருப்பவர்கள், மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்கள், தைராய்டு உடையவர்கள், ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள், அனைவருக்குமே இந்த சுக்காங்கீரைகள் தீர்வாகின்றன.. ரத்த அழுத்தத்தை சீராக்குவதுடன், ரத்தத்தையும் சுத்தம் செய்வதில் இந்த கீரைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.
தேய்மானங்கள்: 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டிய கீரை இதுவாகும். காரணம், 40 வயதுக்கு மேல், எலும்பு தேய்மானங்கள் ஏற்படலாம். மூட்டுவலி பாதிப்பும் ஏற்படலாம். கால்சியம் சத்துக்கள் நிறைந்த இந்த கீரை மொத்த பிரச்சனைக்கும் பலனை தருகிறது..
கால்சியம் அதிக அளவு உள்ளதால்தான், இந்த கீரையை நிழலில் உலர்த்தி பவுடராக்கி, பல்துலக்கவும் பயன்படுத்துவார்கள்.. இந்த கீரையில் சூப் செய்து, வளரும் குழந்தைகளுக்கு தருவதால், குடல் பூச்சிகள் வெளியேறுவதுடன், நன்றாக பசியெடுக்கும்.. எலும்புகளுக்கும், பற்களுக்கும் உறுதியை தரும்.
சட்னி: வழக்கமான கீரைகளை போலவே, இந்த கீரையையும் பருப்புடன் கடைந்து சாப்பிடலாம்.. குடலில் புண்கள் ஆற வேண்டுமானால், கீரை, பருப்புடன் புளி சேர்க்காமல் சமைத்து சாப்பிடலாம். இந்த சுக்கான் கீரையோடு பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி சட்னி அரைத்து சாப்பிடலாம். சிலர், இறைச்சியுடன் இந்த கீரையையும் சேர்த்து குழம்பு வைத்து சாப்பிடுவார்கள்.. இதனால், சொறி, சிரங்கு குணமாகும்..!!!












Click it and Unblock the Notifications