மட்டன் எடுக்கறீங்களா? ஆட்டிறைச்சியால் ஹார்ட் அட்டாக் வருமா.. வியக்க வைக்கும் கோழிக்கறி, ஆட்டுக்கறி
சென்னை: தங்களின் செரிமான சக்தியை கருத்தில் கொண்டும், மருத்துவரிடம் அறிவுரைபடியும், அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது, ஆரோக்கியம் மேம்படும் என்று அறிவுறுத்துகிறார்கள்.
சிவப்பு இறைச்சி செரிக்கப்படும்போது, ஒரு மெட்டாபொலிட் வெளியாகிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது... சிவப்பு இறைச்சியை அதிக அளவில் சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு இதுவே காரணம் என்று உறுதியாக சொல்கிறார்கள்.

ஆட்டிறைச்சி: ஆட்டிறைச்சி எல்டிஎல் அல்லது கெட்ட கொழுப்பை அதிகரிப்பதுடன், ரத்த உறைவு மற்றும் பிளேக் உருவாவதை தூண்டுகிறதாம்.. அத்துடன், சிவப்பு இறைச்சியில் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் அதிகம் உள்ளது என்பதால்தான், மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்கிறார்கள்..
மாரடைப்பு மட்டுமல்ல, ஆட்டிறைச்சியை அதிகம் சாப்பிடுவதால், பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்கிறார்கள்.. மட்டனை அதிக வெப்பநிலையில் சமைப்பது, உடலில் வீக்கத்தை அதிகரிக்குமாம்.. இதனால், புற்றுநோய் போன்ற பயங்கர நோய்கள் வருவதோடு, நாள்பட்ட உடல்நல கோளாறுகளையும் உண்டுபண்ணிவிடும் வாய்ப்பு உள்ளதாம்.
கொலஸ்ட்ரால்: உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் கூடுவதுடன், இந்த கொலஸ்ட்ரால்தான், படிப்படியாக இதய நோய், பக்கவாதம்வரை கொண்டுசென்றுவிடுகிறது..
வாரம் ஒருமுறை மட்டுமே ஆட்டிறைச்சி சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைப்பதும் இதற்காகத்தான்.. கடின உழைப்பாளிகள் என்றால், கலோரிகள் உடனே எரிக்கப்பட்டுவிடும்.. அசைவம் சாப்பிட்டாலும் பெரிதாக பாதிப்பு வராது.. அதேசமயம், மட்டன், சிக்கன் எதுவானாலும், செரிமான பிரச்சனையையும் உண்டுபண்ணிவிடும்.
இதுவே காய்கறிகள் என்றால், 4 அல்லது 5 மணி நேரத்துக்குள் அவை செரிமானமாகிவிடும்.. அசைவு உணவு செரிமானம் அடைய குறைந்தது, 3 நாட்கள் ஆகுமாம்.. அதனால்தான், அசைவ உணவுகளை இரவு வேளையில் அதிகம் சாப்பிடக்கூடாது என்கிறார்கள்..
சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. சைவம் மற்றும் அசைவ உணவுகளை சாப்பிடுபவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. அதில், சைவ உணவாளர்களுக்கு இதயநோய் பாதிப்பு 24 சதவீதம் வரை குறைவாக இருப்பது தெரிய வந்திருக்கிறது... அதாவது ஆட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு உடலில் சேராமல் இருந்தாலே போதும், பிரதான நோய்களை தடுத்துவிடலாம் என்கிறார்கள்.
நார்ச்சத்துக்கள்: வாரம் ஒருமுறை ஆட்டுக்கறி சமைத்தாலும், குழம்பாக சமைத்து, அந்த குழம்பில் கேரட், பீன்ஸ், வாழைக்காய், முருங்கைக்காய், காலி பிளவர், போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்களை சேர்த்து சமைத்தால் கூடுதல் பலன்.. உருளைக்கிழங்கு சேர்த்து சமைத்தால் அதைவிட நன்மை கிடைக்கும்.. காரணம், ஆட்டிறைச்சியிலுள்ள கொழுப்புக்களை உருளை உறிஞ்சிவிடும். வெங்காயம் + தக்காளி போன்றவைகளை சாலட் போல செய்து சாப்பிடும்போது, மட்டனிலுள்ள கொழுப்பை விரைவாக எரித்துவிடும்..
அதுமட்டுமல்ல, மட்டன் வாங்கினால், கழுத்து பகுதியில் கேட்டு வாங்க வேண்டுமாம்.. காரணம், இந்த கழுத்துக்கறி மிகவும் மென்மையானதாகவும் சுவையாகவும் இருக்கும் என்பதால், குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மென்று சாப்பிடுவதற்கு வசதியாக இருக்கும்.. மேலும், இந்த பகுதியில் கொழுப்பே இருக்காது என்பதால், கழுத்து பகுதி மட்டனை வாங்கி கிரில் செய்தோ அல்லது எண்ணெய் குறைவாக பயன்படுத்தியோ சமைக்கலாம்.
மட்டன்: அதற்காக, மட்டன், சிக்கனை ஒரேடியாக சாப்பிடாமல் தவிர்க்கக்கூடாது.. நம்முடைய உடலுக்கு புரோட்டீன் மிகவும் அவசியம்.. புரதத்தின் அளவு குறையும்போது உடல் பலவீனம், கவனக்குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்... குழந்தைகளுக்கு புரத பற்றாக்குறை ஏற்பட்டால் வளர்ச்சி தடைபடும். வளர்சிதை மாற்ற விகிதமும் பாதிப்புக்குள்ளாகும்.
அதேபோல, இரும்புச்சத்தும் நமக்கும் அதிகம் தேவையாக இருக்கிறது..
மூளையின் சீரான செயல்பாட்டுக்கும் இந்த இரும்புச்சத்து அவசியம்.. அசைவ உணவு வகைகளில் இரும்பு சத்து அதிகமாகவே உள்ளது..
கால்சியம்: கால்சியமும் தேவையாக இருக்கிறது.. எலும்பு மண்டலத்தை வலுப்படுத்துவதற்கு தேவையான கால்சியம், சைவ உணவை விட, அசைவ உணவு வகைகளில் அதிகம் உள்ளது.. அசைவ உணவு சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடும்போது, சைவ உணவு சாப்பிடுபவர்கள்தான் கால்சியம் பாதிப்புக்கு ஆளாகிறார்களாம். எனவே, மட்டன், சிக்கனில் இரும்புச்சத்து, புரதம், கால்சியம் போன்றவற்றை தவிர்த்து விடக்கூடாது.












Click it and Unblock the Notifications