மார்பகத்தில் ஆரஞ்ச் பழத்தோல் போல் சொரசொரப்பாக இருக்கிறதா? உடனே டாக்டரை பாருங்கள்
சென்னை: பெண்களின் உயிரை குடிக்கும் மார்பக புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் எளிதில் மீண்டும் வரலாம். மார்பக புற்றுநோய் என்றில்லை எந்த புற்றாக இருந்தாலும் ஆரம்ப கட்டத்தில் உடலில் நடக்கும் மாற்றங்களை நாம் அறிந்து மருத்துவர்களின் உதவியை நாட வேண்டும்.
நம் உடல் நம்முடன் பேசும் என மருத்துவர்கள் கூறுவதுண்டு. பேசுவது என்றால் உடலினுள் நடக்கும் விஷயங்களை அறிகுறிகளாகவும் வலியாகவும் வீக்கமாகவும் சொல்வதுண்டு. இதை நாம் சரியாக கவனித்தால் நோயற்ற வாழ்வை வாழலாம்.

ஆனால் இன்றைய நவீன யுகத்தில் வேலை, காசு, பணம், துட்டு, மணி மணி... என்று ஓடுகிறார்கள். நடுத்தர மக்களும் சரி பணக்காரர்களும் சரி தங்கள் உடல் நிலையில் ஏற்படும் ஆரம்ப அறிகுறிகளை கண்டுக் கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.
பிறகு தங்களது பாசத்துக்குரியவர்களை விட்டுவிட்டு இறக்க நேரிடுகிறது. புற்றுநோய் என்பது 4 நிலைகளை கொண்டது. stage 1, stage 2, stage 3, stage 4 ஆகியவைதான். இதில் முதல் இரு நிலைகள் என்றால் நிச்சயம் காப்பாற்றி விடலாம். ஆனால் கடைசி இரு நிலைகள் வந்தால் மரணம் நிச்சயம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மார்பக புற்றுநோய் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. இதற்கென சில அறிகுறிகள் வரும். அதை வைத்து கண்டறியலாம். அதிலும் 20 வயது, 30 வயது இளம் பெண்களையும் இந்த நோய் பாதிக்கிறது. மார்பகத்தில் அசாதாரண நிலையில் செல்களின் வளர்ச்சியே மார்பக புற்றுநோய் என்கிறோம்.
பெரும்பாலான பெண்கள் இறப்பது கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் ஆகியவைகளால்தான். இந்த மார்பக புற்றுநோயை அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். மார்பக புற்றுநோயின் முதல் அறிகுறியே அக்குள் பகுதியில் அல்லது மார்பகத்தில் ஒரு சிறிய கட்டி மாதிரி தோன்றும், இல்லாவிட்டால் அந்த பகுதிகளில் ஏதாவது தடினமாக தோல் மாறியிருக்கும்.
அதாவது ஆரஞ்ச் பழத்தோல் போல் சொரசொரப்பாக தோல் மாறியிருக்கும். அது போல் மார்பகத்தின் அளவு, உருவம் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படும். மார்பகங்களில் வீக்கம், சுருங்குதல், சமமாக இல்லாமல் இருத்தல் போன்றவை ஏற்படும். இவற்றை மாதவிடாய் வருவதற்கான அறிகுறிகள் என்று நினைக்கக் கூடாது.
அல்லது சிலர் இது போன்ற அறிகுறிகளை ஹார்மோன் மாற்றம் என கருதி சாதாரணமாக விட்டுவிடுவார்கள். மார்பகத்தில் வலி என்பது மிகவும் அரிதாக இருக்கும் அறிகுறியாகும். அது போல் மார்பக காம்பில் ஒரு வித அசவுகரியம், வலி, உருவில் மாற்றம் போன்றவையும் இருக்கும். சிலருக்கு காம்பு வழியாக நீர் கசியவும் தொடங்கும்.
மார்பகத்தின் தோல்கள் சிவப்பாக இருக்கும், கலர் மங்கி இருத்தல் குத்தி குத்தி வலித்தல் போன்றவை இருக்கும். தாய்ப்பாலை தவிர காம்பிலிருந்து எந்த திரவமும் வரக்கூடாது. இது போல் மார்பக புற்றுநோய் மது குடிப்போர், சிகரெட் பிடிப்போர், எந்த உடல் பயிற்சியும் இல்லாமல் உட்கார்ந்து கொண்டே பணியாற்றுவோருக்கும் ஏற்படும்.
மார்பக புற்றுநோய் என்றால் அதை mammogram மற்றும் அல்ட்ரா சவுண்ட ஸ்கேன் மூலம் அறியலாம். மார்பக புற்றுநோய் குறித்து தெரிந்து கொள்ள சுய மார்பக பரிசோதனை என்பது அவசியமான ஒன்று. அப்போது மார்பகத்தில் இருக்கும் மாற்றங்கள் நிச்சயம் தெரிய வரும்.
கண்ணாடி முன்னாடி நின்று கொண்டு மார்பகத்தில் ஏதேனும் நிறத்தில் மாற்றம், காம்பில் மாற்றம், தோலில் ஏதேனும் வித்தியாசம் தெரிகிறதா என பாருங்கள். அடுத்தது இரு மார்பகங்களையும் கிளாஸ்வைஸ், ஆன்டி கிளாஸ் வைஸ் திசையில் மசாஜ் போல் கொடுக்க வேண்டும். நன்கு அழுத்தி கைளால் வட்டமாக தேய்த்து பார்க்க வேண்டும். அப்போது கட்டிகள் இருந்தால் தெரியவரும். அதைவிட்டுவிட்டு எந்த சுய பரிசோதனையும் செய்யாமல் நோய் முற்றும் வரை இருப்பது நம் அன்புக்குரியவர்களை வேதனையில் ஆழ்த்தும் செயலாகும்.












Click it and Unblock the Notifications