இரவில் மரத்தடியில் படுத்து தூங்கலாமா? நைட்டில் மரத்துக்கு கீழே படுத்தால் இதுதான் சிக்கல்! புரிஞ்சுதா
சென்னை: இரவு நேரங்களில் மரத்தின் அடியில் படுத்து தூங்க வேண்டாம் என்று வீட்டிலுள்ள பெரியவர்கள் சொல்வார்கள்.. இதற்கு என்ன காரணம் தெரியுமா?
நாம் உயிர் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் தேவை... நாம் நாம் சுவாசிக்கும்போது ஆக்ஸிஜனை உள்ளிழுத்துக் கொண்டு, கார்பன் டை ஆக்சைடை வெளிவிடுகிறோம்.

காற்று: மனிதனை போலவே, மரங்களும் உயிர்வாழ்வதற்கு மற்றும் கார்பன் டை ஆக்சைடு தேவையாக உள்ளது. எனவே, நாம் வெளியிடும் கார்பன டை ஆக்ஸைடு எடுத்துக் கொண்டு, சுத்தமான காற்றாக ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.. இந்த சுத்தமான ஆக்ஸிஜனைதான், நாம் சுவாசிக்கிறோம்..
ஆனால், இது பகலில் மட்டும்தான்.. பகலில் மட்டுமே மரங்கள் அசுத்த காற்றான கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு, ஆக்ஸிஜனை வெளியிடுகிறது..
சுத்தமான ஆக்ஸிஜன்: இரவில் ஆக்ஸிஜனை உள்வாங்கிக்கொண்டு, கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது... அந்த இரவு நேரத்தில், மரத்திற்கு அடியில் நாம் படுக்கும்போது, நமக்கு தேவைப்படும் சுத்தமான ஆக்ஸிஜன் கிடைக்காது... இதனால், மரங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடை நாம் சுவாசிக்க வேண்டிய நிலைமை வந்துவிடும்..
அதுமட்டுமல்லாமல், காற்றின் அறைவுகளும் இரவில் மிகவும் குறைவாகவே இருக்கும்.. காற்றின் அசைவு இல்லாவிட்டாலும், நமக்கு ஆக்ஸிஜன் கிடைக்காது.. இதனால், கரியமிலவாயுவின் அளவும் அதிகரித்துவிடுகிறது.. இதனால், மூச்சுதிணறல் ஏற்பட்டு, சரியாக மூச்சுவிட முடியாது. இதனால், மூச்சு திணறி சிலசமயம் தூக்கத்திலிருந்து அலறி எழுந்துவிடுவோம்.
மூச்சுத்திணறல்: இப்படி மூச்சுதிணறுவதைதான், "சுற்றிவளைத்து" மரத்தில் பேய் இருப்பதாகவும், அது வந்து நம்மை அமுக்கிவிடுவதாகவும் பெரியவர்கள் சொன்னார்கள்.. ஆனால், இரவு நேரத்தில் மரத்திற்கு அடியில் தூங்க கூடாது என்பதற்கு அறிவியல் காரணம் இதுவே என்கிறார்கள்.
ஆனால், மூச்சு திணறும் அளவுக்கெல்லாம் கார்பன் டை ஆக்ஸைடு இருக்காது என்று இதற்கு எதிரான கருத்து சொல்லப்படுகிறது.. அதாவது, மரத்தின் அடியில் தூங்கும்போது, வீட்டிற்குள் இயல்பாக படுப்பதுபோல மனநிலை இருக்காது.. மரக்கிளைகள், அல்லது மரத்தில் இருந்து வேறு ஏதாவது, நம்மீது விழுந்துவிடக்கூடும் என்பதால், இரவில் மரத்தின் அடியில் தூங்கவேண்டாம் என்கிறார்கள்.
இடிதாங்கி: ஆனால், இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. அந்த காலத்தில், மழை பெய்தால் "இடி தாங்கிகள்" அவ்வளவாக இல்லை என்பால், மரங்களின் இடி அதிகமாக இறங்கிவிடும் ஆபத்து இருந்தது. அதனால்தான், இரவில் மரத்தினடியில் படுக்கக்கூடாது என்கிறார்கள்.
ஆனால், இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. அதாவது, மரங்களிலுள்ள பொந்துகளில் பாம்பு போன்ற உயிரினங்கள் வாழ்வது இயல்பு.. இந்த உயிரினங்கள் இரவு நேரங்களிலேயே இரை தேடி செல்லும்.. அதனால்தான், மரத்தினடியில் படுக்கக்கூடாது என்கிறார்கள்.
எது உண்மை: இதில் எந்த காரணம் உண்மை என்று தெரியவில்லை.. ஒருவேளை இவை எல்லாமே உண்மையாகவும் இருக்கலாம்.. எப்படியோ, இரவு நேரத்தில் மரத்தின் அடியில் தூங்குவதால், உடலுக்கு நன்மை என்று யாருமே இதுவரை ஊக்கப்படுத்தவில்லை.. எனவே, மரத்தடியில் இரவில் தூங்குவதை தவிர்க்கலாம்...!!!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications