சிசேரியன் அறுவை சிகிச்சை செய்த தாய்க்கு 3 நாட்களுக்கு தண்ணீரே கொடுக்க கூடாதா? டாக்டர் பரூக் விளக்கம்
சென்னை: குழந்தை பிறப்பின் போது தாயின் சீம்பாலை பீய்ச்சி வெளியே விட்டுவிட்டுதான் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும் என்கிற வதந்தி உள்பட ஏராளமான மருத்துவ வதந்திகளுக்கு டாக்டர் பரூக் அப்துல்லா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதுகுறித்து குழந்தை பிறப்பின்போது உலா வரும் மருத்துவ வதந்திகள் என்ற தலைப்பில் டாக்டர் பரூக் அப்துல்லா சில விஷயங்களை விளக்கியுள்ளார். அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது:

புரளி - 1
🚫குழந்தை பிறந்தவுடன் வரும் தாயின் சீம்பாலை பீச்சி வெளியே விட்டுவிட வேண்டும். அது குழந்தைக்கு ஆகாது🚫
உண்மை என்ன?
✅தாயின் முதல் பாலான சீம்பால் எனும் கொலாஸ்ட்ரம் தான் குழந்தைக்கு கொடுக்கப்படும் முதல் நோய் தடுப்பு மருந்து. கட்டாயம் கொடுக்க வேண்டும்.
புரளி -2
🚫குழந்தை வயிற்று வலியில் அழுதால் , குடல் ஏறியிருக்கும். தொக்கம்/ தொங்கல் எடுக்க வேண்டும்🚫
உண்மை என்ன?
✅ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு வயிற்று வலி சாதாரணமாக ஏற்படும் .இதை Infantile colic என்போம். இது சாதாரணமானது. இதற்கு தொக்கமோ தொங்கலோ எடுப்பது ஆபத்தான நோய் தொற்று ஏற்படுத்தும்.
புரளி - 3
🚫சிசேரியன் செய்யப்பட்ட தாய்க்கு மூன்று நாளைக்கு தண்ணீர் கொடுக்க கூடாது🚫
உண்மை என்ன?
✅மயக்க மருந்தின் தன்மை குறைந்ததும் மருத்துவர் நீர் பருகலாம் என்று கூறியவுடன் , உடலில் ஏற்பட்ட நீரிழப்பை சரி செய்ய இளநீர்/ தண்ணீர் அதிகமாக கொடுக்க வேண்டும். அதிகமான நீரிழப்பு இருந்தால் மூளையில் ரத்தம் கட்டி மரணம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. (cerebral venous thrombosis)
புரளி - 4
🚫தாய் காரமாக/ புளிப்பாக/ அசைவம் என்று சாப்பிட்டால் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்🚫
உண்மை என்ன?
✅தாய் சாப்பிட்டாலும் சரி சாப்பிடாவிட்டாலும் சரி. குழந்தைக்கு கிடைக்க வேண்டிய பால் கிடைக்கும். தாய் உண்ணும் உணவுக்கும் குழந்தைக்கும் சம்பந்தம் இல்லை.
புரளி - 5
🚫கர்ப்பமாக இருக்கும் போது வயிறு முன்னோக்கி புடைப்பாக இருந்தால் பெண் குழந்தை , பக்க வாட்டில் புடைத்திருந்தால் ஆண் குழந்தை🚫
உண்மை என்ன?
✅குழந்தை ஆணா பெண்ணா என்று வயிறு முன்பக்கமாக சைடு வாக்காக புடைத்து இருப்பதை வைத்து கூற இயலாது. நிகழ்தகவுக் கொள்கைப்படி ரெண்டில் ஒன்று தான் இருக்க முடியும் என்பதால் பல நேரங்களில் சரியாக இருப்பது போன்ற மாயபிம்பம் ஏறபடுகிறது.
புரளி 6
🚫குழந்தைக்கு வயிற்று வலியோடு காய்ச்சல் அடித்தால் வயிற்றம்மை ஆகும். இதற்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதோ தாய்ப்பால் தருவதோ தவறு🚫
உண்மை என்ன?
✅குழந்தைக்கு வயிற்று வலியோடு காய்ச்சல் வயிற்றுப்போக்கு இருந்தால் அது குடலில் கிருமித்தொற்று என்று அர்த்தம் .அதற்கு உடனே மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ் திரவம் கொடுக்க வேண்டும். தாய்பாலை தொடர்ந்து நிறுத்தாமல் கொடுக்க வேண்டும்.
புரளி 7
🚫தாய்க்கு காய்ச்சல் இருந்தால் தாய்ப்பால் கொடுக்ககூடாது.🚫
உண்மை என்ன?
✅தாய்க்கு காய்ச்சல் இருந்தாலும் சரி.. தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக்கூடாது.
புரளி 8
🚫தம்பதிக்கு குழந்தை பிறக்காவிடில் பெண்ணே ஒரே காரணம்🚫
உண்மை என்ன?
✅பெரும்பான்மையான மக்கள்பேறில்லா தம்பதிகளில் ஆணுக்கு விந்தணுக்கள் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைப்பேறுக்கான சிகிச்சையில் இருவருக்குமே சேர்த்து தான் பரிசோதனை மற்றும் சிகிச்சை செய்யப்பட வேண்டும். பெண்ணை மட்டும் குறை கூறுவது தவறு. பெண் மட்டும் மலடி என்று கூறுவது தவறு. ஆணும் குழந்தையின்மையில் உடந்தையாக இருக்கும் வாய்ப்பு அதிகம். எனவே குழந்தையின்மை பிரச்சனையை தம்பதிகளின் கூட்டுப் பிரச்சனையாகவே அணுகிட வேண்டும். அவர்கள் மீது சமூகம் மற்றும் குடும்பம் அழுத்தம் தருவது தவறு.
புரளி 9
🚫தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு ஆபத்தானவை. ஆட்டிசம் போன்ற நோய்களை வரவழைப்பவை🚫
உண்மை என்ன?
✅தடுப்பு மருந்துகளின் பல உயிர்க்கொல்லி தொற்றும் நோய்களான ரணஜண்ணி, கக்குவான் இருமல், சீதபேதியில் இருந்து விடுதலை அடைந்துள்ளோம்.
தடுப்பு மருந்தால் தான் பெரிய அம்மை மற்றும் போலியோவை இல்லாமல் செய்தோம் . ஆகவே அரசு பரிந்துரைத்துள்ள தடுப்பூசிகளை இலவசமாக அரசு மருத்துவமனைகளில் வழங்கிடல் வேண்டும்.
புரளி 10
🚫சிசேரியன் என்பது பணம் பார்க்க செய்யப்படும் சிகிச்சை. நார்மலாக நடக்க இருக்கும் பிரசவத்தை வேண்டுமென்றே சிசேரியன் செய்கிறார்கள்🚫
உண்மை என்ன?
✅முன்னெப்போதும் இல்லாத அளவு பெண்களிடையே உடல் பருமன் , தொற்றா நோய்கள் அதிகரித்து விட்டன. நமது உணவுப்பழக்க வழக்கங்கள் தலைகீழ் மாற்றத்தை சந்தித்துள்ளன. இந்தியாவின் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. குழந்தைகள் மிகவும் பொக்கிஷங்களாக பார்க்கப்படுகின்றன. குழந்தை இறப்பை யாரும் சிறிய நிகழ்வாய் நோக்குவதில்லை. கர்ப்பத்தின் போது ஏற்படும் பிரச்சனைகளை கண்டறியும் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. இதனால் உலகம் முழுவதுமே சிசேரியன் செய்யும் அளவுகள் அதிகமாகின்றன.
இருப்பினும் நமது உணவு பழக்கம் மாற்றம், உடல் உழைப்பு , இன்னும் முன்னேறிய மருத்துவ முறைகள் கொண்டு சிசேரியன் அளவுகளை குறைக்க வேண்டும்.
புரளி 11
🚫சத்து டானிக் குழந்தையின் எடையைக் கூட்டும்🚫
உண்மை என்ன?
✅நல்ல ஆரோக்கியமான புரதம் நிரம்பிய முட்டை / காய்கறி/ கீரை/ கறி/ மீன் போன்ற உணவுகள் மட்டுமே உடல் எடையைக் கூட்டும். சத்து டானிக்குகள் ஒன்றுமே செய்யாது என்பதே உண்மை. இருப்பினும் உடல் எடை குறைந்து பிறந்த குழந்தைகளுக்கு சத்துகளை வழங்க அவை தேவைப்படலாம். இவ்வாறு 11 விதமான மருத்துவ புரளிகளுக்கு டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications