கோபம் வரும் போது எதிராளியை அடிக்கத் தோன்றுதா.. அப்ப இதை செய்ங்க.. எல்லாம் பறந்து போய்டும்!
சென்னை: யாரையும் அடித்து பழகுதல் கூடாது, மனப்பயிற்சியால் கோபத்தை கட்டுப்படுத்த முடியும் என டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் கிளினிக்கில் பதினாறு வயது வளர்இளம் பருவத்து ஆணை சந்தித்தேன். அடிக்கடி தலைவலி வருகிறது தலையின் ஒரு பக்கமாக வரும் வலி அதற்கான சிகிச்சை அளித்து விட்டு அவனது சிந்தனை மற்றும் எண்ண ஓட்டம் குறித்து அறிய "நீ அடிக்கடி கோபப்படுவியா? பதட்டப்படுவியா?" என்று கேட்டேன்.

அவன் அமைதியாகவே இருக்க அவனது தாய் " பொதுவா அமைதியா இருப்பான் சார். அதிகமாக கோபப்படவே மாட்டான். ஆனா அவன் தங்கச்சிய மட்டும் உடனே அடிப்பான்" "ஏன்பா தங்கச்சிய அடிக்கடி அடிக்கிற?" "என்ன கோபப்படுத்திட்டே இருப்பா டாக்டர் அதான்" "என்னைக்கும் யாரையும் அடிச்சு பழகாத.. இன்னைக்கு உனக்கு தங்கச்சி ஈசியான டார்கெட்டா இருக்குறதால அவள அடிக்குற பழக்கத்தை உன்னை அறியாம பழகிட்ருக்க.. இது நல்லதில்ல"
அவனது தாய் "இதை எப்டி சார் மாத்துறது?" "இவன் தான் மனச கட்டுப்படுத்தி கோபத்தை வெளிப்படுத்தாம பயிற்சி எடுக்கணும். எப்பவும் நம்மள விட எளிய மனிதர்கள் கிட்ட ஈசியா கோபப்படுவோம்.. அடிப்போம் . கெட்ட வார்த்தை பேசுவோம்.. ஆனா நம்மல விட ஸ்ட்ராங்கான இடத்துல அமைதியா இருப்போம் பம்முவோம் இது மனிதனோட இயல்பு தான்.
ஆனா எளிய மனிதர்கள்கிட்டயும் கோபத்தை காட்டாம வன்முறையை பிரயோகிக்காம இருக்க பயிற்சி எடுத்தா நிச்சயம் உதவும்" "ஆமா சார்.. அவளால திருப்பி அடிக்க முடியாதுனு தான் அடிக்கிறான். அவ டெய்லி இவன் கிட்ட அடி வாங்குறா சார்" "ஆமாம்மா.. இன்னைக்கு இந்த பழக்கம் நாளைக்கு கல்யாணம் ஆனாலும் எளிய டார்கெட்டா மனைவிய பாக்க தோணும். ஈசியா கை நீட்ட வரும். பொறக்குற புள்ளைங்களையும் அடிக்க கை ஓங்கும். இதெல்லாம் கெட்ட பழக்கம் தான் மா.. எப்டி காலைல எழுந்தவுடனே பல் விலக்க பழகியிருக்கோமோ அது மாதிரி தான் இதுவும் மூளைக்கு எதை பழக்குறோமோ அது மாதிரி மாறிக்கும்"
"தம்பி ஒவ்வொரு தடவ உன் தங்கச்சி உன் கோபத்தை தூண்டும் போதும் உன் மனச கட்டுப்படுத்த முயற்சி செய்.. அந்த இடத்த விட்டு வேற எங்கயாவது போய்டு.. ஒரு செம்பு தண்ணிய மெதுவா குடி.. பேச வர வார்த்தைக்கு பூட்டு போட்டு ஒரு நிமிசம் யோசி.. இப்டியே தொடர்ந்து பயிற்சி செய்தால் கோபத்தை கட்டுப்படுத்த முடியும். எங்கயும் முன்னெடுக்கும் வன்முறை எதற்கு தீர்வாகாது...

முடிந்தவரை அன்பாகப் பேசி தீர்வு காண முயற்சி செய் முடியலையா அமைதியா அந்த இடத்த விட்டு நகர்ந்துடு...." தற்காப்புக்காகவே அன்றி வன்முறை தவறு அன்பினாலும் அமைதியினாலும் அணுசரனையாலும் அக்கறையினாலும் சாதிக்க முடியாததை வன்முறை சாதித்ததாக இதுவரை வரலாற்றில் பதிவில்லை. மனப்பயிற்சியால் கோபத்தையும் எண்ணத்தால்
சொல்லால் செயலால் நிகழ்த்தும் வன்முறையையும் கட்டுப்படுத்த முடியும்.
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கா லென் எங்கே தன் கோபம் பலிக்குமோ? அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன? இவ்வாறு டாக்டர்பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications