மும்தாஜ் எப்படி செத்தாங்க தெரியுமா? சுய பிரசவம் குறித்த வரலாறு இதோ.. டாக்டர் ஃபரூக் சொல்றதை கேளுங்க
சென்னை: வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது குறித்து நவீன அறிவியல் வளர்ந்த இந்த காலத்திலும் பலரும் பேசி வருகின்றனர். ஆனால் இப்படி வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது உயிருக்கு ஆபத்தானது என்று மருத்துவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதற்கு வரலாற்று ஆதாரத்தை அரசு மருத்துவர் ஃபரூக் அப்துல்லா மேற்கோள்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் டிவிட்டரில் பகிர்ந்துள்ளதாவது, "1631வது ஆண்டில் ஜூன் 17ம் தேதி டெல்லியில் அர்ஜூமந்த் பானு எனும் பெண்மணி தனது 38வது வயதில் 14வது குழந்தையை பெற்றெடுக்கும்போது ஏற்பட்ட அதீத ரத்த போக்கு காரணமாக உயிரிழக்கிறாள். அப்பெண்மணி வேறு யாரும் கிடையாது அப்போது இந்திய நாட்டை ஆட்சி செய்து வந்த முகலாய சக்கரவர்த்தி ஷாஜகானின் பட்டத்து ராணி - மும்தாஜ் மஹல். இவரது இயற்பெயர்தான் அர்ஜூமந்த் பானு.

இத்தனை சர்வ வல்லமை பொருந்திய சாம்ராஜ்யத்தின் பட்டத்து ராணி எப்படி இறந்தார்? தனது 38வது வயதில் (High maternal age) 14வது குழந்தையை ஈனும் போது (High order birth ) பிரசவத்திற்கு பின் நேரும் அபாயகரமான உதிரப்போக்கினால் (Post partum hemorrhage) இறந்தார். தனது காதல் மனைவியின் இறப்பை தாங்க இயலாத ஷாஜகான் ஒரு வருடம் துக்கம் அனுஷ்டித்திருக்கிறார். அவர் துக்கம் முடிந்து மீண்டும் மக்களுக்கு காட்சி அளித்த போது நரை முடி கூனுடன் வெளியே வந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
வரலாற்றை படியுங்கள்.. 17ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் மகப்பேறு பிரசவங்கள் எப்படி இருந்திருக்கும்? பெண்கள் எப்படி நடத்தப்பட்டிருப்பார்கள் ? என்று எங்கும் போய் பார்க்க தேவையில்லை. அனைத்துக்கும் வரலாற்றில் விடை இருக்கிறது. மும்தாஜ் எனும் பட்டத்து ராணிக்கு எந்த மாதிரி வைத்தியம் அந்த காலத்தில் கிடைத்திருக்கும்? சாதாரண மக்களை விடவும் சிறப்பான சிகிச்சை கண்டிப்பாக கிடைத்திருக்கும்? பிறகு ஏன் மரணம் நடந்தது?
இப்போது நவீன மருத்துவம், தாய்களின் இறப்பை கொண்டு கணித்து தாயின் வயது அதிகமாக அதிகமாக பிரசவத்தின் போது ஏற்படும் பிரச்சனைகள்(complication) கூடும் என்கிறது. மேலும், எத்தனை அதிகமான முறை ஒரு தாய் பிரசவக்கிறாளோ அதற்கு ஏற்றாற் போல் அடுத்த பிரவசத்தின்போது தாய்க்கோ குழந்தைக்கோ பிரச்சனை வரும் என்கிறது. சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். அந்த பட்டத்து ராணிக்கு உணவில், அன்பில் எந்த குறையும் இருந்திருக்காது. 14வது பிரசவம் வரை தாக்கு பிடித்திருக்கிறார்.
கண்டிப்பாக கர்ப்ப காலத்தில் ரத்த சோகை (anemia) இருந்திருக்கும். அதை சரி செய்யும் மருத்துவம் அப்போது இல்லை. மட்டுமல்லாது பிரசவத்தின்போது ரத்த போக்கு அதிகமாக ஏற்பட்டிருக்கும். அதை சரி செய்யும் சிகிச்சையும் அப்போது இருந்திருக்கவில்லை. எனவே அவள் இறந்துவிட்டாள். அவளது மரணத்தை வைத்து அக்காலத்தில் மன்னர்களுக்கும் பேரரசர்களுக்கும் கிடைத்த மருத்துவத்தின் அளவுகோல் என்னவென புரிந்துகொள்ளலாம். இப்படி இருக்கையில் கண்டிப்பாக சாதாரண மனிதர்களுக்கு அதை விட மிகவும் குறைவான மகப்பேறு சிகிச்சையே கிடைத்திருக்கும்.
இப்போது யோசித்து பாருங்கள். இந்தியாவின் 18 ஆம் நூற்றாண்டு தாய் சேய் இறப்பு விகிதங்களை. எப்படியும் ஒரு லட்சம் பிரசவங்களில் 1000 முதல் 2000 தாய்மார்கள் நிச்சயம் இறந்திருப்பார்கள் என்பது எனது கணிப்பு. சரி இப்போது மும்தாஜ் பெற்ற அந்த 14பிள்ளைகள் என்ன ஆனார்கள் என்று பார்ப்போம்.
மும்தாஜின் முதல் குழந்தை - 'ஹூருன் நிசா பேகம்' (30.3.1613 - 5.6.1616) மூன்று வயதில் பெரியம்மை வந்து இறந்து விட்டாள். (அந்த காலத்தில் ஏது தடுப்பூசி ?? இப்போது இந்த பெரியம்மை உலகத்தை விட்டே ஒழிக்கப்பட்டுவிட்டது). இரண்டாவது பெண் 'ஜஹனரா பேகம்' (23.3.1614 - 16.9.1681) இவர்தான் தனது தாய் மரணத்திற்கு பிறகு ஷாஜகானுக்கு மிகவும் விருப்பமான மகள்.
மூன்றாவது மகன் 'தாராஹ் சுகோஹ்' ( 20.3.1615 - 30.8.1659). அடுத்து நான்காவது மகன் 'ஷா ஷூஜா' ( 23.6.1616-7.2.1661) அடுத்து ஐந்தாவது பெண் 'ரோஷனரா பேகம்' (3.9.1617- 11.9.1671). தனது அக்கா ஜனஹராவுக்கு பிறகு பவர்ஃபுல் லேடியாக விளங்கியவர் இவர்.
அடுத்து ஆறாவதாக 'அவுரங்கசீப்' பிறக்கிறார் (3.11.1618- 3.3.1707) இவர் தன் தந்தை நோய்வாய்ப்பட்டவுடன் அவரை ஓரம்கட்டிவிட்டு அரியணைக்கு ஏறினார். அதன் பின்னர்தான் கதை ஆரம்பிக்குது பாருங்க.
ஏழாவது குழந்தை - மகன் 'இசாத் பக்ஷ்' (18.12.1619- 1621) ஒரு வயது முடிந்திருக்கும் சூழ்நிலையில் நோய் வந்து இறந்துவிட்டார். எட்டாவது 'சுரய்யா பானு பேகம்' என்ற பெண் சிசு பிறந்து ஏழு வருடங்கள் வாழ்த்து பெரியம்மை வந்து இறக்கிறாள். ஒன்பதாவது - பெயரிடப்படாத ஆண் மகவு. பிறந்தவுடன் இறக்கிறது.
பத்தாவது பிறந்த 'முரத் பக்ஷ்' 1624ம் ஆண்டு பிறக்கிறார். 1661ம் ஆண்டு தனது அண்ணன் அரசர் அவுரங்கசிப் ஏதோ காரணத்தால் இவரை கொன்றுவிட ஆணையிடுகிறார்.(என்ன காரணமோ தெரியல). 11 வது மகன் 'லுஃப்த் அல்லாஹ்' - ஒன்றரை வயதில் நோய்வாய்ப்பட்டு இறக்கிறான். 12வது பெண் குழந்தை 'தவுலத் அஃப்சா' தனது 1 வயதுக்குள் நோய் வந்து இறக்கிறாள். 13வது 'ஹுசன் அரா பேகம்'. இவளும் தனது ஒரு வயதை தாண்டாமல் நோய் வந்து சாகிறாள்
14வதும் கடைசியுமான பிரசவத்தில் 'கவுஹர் அரா பேகம்' எனும் பெண் குழந்தையை பெற்று போட்டு விட்டு தாய் இறக்கிறாள். இவ்வளவு தாங்க கதை.

யோசிச்சு பாருங்க, 14 குழந்தைகளில் அஞ்சு குழந்தைகள் ஒரு வயதை தாண்டல. 2 குழந்தை பத்து வயச தாண்டல. இப்படிதான் நமது முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். பெண்களை குழந்தை பெற்றெடுக்கும் இயந்திரமாக மட்டுமே பாவித்து வந்தனர். ஒரு பெண்ணிற்கு அதற்கு மேல் என்ன வேலை என்று கேட்கிறீர்களா? ப்ளீஸ் டேக் டைவர்சன்.
அந்த காலத்தில் ஷாஜகானே நினைத்திருந்தாலும் தனது மனைவியை பிழைக்க வைப்பது சிரமம்தான். அத்தனை சிகிச்சை முறைகள் அப்போது கிடையாது. மும்தாஜுக்கும் அவரது அரண்மனையில் வைத்து மரபு வழி பிரசவம் தான் பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அனீமியாவை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வசதிகள் கிடையாது. ரத்தம் ஏற்ற முடியாது. ரத்த போக்கை தடுக்க முடியாது. தடுப்பூசி கிடையாது. எந்த உயிர்க்கொல்லி நோயையும் தடுக்க முடியாது. நோய் வந்தால் அரசன் ஆண்டி இருவரும் ஒன்று தான். இன்று ஏழை பணக்காரன் பாகுபாடின்றி அரசு அனைவருக்கும் இலவசமாக மகப்பேறு சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளை வழங்கிவருகிறது.
இதன் வழியாக நாம் அறிவது மருத்துவமனை பிரசவமே பாதுகாப்பானது. தாயின் வயது கூடக்கூட பிரசவத்தின் போது தாய் சேய் மரணம் நிகழ வாய்ப்பு அதிகம். அதேபோல கர்ப்பத்தின் எண்ணிக்கை கூடக்கூட பிரசவத்தின் போது பிரச்சனை வரும் வாய்ப்பு அதிகம். பிரசவத்தின் போது ஏற்படும் உடனடி பிரச்சனைகளை கண்டறிந்து உயிர் காக்கும் சிகிச்சைகளை மருத்துவமனைகளில் மட்டுமே செய்ய முடியும் என்பதுதான்" என்று கூறியுள்ளார்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications