பழனி ரூ 100 கோடி நில மோசடி! ரிஜிஸ்டர் ஆபிஸுக்கு சென்றவர்கள் யார் யார்? சிசிடிவியில் தேடும் சிபிசிஐடி

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: பழனி மலையடிவாரத்தில் ரூ 100 கோடி நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் யாரெல்லாம் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்தவர்கள் யார் யார் என சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளது.

tamil nadu palani

இந்த விசாரணையில் கடந்த ஜூலை 6ஆம் தேதி பழனி சார்பதிவாளர் ஈஸ்வரி திடீரென விடுப்பில் சென்றுள்ளார். அவருக்கு பதிலாக கொடைக்கானல் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணிக்கு வரவழைக்கப்பட்டு அன்றைய தினமே இந்த பத்திரப்பதிவு நடைபெற்றது ஏன்?

ஒரே ஒரு நாள் விடுப்பில் ஈஸ்வரி சென்றதற்கான காரணம் என்ன? ஒரு நாள் விடுப்பில் சென்றதற்கு எதற்காக மாற்று சார்பதிவாளர் வரவழைக்கப்பட்டார்? என்ற கேள்வியை சிபிசிஐடி போலீஸார் எழுப்பியுள்ளனர்.

பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்ற சிபிசிஐடி போலீஸார் அங்கிருக்கும் சிசிடிவியை ஆய்வு செய்து வருகிறார்கள். அதாவது பத்திரப்பதிவு நடந்த போது அந்த பழனி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு யாரெல்லாம் வந்தனர்.

நிலத்தை விற்றதாக சொல்லப்படும் கோயில் அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் சுவாமிகள், நிலத்தை வாங்கிய வெள்ளதுரை, சேதுபதி ஆகியோருடன் யாரெல்லாம் வந்தார்கள்? உள்ளிட்டவைகளை போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

பத்திரப்பதிவு அலுவலகத்தில் இந்த ரூ 100 கோடி நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட போது மாற்று பணிக்காக வந்த சார் பதிவாளர் ஹஸ்டினை யாரெல்லாம் சந்தித்தார்கள் என்பதையும் போலீஸார் ஆய்வு செய்கிறார்கள்.

அது போல் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ 100 கோடி நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கில் யாருக்கெல்லாம் சம்பந்தம் இருக்கிறதோ அவர்களுக்கு சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைக்க சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து திமுக வழக்கறிஞர் பரந்தாமன் கூறியிருப்பதாவது: அப்போது அவர் கூறுகையில் பழனியில் ரூ 100 கோடி நிலமோசடியில் பினாமி பெயரில் பணபரிமாற்றம் நடந்துள்ளது.

ரூ 100 கோடி நில மோசடி வழக்கில் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க அமைச்சர்கள் முயற்சி செய்கிறார்கள். இந்த ரூ 100 கோடி மோசடியில் பத்திரப்பதிவில் சதி வலையில் இருந்தவர்கள் யார் யார்?

கோயில் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ய முடியாது என சார்பதிவாளர் பாலகிருஷ்ணன் விடுப்பில் சென்றுவிட்டார். அவருக்கு பதில் சத்திரபட்டி, கீரனூரில் உள்ள சார்பதிவாளர்களை பழனி அலுவலகத்தில் டூட்டிக்கு அழைக்காமல் 60 கி.மீ. தூரத்தில் கொடைக்கானலில் இருந்து சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை அழைத்தது ஏன்?

பழனி நில முறைகேடு தொர்பாக அமைச்சர்கள் ரமேஷ், லோகேஷ் இடையே முரண்பட்ட கருத்துகள் உள்ளன. அது போல் அமைச்சர்கள் இருவரும் ஒவ்வொரு கருத்தை சொன்னால் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் மாற்றுக் கருத்தை சொல்கிறார்.

ஒரே ஒரு நாள் டூட்டிக்கு வந்த சார் பதிவாளர் ஜஸ்டின் அவசர அவசரமாக ரூ 100 கோடி பத்திரப்பதிவை செய்தது ஏன்? அந்த சார்பதிவாளர் ஜஸ்டின் பத்திரப்பதிவுக்கான அலுவலர் இல்லை என்கிறார்கள்.

கோயில் நிலம் என தெரியாமல் பத்திரப்பதிவு செய்துவிட்டதாக அமைச்சர் கூறுகிறார், பொதுவாக கோயில் நிலம், அரசாங்க நிலம் என பட்டியல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருக்கும். இவ்வாறு பரந்தாமன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+