அடிக்கடி பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிக்கிறீங்களா? முதலில் இதை படிங்க.. வெளியான ஷாக் ஆய்வு
சென்னை: பயணத்தின் போதோ, அலுவலகங்களுக்கோ பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை கொண்டு சென்று குடிக்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு உள்ளது. இப்படி பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதன் மூலம் பிளாஸ்டிக் நுண்துகள்கள் உடலின் ரத்த ஓட்டத்தில் கலந்து உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வழிவகுக்கும் என்ற அதிர்ச்சிகர ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
இன்றைய கால கட்டத்தில் புவி மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதில் முக்கிய பங்கு வகிப்பது பிளாஸ்டிக்தான். உணவு பொட்டலங்கள் முதல் குடி தண்ணீர் வரை அனைத்துமே தற்போது பிளாஸ்டிக் பொருட்களில் தான் அதிகம் கிடைப்பதை பார்க்க முடிகிறது. நீர் நிலைகள், அடர்ந்த வனங்களில் கூட பிளாஸ்டிக் பொருட்கள் சென்று சேர்ந்துவிட்டன.

பிளாஸ்டிக் பொருட்கள்: இப்படி பிளாஸ்டிக் சூழ் உலகில் தான் இன்றைய உலகம் இயங்கி கொண்டு இருக்கிறது என சொன்னால் மிகையல்ல. பிளாஸ்டிக் பொருட்களில் உணவு பொருட்களை வைத்து சாப்பிடுவதன் வாயிலாக மைக்ரோபிளாஸ்டிக்குகள் மனிதனின் ரத்தத்தில் கலந்து இருப்பதாக பல்வேறு ஆய்வு முடிவுகளும் வெளியாகி அதிரவைத்தது மைக்ரோபிளாஸ்டிக்குகள் மனிதனின் உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்க கூடியது ஆகும்.
ரத்த அழுத்தம் அதிகரிக்கும்: இருதய பாதிப்பு, ஹார்மோன் பிரச்சினைகள், புற்று நோய் கூட பாதிக்கலாம் என்று அதிர்ச்சிகர தகவல் வெளியானது. இந்த நிலையில், பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் உடலில் ரத்த அழுத்த அதிகரிக்க கூடும் என்று அதிர்ச்சிகர ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் செல்வதன் மூலம், ரத்த அழுத்தம் உயரலாம் என்ற புதிய ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் ஜர்னல் என்ற இதழில் இந்த ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
மருந்தக துறை ஆய்வு: ஆஸ்திரியாவில் உள்ள டன்பே தனியார் பல்கலைக்கழகத்தில் உள்ள மருந்தக துறை இந்த ஆய்வை நடத்தியுள்ளது. பிளாஸ்டிக் பாட்டில் எதிலும் அடைக்காத தண்ணீரை ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு ரத்த அழுத்த அளவு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது கண்டறியப்பட்டது. பிளாஸ்டிக் நுகர்வு குறையும் பட்சத்தில் ரத்த அழுத்த அளவு குறைவதையும் கண்டுபிடித்தனர்.
5 கிராம் மைக்ரோ பிளாஸ்டிக்: இதன் மூலம் ரத்த ஓட்டத்தில் பிளாஸ்டிக் துகள்கள் கலப்பது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும் என்பதை இந்த ஆய்வின் மூலம் அனுமானித்துள்ளனர். எனவே பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களை கூடுமானவரை தவிர்க்க வேண்டும் என்பதே இந்த ஆய்வின் பரிந்துரை முடிவாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக, சராசரியாக ஒரு மனிதன் 5 கிராம் அளவுக்கு மைக்ரோபிளாஸ்டிக்குகளை உட்கொள்வதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
கொதிக்க வைத்த தண்ணீர்: மைக்ரோ பிளாஸ்டிக் உடலில் செல்வதை தவிர்க்க நீரை கொதிக்க வைப்பது, குழாய் நீரை வடிகட்டி குடிப்பது போன்றவற்றை பின்பற்றலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த முறையை பின்பற்றினால் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் மற்றும் நானோ பிளாஸ்டிக்ஸ்களை கிட்டத்தட்ட 90 சதவிகிதம் குறைக்கலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications