மீனு மிரட்டுதே.. "இதை" மட்டும் மறந்தும் செய்துடாதீங்க.. ஆசை ஆசையா சாப்பிட்டோமே.. இதுல இவ்ளோ இருக்கா
சென்னை: சிக்கன் பரோட்டா சாப்பிடுவது நல்லதா? கீரையும் தயிரும் சேர்த்து சாப்பிடுவது நல்லதா? என்ற சில இயல்பான சந்தேகங்கள் அவ்வப்போது இணையத்தில் வட்டமடித்து கொண்டேயிருக்கின்றன.
நாம் சமைக்கும்போது சில விஷயங்களை, நமக்கே தெரியாமல் செய்து கொண்டிருக்கிறோம்.. முக்கியமாக அசைவ உணவுகளுடன், சில உணவையும் மிக்ஸ் சேர்த்து சாப்பிடும்போது நிறைய உபாதைகள் வந்துவிடும் என்பதால்தான், அவைகளை சேர்த்து சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.
மீன் + கீரை: குறிப்பாக, தயிர் + மீன் இவைகளையும் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பார்கள்.. செரிமானத்தை மந்தப்படுத்தும் தன்மை தயிருக்கு உண்டு...

அப்படிப்பட்ட தயிரை, சத்து அதிகமான மீனுடன் சேர்த்து சாப்பிடும்போது செரிமானம் மேலும் மந்தமடையும்.. இதனால் சத்துக்கள் எதுவும் நமக்கு முழுமையாக கிடைக்காமலேயே போய்விடும்.. மீன், தயிர் இரண்டையும் தனித்தனியாக சாப்பிட்டால், மொத்த சத்துக்களும் நமக்கு வீணாகாமல் கிடைக்குமாம்.
தயிர் + கீரையும் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பார்கள்.. சிலர் தயிர் + கருவாடு சேர்த்து சாப்பிடுவார்கள்.. மாம்பழம் + தயிரும் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பார்கள். இதெல்லாம் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தி, அஜீரணத்தை கொண்டுவந்துவிடும்.
சிக்கன், மட்டன்: அதேபோல, சிக்கன் அல்லது மட்டனில், முள்ளங்கி சேர்த்து சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.. காரணம், முள்ளங்கி மற்றும் இறைச்சியில் உள்ள புரத ஊட்டச்சத்து அதிகரிப்பதால், உற்பத்தியாகும் ரத்தம் நச்சுத்தன்மை உடையதாக மாற வாய்ப்புண்டாம்.. சிலர் மட்டன் அல்லது சிக்கன் குழம்புகளில் உருளைக்கிழங்கு சேர்த்து சமைப்பார்கள். தேங்காய் அரைத்து விட்டு, குர்மாவும் செய்வார்கள்.
பொதுவாகவே, கிழங்குகள் செரிமானம் ஆக நேரம் எடுக்கும்.. இறைச்சியும் செரிமானம் ஆக நேரம் எடுத்துக்கொள்ளும்.. இதனால், நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, வாயுத்தொல்லை ஏற்பட்டுவிட வாய்ப்புள்ளதாம்.. உடலும் எடை கூடிவிடும் என்பதால், இந்த காம்பினேஷனை தவிர்க்க சொல்கிறார்கள்.
மைதா பரோட்டா: இதில் மைதாவையும் சேர்த்து கொள்ளலாம்.. பரோட்டா + சிக்கன் காம்பினேஷனில் சாப்பிடுபவர்கள் அதிகம்.. மைதாவுக்கு செரிமான சக்தி குறைவு.. மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும் என்பதால், அசைவத்துடன் சேர்க்க வேண்டாம் என்கிறார்கள்.. எப்படி பார்த்தாலும், இரவு வேளைகளில் இறைச்சி உணவை தவிர்க்க வேண்டுமாம்.. அதேபோல, முதல் நாள் செய்த இறைச்சியை ப்ரிட்ஜில் வைத்து மறுநாள் பயன்படுத்தக்கூடாது.. முதல் நாள் சமைத்த அசைவ உணவை மறுநாள் சூடு செய்து சாப்பிடக் கூடாது என்கிறார்கள்..
இதைவிட முக்கியமாக, பிரியாணிக்கு வைக்கப்படும் தயிர் வெங்காயமும் கூட தவறுதான் என்கிறார்கள் டாக்டர்கள்.. காரணம், தயிர் குளிர்ச்சியை தரக்கூடியது, வெங்காயம் சூட்டை கிளப்பிவிடக்கூடியது.. எதிரெதிர் குணங்களை கொண்டதால், இவைகளை சேர்த்து சாப்பிடுவது அஜீரணத்தை தருமாம். அசைவத்துடன் வெறும் வெங்காயம் சேர்த்து சாப்பிடலாம். ஆனால், தயிரோடு கலந்து சாப்பிடக்கூடாது..
மருத்துவர்கள் ஆலோசனை: அசைவத்துடன் சில பொருட்களை சேர்த்து சமைக்கக்கூடாது என்பதற்கு காரணம், சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், உடல் உபாதைகள் வரக்கூடாது என்பதற்காகவும்தான். எனவே, மருத்துவர்களிடம் இதுபற்றிய சந்தேகங்களை நாம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால், அசைவம் சாப்பிட்ட பிறகு, எலுமிச்சம் பழச்சாறு அல்லது சுடுதண்ணீர் அல்லது சோம்பு தண்ணீர் அருந்துவது ரொம்பவே நல்லது.












Click it and Unblock the Notifications