கெட்ட கொழுப்பை கரைக்க உதவும் பால்.. அடிவயிறு கொழுப்பு, ஹை கொலஸ்ட்ரால் சர்ரென குறைய வெற்றிலை போதுமே
சென்னை: கொலஸ்ட்ரால் என்பது என்ன? அதிக கொலஸ்ட்ராலை அறிய உதவும் அறிகுறிகள் என்னென்ன? கொலஸ்ட்ராலை குறைக்க ஆரோக்கியமான வழிகள் உள்ளன.. குறிப்பாக உணவு முறைகளில் மாற்றம் கொண்டுவருவதால், இதற்கு தீர்வு காண முடியும். அந்தவகையில், வெற்றிலை மற்றும் கழுதைப்பால் எந்த அளவுக்கு கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகின்றன என்பதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
உடலில் கொழுப்புகள் ஆங்காங்கே சேர்ந்து தேங்கிவிடும்.. இந்த கட்டிகள் எல்லாம் கொழுப்பு சேர்ம கட்டிகளாகும்.. இந்த கட்டிகள் தோலில் வெளிப்படும்.. மஞ்சள் கலரில் புடைத்து கொழுப்பு போல தென்படும். சில நேரங்களில் கண்களின் ஓரத்தில் புடைப்புகள் தோலை ஒட்டி வளரும். சில சமயம் உள்ளங்கைகளில் கோடு போல தோன்றும். சிலசமயம் கால்களிலும் வளரும்.

கால்கள் மரத்துவிடும்
இப்படி சருமத்தில் வளர்ந்துவிடுவதால், உடலுக்கு தேவையான ரத்த ஓட்டம் கிடைக்காமல், கால், பாதங்களின் நிறம் மாறிவிடும்.. அல்லது கால்கள் மரத்துவிடும். தொடை, கால் விரல்களில் பிடிப்புகள், வலிகள், விறைப்பு தன்மை வரலாம்.
எனவே, உடலில் எங்கு கொழுப்பு அறிகுறி தென்பட்டாலும், உடனடியாக மருத்துவரை சந்தித்து, முறையான டெஸ்ட்களை எடுத்து கொள்ள வேண்டும். அதிக கொழுப்பு என்பது 240 மி.கி/ என்றும், மிதமான அளவு கொழுப்பு என்பது - 200 -239 மி.கிராம் அளவு என்றும், இயல்பான கொழுப்பு - 200 மி.கிராம் என்றும் கருதப்படுகிறது.
கொழுப்பு அறிகுறிகள்
கல்லீரலை உருவாக்கும் கொழுப்பு படிமமே கொலஸ்ட்ரால் எனப்படுகிறது.. ஆரோக்கியத்துக்கு ஓரளவு கொலஸ்ட்ரால் அவசியம் என்றாலும், இதில் கெட்ட கொலஸ்ட்ராலும் சேர்ந்துவிடுவதால்தான் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பயங்கள் நேரிடுகின்றன.
LDL என்ற குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டின்கள் என்ற கொலஸ்ட்ரால், இதயநோய், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம் போன்ற அபாயத்தை அதிகரிக்க செய்யும் கெட்ட கொழுப்பாகும். HDL என்ற உயர் அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டின்கள் நல்ல கொழுப்பாகும்.. இது ஹார்ட் அட்டாக், பக்கவாதம் அபாயத்தை குறைக்கக்கூடியது.
வெற்றிலை உதவும்
உடம்பில் கொலஸ்ட்ரால் அதிகமாக சேராமல் இருக்க உணவில் கவனம் செலுத்த வேண்டும்.. அதேபோல வெற்றிலையுடன் மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டு வருவதால் கொழுப்பு கரையும்.. 1 கொழுந்து வெற்றிலையில், 5 கருப்பு மிளகு சேர்த்து அதை உருட்டி, மென்று சாப்பிட்டால் போதும்.
வெற்றிலையிலுள்ள வைட்டமின் C, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், கரோட்டின், கால்சியம் வைட்டமின்கள், இரும்புச்சத்து நிறைந்துள்ளன. கொழுப்பை கரைக்கும் தன்மையும், ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மையும் மிளகுக்கு உண்டு என்பதால், ஆயுர்வேதத்தின்படி, வெற்றிலையும், மிளகும் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க பேருதவி புரிகின்றன.
தேவையற்ற கொழுப்புகள்
அதேபோல, உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை கரைப்பதில், கழுதைப்பாலுக்கு நிறைய பங்கு உண்டு.. இந்த கழுதை பாலில், நிறைய கலோரி, கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, கால்சியம், ரிபோபிளேவின், வைட்டமின் E, A, C, B1, B6, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் அடங்கியிருக்கின்றன.
மாட்டுப்பாலைவிட, கழுதை பாலில் ஆக்ஸிஜன் திறன் அதிகம்.. முக்கியமாக, கழுதை பால் மிக குறைந்த அளவு கொழுப்பை கொண்டது.. 100 கிராம் கழுதை பாலில் 8.6 மி.கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளது. அதுமட்டுமல்ல, லினோலிக் என்ற அமிலம், உடல் எடை குறைவதில் உதவி செய்வதால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் எளிதாக கரைகின்றன.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications