ஒவ்வொரு தமிழர்களும் அறிய வேண்டியது.. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருக்கும் அற்புதம்
சென்னை திருவல்லிக்கேணி அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரர் பல்நோக்கு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் முழு உடல் பரிசோதனை மையத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை 48900 பேர் மருத்துவ பரிசோதனையால் பயன் அடைந்துள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணி அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரர் பல்நோக்கு மருத்துவனையில் செயல்பட்டு வரும் முழு உடல் பரிசோதனை மையத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை 48900 பேர் மருத்துவ பரிசோதனையால் பயன் அடைந்துள்ளனர்.

ஓமந்தூராரர் பல்நோக்கு மருத்துவமனையில் சுமார் ரூ.110 கோடி மதிப்பீட்டில் முழு உடல் பரிசோதனை மையம் கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி தொடங்கப்பட்டது.
கோல்டு, டைமண்ட், பிளாட்டினம் பிளஸ் என 4 வகை பரிசோதனைகள் முறையே ரூ.1000, ரூ.2000, ரூ.3000, ரூ.4000க்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரத்த பரிசோதனை, சிறுநீரகம், ரத்தக் கொழுப்பு, கல்லீரல்,இசிஜி, அல்டரா சவுண்ட், தைராய்டு, ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம், எலும்பு திண்மம், கண் பரிசோதனை, நுரையீரல் செயல்பாடு மற்றும் இதய செயல்பாட்டைக் கண்டறியும் டிரெட்மில் பரிசோதனைகள் என 100க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நாட்டிலேயே வேறு எந்த அரசு மருத்துவனையிலும் இல்லாத வகையில் அதி நவீன கட்டமைப்புடன் இந்தப் பரிசோதனை மையம் அமைந்திருப்பதால், அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு காணப்படுகிறது.
இதுவரை 1800 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனைகள், 9 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு டிரெட் மில் பரிசோதனைகள் என மொத்தம் 48 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக தமிழகத்திலேயே முதன் முறையாக கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை அறியும் பரிசோதனைத் திட்டங்கள் கர்ப்பிணிகளுக்காக பிரத்யேகமாக கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
ரூ.1000 மற்றும் ரூ.2000 ஆகிய இரு வகையான பரிசோதனைகள் அதன் கீழ் வழங்கப்படுகின்றன. இதுவரை 400க்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்டு பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறும் போது, ஓமந்தூரர் மருத்துவமனையின் முழு உடல் பரிசோதனை மையத்துக்கு தொடக்கத்திலிருந்தே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களுக்கு இங்கு தரமான மருத்துவ சேவை வழங்கப்படுவதே இதற்கு காரணம்,. தனியார் மருத்துவமனையில் கூட இல்லாத சில உயர் மருத்துவ உபகரணங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது அடுத்தகட்டமாக கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அறிவதற்கான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உபகரணங்கள் மற்றும் மரபணு பரிசோதனைக்கான அனலைசர் பகுப்பாய்வு சாதனம் ஆகியவை 1.50 கோடி செலவில் கொள்முதல் செய்யப்பபட்டு அதுவும் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது என்று அதிகாரிகள் கூறினார்கள்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications