"வாழையிலை" விருந்து.. ஒரே ஒரு இலையில்.. ஒளிந்திருக்கும் ஓராயிரம் ஆச்சரியம்.. தலைவாழை + இலை = வாழ்க்கை
சென்னை: தமிழ்நாட்டு பாரம்பரியத்திலும், விருந்தோம்பலிலும், இன்றுவரை அதே முன்னணி இடத்தை 'வாழையிலை' வகித்து கொண்டிருக்கிறது. அப்படியென்ன வாழையிலையின் ஸ்பெஷாலிட்டி?
வாழை இலையை விரித்து, தண்ணீர் தெளித்து, ஒரு ஓரத்தில் உப்பை வைத்து, அதற்கு பிறகு ஒவ்வொரு உணவுப்பொருளையும் பரிமாறுவார்கள்.. ஆனால், வாழையிலையில் எப்படி உணவு பரிமாற வேண்டும் என்று சித்த மருத்துவத்திலேயே விரிவாக தரப்பட்டுள்ளதாம்.
சித்த மருத்துவம்: எப்படி பரிமாறுவது, பிறகு, அதை எந்த வரிசையில் உட்கொள்வது என்பது குறித்தும், அதன் உன்னதம் குறித்தும் சித்த மருத்துவத்தில் அன்றைய காலத்திலேயே சொல்லப்பட்டுள்ளதாம்.

முதலில் நுனி இலையிலிருந்து உப்பு, சட்டினி, ஊறுகாய், பச்சடி, காய்கறி, வடகம், வடை, சித்திரான்னம், அப்பளம், போன்றவற்றை பரிமாற வேண்டும்.. அதன் பக்கத்திலேயே மூன்று வாழை இலை தொன்னைகளில், தனித்தனியே கூட்டு, ரசம், குழம்புகளை ஊற்றி, பனியாரம், பாயாசம் வைத்து இறுதியாக, சோறும் அதன் அருகில் மற்றொரு தொன்னையில் நெய்யும் வைத்து உபசரிக்க வேண்டுமாம். வாழையிலையில் உண்பதால் ஆயுள் கூடும் என்கிறார்கள்.. எப்படி தெரியுமா?
குடற்புண்கள்: வாழையிலையில், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் செம்பு சத்துக்கள் உள்ளன.. இவைகள் கண்களை பாதுகாத்து, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.. வைட்டமின் ஏ.சி, மற்றும் கே விட்டமின்கள் குடற்புண்களை ஆற்றும்.. ஆல்வான்பியின் கிருமிகளை அழிக்கும் பீனால், ரத்தம் உறைவதைத் தடுக்கும்.. சாலிசிலிக் அமிலம் புற்றுநோய் காரணிகளை அழிக்கும்.. இத்தனையும் வாழை இலையின் மேல்புறத்தில் உள்ள குளோரோபில் என்னும் பொருளுடன் பின்னி பிணைந்துள்ளன.
நீரை தெளித்து வாழை இலையை கழுவி, அதன் மேல் நெய்யை தடவி, இலையில் சூடான உணவுகளை வைக்கும் போது, இலையில் சத்துக்களெல்லாம் குளோரோபில்லுடன் கரைந்து, உணவுடன் கலந்து விடுகின்றன. இதெல்லாம் சேர்ந்துதான் நமக்கும் ஆயுளை கூட்டுகிறது.
பச்சையம்: சூடான சாப்பாட்டை வாழை இலையில் பரிமாறும்போது அந்த சூட்டில் இலை லேசாக வெந்து இலையின் பச்சையத்தில் உள்ள பாலிபீனால் சாப்பாட்டில் கலந்து விடும். இதன் மூலம் அதில் உள்ள விட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்சியம் மற்றும் கரோட்டின் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன. வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும்.
வயிற்று புண்ணை குணமாக்கும் வாழை இலையின் குளோரோபில் செல்கள் நீண்ட காலம் அழியாமல் இருக்கக் கூடியவையாம்.. அதுமட்டுமல்லாமல், வாய், இரைப்பை, சிறுகுடல் போன்ற பகுதிகளில் உள்ள என்சைம்கள் மற்றும் செரிமான செல்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு பேருதவி புரிகின்றன..
வாழைத்தண்டு: வாழை இலையில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிக அளவில் இருக்கிறது. இதனால் உடலின் செல் சிதைவு ஏற்படாமல் இளமையுடன் இருக்க முடியும். மன அழுத்தம், புற்றுநோய் மற்றும் இதய நோய்களும் இதனால், தடுக்கப்படுகின்றன. சிறுநீரகக் கல்லுக்கு வாழைத்தண்டு சாறு உகந்தது என்பது போல, வாழை இலையும் சிறுநீரகம் மற்றும் விதைப்பை தொடர்புடைய பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
அல்சர் நோயினால் ஏற்பட்ட வயிற்று புண்களையம் வாழை இலை துரிதமாக ஆற்றக்கூடியவை.,. சிறுகுடலில் தோன்றிய புண்களின் அழுகிய சதைகளை கரைத்து விட்டு, புதிய செல்களையும் தோற்றுவிக்கக்கூடியவை. அதனால்தான், நமக்கு நெருப்பில் சுட்ட புண்களை ஆற்றுவதற்காக, தீப்பட்ட இடத்தில் வாழை இலையைக் சுற்றுவது வழக்கமாக இருந்திருக்கிறது.
இன்றும்கூட, சமைத்த உணவில் ஏதாவது நஞ்சு இருந்தால் அதை வாழை இலை நீக்கிவிடும்.. அதனால்தான், பாம்பு கடித்தால் முதலுதவியாக வாழையின் மட்டையில் இருந்து சாறு பிழிந்துதான் தருவார்கள்... அதன் அடிக்கிழங்கில் இருந்து சுரக்கும் நீரைத்தருவார்கள்...
பாடையிலும் வாழை: அதனால்தான், பெருவாரியாக மக்கள் கூடும் கோயில் திருவிழாக்கள், கல்யாணங்கள், போன்ற இடங்களில் வாழைமரங்கள் முதலுதவிக்காக கட்டி வைப்பார்கள்.. உயிருக்கு ஆபத்தான நேரத்தில், மங்களகரம் என்று சொல்லி கட்டி வைக்கும் இந்த வாழைதான் உயிரை காப்பாற்றக்கூடியது. அவ்வளவு ஏன், இடுகாட்டுப் பாடையிலும்கூட வாழை மரம் கட்டி வைப்பார்கள்.
கெட்டுப்போன அல்லது விஷம் கலந்த உணவுகளை வாழை இலையில் வைத்தால், அந்த இலையின் மேற்புறத்தில் புதிய நிறத்தில் ஒரு வித நீர் உற்பத்தியாகி, இலையில் ஒட்டாமல் வடிந்து விடும்.. இதைவைத்தே உணவின் விஷத்தன்மையை அறிந்து கொள்ளலாம்.. அதனால்தான், விருந்துக்கு எதிரியே அழைத்தாலும் தலை வாழை இலையில் தைரியமாக சாப்பிடலாம் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.
அறுபட்ட இலை: வாழை இலை அறுபட்டபிறகும்கூட, எப்போதுமே குளிர்ச்சியாக இருக்கும்.. அதாவது வாழை இலை ஆக்சிஜனை வெளியிட்டுக்கொண்டே இருக்கும்... வாழை இலையில் வைக்கப்படும் கீரைகள், காய்கள், பழங்கள், பூக்கள் போன்றவை விரைவில் வாடாது... பூக்கடைகளில் கட்டிய பூ வாங்கினால்கூட, அதை வாழை இலையில் தான் கட்டித்தருவார்கள்.. ஆகமொத்தம், இந்த வாழை என்றுமே நம்மை வாழையடி வாழையாக வாழ வைக்கும்..!!












Click it and Unblock the Notifications