இரவில் 1 டீஸ்பூன் நெய்யை இப்படி சாப்பிடுங்க.. காலையில் வெறும் வயிற்றில் நெய் தரும் பலன்களை பாருங்க
சென்னை: நெய் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பார்கள்.. ஆனால், வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? அதிலும், இரவு தூங்கும் முன்பு 1 டீஸ்பூன் நெய்யை பாலுடன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? நெய்யில் உள்ள சத்துக்கள், அதனால் உடலுக்கு கிடைக்கும் பலன்கள் போன்றவற்றை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டுவிட்டு, ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.. அதற்கு பிறகு, 30 நிமிடங்களுக்கு வேறு எந்த உணவையும் சாப்பிடக் கூடாது. இதனால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா?

உடல் எடை குறையும்
இயற்கையான அமினோ அமிலங்கள் நிறைந்த நெய்யில், ஒமேகா 3, ஒமேகா கொழுப்பு அமிலங்களும் உள்ளன.. இதனால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பை இந்த நெய் குறைக்க செய்கிறது.. அதனால், வெயிட் குறைக்க நினைப்பவர்கள், தாராளமாக, வெறும் வயிற்றில் நெய்யை 1 ஸ்பூன் சாப்பிடலாம்..
அதாவது, 5 முதல் 10 மிலி நெய்யை, வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மெடபாலிக் அளவு அதிகரித்து, உடலுள்ள தேவையற்ற கொழுப்புகள் வெளியேறிவிடும். கலோரிகள் அளவுகள்இந்த கொழுப்பு வயிற்றை நீண்ட நேரம் நிரம்பியிருக்க செய்வதோடு, வயிறு நிரம்பிய உணர்வை அளித்து, உட்கொள்ளும் கலோரிகளின் அளவையும் குறைக்க உதவுகிறது. எனவே, பாலுடன் நெய் சேர்த்து குடித்து வந்தாலும் உடல் எடை குறையுமாம்.
ரத்த ஓட்டம் சீராகும்
நெய்யிலுள்ள ரசா என்ற சத்து, நம்முடைய செல்களை புத்துயிர் அடைய செய்வதுடன், ஆரோக்கியமும் காக்கப்படுகிறது.. இறந்த செல்களுக்கு, புத்துயிரை தருகிறது.. சொரியாஸிஸ் போன்ற தோல்நோய்களும் மட்டுப்படுகின்றன. வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால், மூளை சிறப்பாக செயல்படுகின்றன.. நரம்பு மண்டலங்களுக்கு புத்துணர்ச்சி கிடைத்து, அன்றைய தினம் சுறுசுறுப்புடன் செயல்பட தூண்டுகோலாகின்றன.
எலும்புகள் மூட்டுகள்
வெறும் வயிற்றில் நெய் சாப்பிடும்போது, எலும்புகளின் மூட்டுகளில் இயற்கையான திரவம் உற்பத்தியாகிறது.. இது மூட்டு வலி பிரச்சனைகளுக்கு நிவாரணமாக அமைகிறது..
அதுமட்டுமல்ல, உடலிலுள்ள புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும், எதிர்ப்பு சக்தி இந்த நெய்க்கு உள்ளது. எனவே, டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்று, வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டு பலன்களை பெறலாம்.
நெய்யில் உள்ள கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான A D, E, K உள்ளதால் சருமத்துக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.. அதுமட்டுமல்லாமல், இதிலுள்ள வைட்டமின் E ப்ரீ ராடிக்கல்களால் சருமத்தில் ஏற்படும் சேதத்தைத் தடுத்து நல்ல பாதுகாப்பை அளிக்கிறது.. தலைமுடி அதிகமாக கொட்டுபவர்கள், பலவீனமான தலைமுடி உள்ளவர்கள் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடலாம்.
இரவு நேரம் பாலில் நெய்
அதேபோல, இரவு தூங்கும் முன்பு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 1 டீஸ்பூன் நெய் கலந்து குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் பார்க்கலாம்..உடலிலுள்ள செரிமான மண்டலம் மேம்படும்...
ஏனென்றால், நெய்யில் உள்ள பியூட்ரிக் அமிலம், செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக செயல்பட ஊக்குவிக்கிறது. ஆய்வுகளின் படி, பியூட்ரிக் அமிலமானது செரிமான மண்டலத்தில் உள்ள வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது.
இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து கலந்து குடிக்கும்போது, நல்ல நிம்மதியான ஆழந்த தூக்கத்தை பெறலாம்.. காரணம், இவைகளில் ட்ரிப்டோபேன் என்ற அமினோ அமிலம் உள்ளதால், நல்ல தூக்கத்துக்கு வழிவகுக்கிறது..












Click it and Unblock the Notifications