முள்ளங்கியின் மகிமை.. கிட்னியில் கல் இருக்கா? இதயம் முதல் சருமம் வரை காக்கும்! சத்தான முள்ளங்கி கீரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: முள்ளங்கியில் மட்டுமல்ல, முள்ளங்கி கீரைகளிலும் ஏராளமான சத்துக்கள் உள்ளன.. அந்தவகையில், உடல் உறுப்புகள் பலம்பெறவும, சீராக இயங்கவும் இந்த முள்ளங்கி கிழங்குகள் எப்படி பயன்படுகின்றன? சர்க்கரை நோயாளிகள், கிட்னியில் கல் உள்ளவர்கள் முள்ளங்கியை எப்படி பயன்படுத்தலாம்? என்னென்ன பிரச்சனைகளுக்கு இந்த முள்ளங்கி கிழங்கு தீர்வு தருகிறது என்பதை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

வைட்டமின் C, A, B6, B12, ஃபோலேட், பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம் சத்துக்கள் கொண்டவை. கலோரி, புரதம், கொழுப்பு உள்ளிட்டவை மிகவும் குறைந்த முள்ளங்கியில் நார்ச்சத்து மட்டும் அதிகமாக உள்ளது.. அதனால்தான், சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த முள்ளங்கி தவிர்க்க முடியாத உணவாகிறது. இந்த கிழங்கை சாப்பிடுவதால், சர்க்கரை கட்டுக்குள் வருவதுடன், சிறுநீர்ப்பெருக்கியாகவும் செயல்படுகிறது.

Radish Mullangi Raddish Leaves

ரத்த நாள சுவர்கள்

நார்ச்சத்து அதிகம் என்பதால், குடல் ஆரோக்கியம் சீராகிறது.. முள்ளங்கியின் சாற்றில் 30 மில்லி 2 வேளையும் தினந்தோறும் குடிக்கும்போது, சிறுநீரக கோளாறு நீங்கும். கல்லீரலில் உள்ள கழிவு, நச்சுக்களை நீக்குவதுடன், கல்லீரலில் உற்பத்தியாகும் பில்ருபின் உற்பத்தியை கட்டுப்படுத்தி கல்லீரலை காக்கிறது..

முள்ளங்கியிலுள்ள வைட்டமின் C, கொலாஜன் உற்பத்தியை பெருக்குவதால் சருமம் ஆரோக்கியமாகிறது. ரத்த நாள சுவர்கள் பலம் பெறுகின்றன. புற்றுநோயை உண்டாக்கும் மரபணு மாற்றங்களிலிருந்து, செல்களை பாதுகாக்கக்கூடிய சக்தியும், புற்றுநோய் செல்களாக இனி வளரக்கூடிய செல்களை அழிக்கும் சக்தியும் முள்ளங்கிக்கு அதிகம் இருக்கிறது.

சிவப்பு நிற முள்ளங்கி

சிவப்பு நிற முள்ளங்கியில் அந்தோசயினின்கள் அதிகமாக உள்ளதால் இதய நோய் ஆபத்து நீங்குகிறது.. எனவே, ரத்த அழுத்தம் உள்ளவர்களும், இதை சாப்பிடலாம். வைட்டமின் B சத்து இருப்பதால், எலும்புகளின் மஜ்ஜையிலுள்ள வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களை ஒருங்கிணைக்க செய்கிறது.. மேலும், DNA, RNAவை உருவாக்கும் செயல்முறைக்கும் அடிகோலுகிறது.

அதேபோல, முள்ளங்கியில் இருப்பதைவிட‌ ஆறு மடங்கு, வைட்டமின் C சத்துக்கள் முள்ளங்கியின் கீரையில் இருக்கிறதாம்.. எனவே, கல்லீரல், கிட்னி, நுரையீரல், இருதயம், கண், சருமம், எலும்புகள் என அத்தனை உறுப்புகளுமே சிறபபாக செயல்பட இந்த கீரைகள் உதவுகன்றன. இதய நோயாளிகள் வாரத்துக்கு ஒருமுறை இக்கீரையை சாப்பிட்டு வரவேண்டும். இதனால் சரும அலர்ஜி இருந்தாலும் நீங்கிவிடும். சுவாசப்பாதையில் தொற்று இருந்தாலும் விலகிவிடும்.

கர்ப்பிணிகள், தாய்மார்கள்

பெரும்பாலும், கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஏற்படும் முக்கிய பிரச்சனையே மலச்சிக்கல்தான்.. இதற்கு முள்ளங்கி மருந்தாகின்றன..

அதேபோல, நீரிழிவு நோயாளிகள், முள்ளங்கி இலையிலிருந்து சாறு எடுத்து அதில் வெந்தயத்தை ஊறவைத்து காயவைத்து தூள் செய்து, தினமும் இரு வேளை சாப்பிட்டால் குணமாகுமாம். கிட்னியில் கல் இருந்தாலும், இக்கீரையின் சாற்றை 6 ஸ்பூன் குடிக்கும்போது, கற்கள் வெளியேறும்.. உடம்பிலுள்ள கெட்ட கொழுப்பும் கரைந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+