வெறும் காலில் நடப்பது நல்லதா? செருப்பு அணியாமல் அரை மணி நேரம் போதுமே.. அடடே
சென்னை: செருப்பு இல்லாமல் வெளியே செல்லக்கூடாது என்பார்கள்.. உங்களை பாதுகாப்பாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பது செருப்புகள்தான்.. இதனால், தரையிலுள்ள அழுக்குகள் மட்டுமல்ல, கண்ணுக்கு தெரியாத கிருமிகளும் நம்மை அண்டாமல் இருக்கும்.. அத்துடன், கால்களை வறண்டு, வியர்வை இல்லாமல் வைத்திருக்கவும் செருப்புகள் உதவுகின்றன.. ஆனால், செருப்பின்றி வெறும் காலுடன் நடப்பதே சிறந்த ஆரோக்கியம் என்கிறார்கள்.
வெறுங்காலுடன் நடப்பதால் ஆயிரக்கணக்கான முதல் மில்லியன் கணக்கான தொற்றுகள் ஏற்பட்டுவிடும் என்பது உண்மைதான்.. கால்களை பாதுகாக்காவிட்டால் வெட்டுக்கள், விரிசல்கள், தொற்றுகள் என அனைத்துமே நம்மை நெருங்கிவிடும் என்பதை மறுப்பதற்கில்லை.

நேரமறை மின்சக்தி
நம்முடைய உடலை பொறுத்தவரை, நேர்மறை மின்சக்தி இயங்கிக் கொண்டே இருக்கிறது. ஆனால் பூமியில் எதிர்மறை மின்சக்தி உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், வெறுங்காலில் மண்ணில் காலை பதித்து நடக்கும்போது, மேற்கண்ட 2 சக்திகளும் சமநிலையை அடையும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இதனால், உடலில் பல நல்ல மாற்றங்களும் நிகழுமாம்.. குறிப்பாக, நரம்பு செயல்பாடு சீராகிறது, மன அழுத்தம் குறைகிறது, ரத்த அழுத்தமும் நிலையில் உள்ளது என்று அந்த ஆய்வுகளில் நிரூபணமாகி உள்ளது.
பாதத்தின் 5 விரல்களும், உடலிலுள்ள நரம்புகள், மூளை, இதயம் கிட்னி போன்ற முக்கிய உறுப்புகளுடன் நேரடியான தொடர்பு கொண்டவை.. எனவே, ஒவ்வொரு உறுப்புகளுக்கும் நேரடி ஆற்றலை பெற்றுத்தர முடியும்.
ஜாக்கிங் நல்லதா
வெறுங் காலில் நடப்பது மட்டுமல்ல, ஓடுவது அதாவது ஜாக்கிங் செய்வதுகூட, உடலிலுள்ள ரத்த ஓட்டத்துக்கு நன்மை தருகிறதாம். எவ்வளவு மன உளைச்சல் இருந்தாலும், தூக்கம் குறைபாடு இருந்தாலும், வெறும் காலில் நடப்பதால் அத்தனை குறைகளும் தீர்கின்றன. நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் நெருங்காது,.
அதிலும், கரடுமுரடான பகுதிகளில் வெறும் காலில் நடந்தால், பாதத்திற்கு ஒருவித அழுத்தம் கிடைத்து, உடலின் செயல்பாடுகளை ஊக்குவிக்க செய்கிறது.. இதனால் நரம்பு மண்டலமும் வலுப்படுகிறது. உள்ளங்கால்களில் படிந்திருக்கும் இறந்த சரும செல்களை அகற்றவும் வெறுங்காலில் நடப்பது உதவுகிறது.
அரை மணி நேரம் நன்மை
தினமும் அரை மணி நேரம் வெறும் காலில் நடந்தால், நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், உடலிலுள்ள நச்சுக்களும் நீங்கும் என்கிறார்கள்.
தற்போதைய சூழலில் சுகாதாரத்தையும் பேணி காக்க வேண்டியிருப்பதால், கரடு முரடு பாதை இல்லாவிட்டாலும், புல், மணல் மீது சிறிது நேரம் நடப்பது பெருத்த நன்மையை பெற்றுத்தருமாம்..
அதுமட்டுமல்ல, வெறுங்காலுடன் நடப்பது கால்களின் தசைகளை வலுப்பெற உதவி செய்வதுடன், நினைவாற்றலை அதிகரிக்க செய்வதாக ஆய்வு கூறுகிறது. மேலும், கணுக்கால், கால்கள், பாதங்களை துரிதமாக வேலை செய்ய தூண்டுகிறது..
யார் யார் தவிர்க்கலாம்
ஆனால், சர்க்கரை நோயாளிகள் வெறும் காலுடன் நடப்பதை தவிர்க்கலாம்.. ஏனென்றால், நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு கால்களில் குழிப்புண்கள், நீரிழிவு, நியூரோபதி போன்ற தொந்தரவுகள் வந்துவிடும் வாய்ப்புகள் உள்ளன.. எனவே வீட்டை விட்டு வெளியேறினாலே, பாதுகாப்பான செருப்புகளை அணிந்து செல்வதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும்.
அதேபோல, எளிதாக நோய்த் தொற்று பாதிப்பு உள்ளவர்கள், குதிகால்களில் வலி உடையவர்களும் வெறும் கால்களில் வெளியில் நடப்பதை தவிர்க்கலாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications