Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முத்துக்களோ பற்கள்..உங்க சிரிப்பு அழகோடு ஆரோக்கியமா இருக்கணுமா? இதை ஃபாலோ பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: முத்துப் போன்ற பற்கள் முகத்தை அழகாக்கும். பல் போனால் சொல் போச்சு என ஆதிகாலம் முதலே பேசி வருகிறார்கள். பற்கள் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்களும் நம்மை எட்டிப்பார்க்கும். ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவது சிரிப்பு தான். சிரிப்பு அழகாக இருந்தால் மட்டும் போதாது ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். ஆரோக்கியமான பற்களே அழகான புன்னகையை வெளிப்படுத்தும். ஒருவரின் வாய், நாக்கு பற்கள்தான் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றன. வாயையும், பற்களையும் ஆரோக்கியமாகப் பாதுகாத்தாலே போதும், பெரும்பாலான நோய்களுக்கு டாடா காட்டி விடலாம்.

முன்னோர்கள் பல் துலக்குவதற்கு சாம்பலையும் உப்பையும் பயன்படுத்தினார்கள். இதனால் வாய், பற்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப் பட்டது. இன்றைக்கு உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?கரி இருக்கா என்று கேட்டு நிமிடத்திற்கு ஒரு விளம்பரம் வெளியாகிறது. வாய் துர்நாற்றம் வயிற்றில் உள்ள பிரச்சினைகள், உணவுக்குழாயில் உள்ள பிரச்சினைகளை காட்டிக்கொடுத்து விடும். அல்சர் இருந்தாலும் பற்களில் உணவுத்துணுக்குகள் சிக்கியிருந்தாலும் வாய் துர்நாற்றம் வீசும். வாய் துர்நாற்றம், பற்களின் மீது படிந்துள்ள கறைகளை போக்க என்ன செய்வது என்ன செய்யக்கூடாது என்று பல் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Health news Tamil: Oral Hygiene Tips for for your white smile

ஒரு நாளைக்கு காலை மற்றும் இரவு என இருமுறை பல் துலக்குவது மிகவும் அவசியம். பற்கூச்சம் போன்ற பிரச்னை உள்ளவர்கள் சாஃப்ட் வகை டூத் பிரஷ்களையும், மற்றவர்கள் மீடியம் வகை பிரஷ்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும். பல் வரிசையின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று சுத்தம் செய்ய வசதியாக கைப்பிடி நன்றாக சௌகரியமாக இருக்க வேண்டும். அது மாதிரியான டூத் பிரஷ்களை மட்டுமே வாங்க வேண்டும். பல் துலக்கிய பிறகு ஈறுகளை மென்மையாக அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். நாக்கில் உள்ள பசையை அகற்ற வேண்டும்.60 முதல் 90 நாட்களுக்கு ஒரு முறை பிரஷை மாற்றுவது நல்லது.

என்னதான் பல் தேய்த்தாலும் சிலருக்கு பற்களில் மஞ்சள் கறை படியும். பற்கள் மஞ்சளாக காணப்படுவதற்கு வயது, பாரம்பரிய காரணிகள், முறையற்ற பல் பராமரிப்பு, அதிக அளவு டீ மற்றும் காபி குடிப்பது, புகை பிடிப்பது ஆகியவற்றை காரணமாக கூறலாம்.
பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்க இயற்கையான வழிகள் உள்ளன. பற்களை எலுமிச்சை சாறுடன் உப்பு கலந்து தேய்த்து வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறை படிப்படியாக நீங்கும். எலுமிச்சம் பழ தோலைக் கொண்டு பற்களை துலக்கி குளிர்ந்த நீரில் பற்களை கழுவினால் கறைகள் நீங்கி பிரகாசமாக தெரியும்.

இரவு உறங்கும் முன் ஆரஞ்சு தோலில் பற்களை தேய்த்து விட்டு வாயை கழுவாமல் படுத்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு தோலில் உள்ள வைட்டமின் சி சத்து பற்களில் உள்ள கறைகளை நீக்கி விடும். இயற்கையான கரும்பு, அன்னாசிப்பழம் போன்ற சில உணவுப் பொருட்கள் நம்முடைய பற்களை சுத்தம் செய்யும் தன்மைகொண்டது. அதிக அளவில் நார்ச் சத்து உள்ள பச்சைக் காய்கறி போன்ற உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது உடலுக்கும், பற்களுக்கும் ஆரோக்கியமானது. சாதாரண சாம்பலை பேஸ்ட்டுடன் சேர்த்து காலை, மாலை பல் துலக்குவதால், பற்களில் உள்ள கறை நீங்கி, வெண்மையாக காட்சியளிக்கும். உங்கள் பல் மருத்துவரை வருடத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு முறை சந்தியுங்கள். இது உங்கள் பற்களை சிறந்த முறையில் பாதுகாக்க உதவும்.

Health news Tamil: Oral Hygiene Tips for for your white smile

வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. உணவுத் துகள்கள் பல் இடுக்குகளில் மாட்டிக்கொண்டு வாய் கொப்பளிக்கும்போதோ அல்லது பல் துலக்கும்போதோ வெளியேறவில்லை என்றால் அழுகிப்போய் கெட்ட வாடை வீசலாம். தொண்டையில் நோய்த் தொற்று ஏற்பட்டு துர்நாற்றம் வீசலாம். ஈறு நோய், சொத்தைப் பல், வயிறு தொடர்பான பிரச்னைகளால் துர்நாற்றம் அடிக்கலாம். இதுபோன்று இன்னும் வேறு பல காரணங்கள் உள்ளன. வாயில் துர்நாற்றம் எதனால் வீசுகிறது என்பதைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை எடுத்தால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

ஆயில் புல்லிங் செய்வதால் பல் வலி, பற்கள் விழுதல், வாயில் நோய்த் தொற்று, ஈறுகளில் ரத்தக் கசிவு போன்ற பிரச்னைகள் நீங்குவதாகக் கூறப்படுகிறது. இயற்கையான நல்லெண்ணெயை வாயில் ஊற்றி 15 முதல் 20 நிமிடங்கள் கொப்பளித்த பிறகு அந்த எண்ணெயை வெளியே துப்பிவிட வேண்டும். பிறகு சுத்தமான நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். ஆயில் புல்லிங் செய்து முடித்த பிறகு பிரஷ் செய்வதும் வாயை நன்றாக சுத்தம் செய்தால் பற்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். உங்க பளிச் சிரிப்பை பார்த்து மயங்காதவர்களே இருக்க மாட்டார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+